Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!
  • அன்பு சேவுக!

    குருதேவர் வாழ்த்தும் நிலை

    அன்புச் சேவுக!

    “உன்னோடு உளம் திறந்த சிந்தை நிறைந்த அஞ்சல் வழித் தொடர்பு நிகழ்த்துவதில் பல நன்மைகள் விளைகின்றன.

    “முதலாவதாக என்னுள்ளே உள்ள தத்துவப் போராட்டங்கள், சித்தாந்தப் போராட்டங்கள், உலகியல் போராட்டங்கள், முரண்பாடுகளுக்குள் பிறக்கும் முரண்பாட்டுச் சிந்தனைப் போராட்டங்கள், திடீர் திடீரென்று எமது நினைவுக்கு வரும் எமது கேள்வியறிவுச் செய்தி, பட்டறிவுச் செய்தி, ஏட்டறிவுச் செய்தி, … முதலியவை உலகுக்குக் கூறப்பட்டேயாக வேண்டுமென்ற ஏக்கப் போராட்டங்கள்,…. முதலியவற்றின் வழிகளாக, அமைதி வழி முயற்சியாக அமைகின்றன யாமெழுதும் அஞ்சல்கள். …”

    அருளாட்சித் திட்டம்

    அன்புள்ள சேவுக!
    “….. எனது முன்னோர்களால் கட்டப்பட்ட எல்லாக் கோயில்களிலும்,

    • கருவறைக்கு மேல் பொற்கலயம் வைக்கவும்;
    • தாமரையும் அல்லியும் (பகலிரவு மலர்ந்த மலர் உள்ள தடாகமாக இருந்திடும்) நிறைந்த பளிங்கு போல் தெளிந்த நீருடைய பொய்கை எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;

    மேலும் படிக்க...


    குருதேவரின் வாழ்க்கை

    குருதேவரது உயரிய வாழ்க்கை வரலாறு

    அன்புள்ள சேவுக,

    “…. நான் என்னுடைய ஏட்டறிவும் பட்டறிவும், முயற்சியும், உழைப்பும் உயர்நோக்கும் அக்கரையும், ஆர்வமும், … உலகுக்குப் பயன்படாமல் போய்விடக்கூடாதே என்ற அச்சத்தால்தான் அச்சங்கள் கடந்து அயராது பாடுபட்டு வருகிறேன்.

    மேலும் படிக்க...


    அன்னிய நிலை

    எம் தாயகத்தில் யாம் ஓர் அன்னியனே?!

    அன்புச் சேவுக!

    எம் வாழ்க்கை ‘ஒரு தெய்வீகச் சோதனையே’ [My life is the Test of Divinity]. யாம் நஞ்சுண்ட மேனியனாகவே வளர்க்கப்பட்டும், இம்மாஞாலம் முழுதும் பயிற்சி, முயற்சிகளில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியுற்றும்; அரசயோகியாக, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாக இந்துமதத் தந்தையாக, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறாராக, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகச் செயல்பட்டும் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தவோ, ஒருமைப்பாடுபெறவோ, ஆட்சியுரிமையை பெறச் செய்யவோ …. முடியவில்லை ….

    மேலும் படிக்க...


    தெய்வீகச் சோதனை

    தெய்வீகச் சோதனையே குருதேவரின் வாழ்க்கை!

    அன்புள்ள சேவுக!

    நான் தனியனாகக் காடு, மேடு, ஆறு, கடல் என்று இயற்கை கொப்பளிக்கும் இடங்களிலெல்லாம் திரிந்தபோது கூட அஞசவோ கலங்கவோ இல்லை; பசி வேட்கையுடன் திரிந்த மிருகங்களின் முன்னால் சென்ற போதும்; சீற்றமெடுத்துப் பாய்ந்துவரும் ஆற்று வெள்ளத்தில் நீந்திய போதும்; ஆர்ப்பரித்துப் பொங்கியெழுந்து நின்ற கடற் சூறாவளியில் பயணம் செய்த போதும்; ஆரவாரித்து ஓ’வென்று சுழன்று சுழன்று அடித்த புயற்காற்றில் சிக்கிய போதும் நான் மயங்கவோ, மதிமாறவோ இல்லை.

    மேலும் படிக்க...


    வீர வாழ்க்கை

    கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்!

    அன்புச் சேவுக!

    உரிமையை நிலைநாட்டிட ஆயுதங்களைத் தாங்கி புறப்படுகிறவன்; எண்ணற்றோர் உயிருக்கு முடிவையும், உடலுக்கு மாறா வடுவுடைய விழுப்புண்களையும் நல்குவதோடு வெற்றித் திருமகள் அளித்திடும் வீரப்புண்கள் எனும் முத்திரைகளைப் பெற்றுத் தன்னை வீர வரலாற்று மாளிகைக்குள் நுழையும் உரிமை பெற்றவனாக்கிக் கொள்கின்றான்.

    மேலும் படிக்க...


    ஞானத் தேடல்

    யாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை!?!?!?

    அன்புச் சேவுக!

    எல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல!

    மேலும் படிக்க...


    தமிழினம் காக்கும் பணி

    கண்ணன் மனம் அனல் புனலே!

    அன்புச் சேவுக!

    மிகப் பெரிய கடிய கொடிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ஆரிய மாயை மிகு சூழ்ச்சிகள் எனும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் தமிழினத்தைக் காப்பாற்றும் பணி எம் தந்தையால் நேரடியாகத் துவக்கப்பட்டது. ஆனால், அவரோ, கரையில் நின்றபடி என்னையனுப்பி மூழ்கும் எமது தாயினமாம் தமிழினத்தைக் காப்பாற்ற அனுப்பி விட்டார்; நீருள் மூழ்குகிறவனோ என்னையும் சேர்த்து நீருக்குள் மூழ்கடிக்கவே முதலைப்பிடி போட்டு விட்டான். என்ன செய்வது? எப்படியும் நான் பிறந்த இனத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் பெருவீரம் காட்டி ஈடுபட்டு விட்டேன்.

    மேலும் படிக்க...


    அருட்புரட்சி முயற்சி

    குருதேவரின் புதுமையான அருட்புரட்சி முயற்சி

    அன்புச் சேவுக!

    யாம் சாதாரணச் சித்திகளைப் பெற்ற அருளாளர்களைப் போல் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு எம்மைக் காண வருகிறவர்களை எம்முடைய அருள் எல்லைக்குள் கொண்டு வந்து அவர்களுடைய அக, புற போராட்டங்கள் தற்காலிகமாக அமைதியடையும்படிச் செய்து செயல்பட்டிட்டால் இந்நேரம் உலகம் முழுவதும் எமக்கென ஒரு பெரிய மாபெரும் கூட்டத்தையும் எண்ணற்ற அமைப்புக்களையும் பெற்றிருக்க முடியும். ஆனால், யாம் அப்படிப்பட்ட மாயா நிலைச் செயல் புரிந்து எம்மை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்பியதே இல்லை.

    மேலும் படிக்க...


    திராவிடக் கழகங்கள்

    திராவிடக் கழகத்தின் உண்மை நிலை

    அன்புச் சேவுக!

    மகாத்மா காந்தியைப் போல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தி.க.வைப் பலமுறை கலைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம்,

    ‘என் பெயரைச் சொல்லிக்கிட்டு பொறுக்கித் திங்கிற கூட்டம் வளர்ந்து விடக்கூடாது. நான் யாரோ சிலருக்கு மட்டும் சொந்தக்காரன் என்று ஆகிவிடக் கூடாது.

    மேலும் படிக்க...


    நமக்கு ஏன் வரவேற்பில்லை?

    அனைத்துத் தீயவைகளையும் முழுமையாக அகற்றிடும் பணி

    அன்புச் சேவுக!

    சில ஆயிரம் பேர் ஒருங்கு கூடி ஒற்றுமையுடன் திட்டமிட்டபடி மிகப் பெரிய திருவிழா நிகழ்த்தியிருக்கிறோம். ஆனால், இத்திருநாட்டுப் பதிப்பகங்களோ, செய்தியேடுகளோ, சமய சமுதாய அரசியல் கலை இலக்கியக் கழகங்களோ, தனிமனிதர்களோ, …… நம் பக்கம் திரும்பவில்லை; நம்மை விமர்சிக்கவில்லை.

    மேலும் படிக்க...


    தலைவர்கள் இல்லாத நிலை!

    நாட்டில் தலைவர்களே இல்லாத இருண்ட நிலை

    அன்புச் சேவுக!

    அஞ்சல் வடிவக் கட்டுரைகளும், கட்டுரைகளும், நூல்களும் பழைய நூல்களைத் தேவைக்கேற்ப சிறுசிறு செய்தித் தொகுப்பாக வடிவப்படுத்தும் செய்திக் கட்டுரைகளும், ……. எழுதி எழுதிக் கோப்புகள் நூற்றுக்கணக்கில் குவிந்ததுதான் மிச்சம், பயன் ஏதும் உருப்படியாக எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

    மேலும் படிக்க...


    இந்துமத நடைமுறைகள்

    இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்து போன்றதே!

    அன்புச் சேவுக!

    யாம், அன்னியர்களுக்கு மட்டும் புதியவனாக இல்லாமல்; நம் தாயகத்து மக்களுக்கும் புதியவனாகவே உள்ளோம். ஆனால், இந்த எமது சொந்தநிலை; நமது இயக்கத்துக்கும் தொடர்ந்து வந்து விடக்கூடாது என்பதால்தான்; இந்த ஆண்டு 1985-இல் டிசம்பர் 24, 25இல் மதுரை மாநகரில் மாநில மாநாடு கூட்ட முடிவு செய்துள்ளோம்.

    மேலும் படிக்க...


    தமிழர் பாடப்புத்தகங்கள்.

    நமது வெளியீடுகளே தமிழரது பாடப் புத்தகங்கள்.

    அன்புச் சேவுக!

    (1) நம் நாட்டில் முதலாளிகள் ஏறத்தாழ நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர்கள் இருக்கிறார்கள். அனைத்துக் கோயில்களிலும் விழாக்களிலும் கூட்டம் கூட்டமாகக் கலந்து கொள்ளும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். எண்ணற்ற மத நிறுவனங்கள், இயக்கங்கள், மதத் தலைவர்கள், மதக் கலைஞர்கள், மதப் பத்திரிகையாளர்கள், மதப் பேச்சாளர்கள், மத எழுத்தாளர்கள் …. இருக்கிறார்கள்.

    மேலும் படிக்க...


    கருத்துப் பரிமாற்றம்

    கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களே இன்றைய தேவை

    அன்புச் சேவுக!

    இன்றைய நிலையில், நாம் இனவெறியையோ! மொழிவெறியையோ, மதவெறியையோ!, வன்முறை வெறியையோ! தூண்டி விடுவதாகவோ ஊக்குவிப்பதாகவோ எளிதாகக் குற்றம் சாட்டப்பட்டு விடலாம். எனவேதான், நாம் மிகமிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், நேரடியாகவும் நமது கொள்கைகள், குறிக்கோள்கள், திட்டங்கள் …… முதலியவற்றை விளக்கியேயாக வேண்டும்.

    மேலும் படிக்க...


    மானுடநல உரிமை

    மானுட நல உரிமை பேணும் புதியதோர் தத்துவம் பிறப்பிக்கப் படல் வேண்டும்.

    அன்புச் சேவுக!

    மதம்தான் அகவாழ்வுக்குரிய பண்பாட்டையும், புறவாழ்வுக்குரிய நாகரீகத்தையும், சமுதாய இயக்கத்துக்குரிய அரசியல் சித்தாந்தத்தையும் உருவாக்கிக் காத்துப் போற்றிப் பேணி வளர்த்து வருகிறது.

    மேலும் படிக்க...


    இந்துமத வளவளர்ச்சி
    இந்துமதத்தை ஏற்றுக் கொண்ட தன்மானத் தமிழனுக்கும்; அரைகுறை இந்து மத அறிவும் பற்றும் பயிற்சியுமுள்ள அப்பாவித் தமிழர்களின் போலித் தலைவர்களுக்கும் இடையே நேரடியான போராட்டம் துவங்கிடல் வேண்டும்.

    மேலும் படிக்க...


    வள்ளலாரும், பரமஅம்சரும்

    இராமலிங்க அடிகளாரும் இராமகிருட்டிண பரம அம்சரும் - ஓர் ஆய்வு

    மேலும் படிக்க...


    மதத்தின் தலைமை நிலை

    இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே.- பகுதி 1

    மேலும் படிக்க...


    மதங்களின் தாய்
    நாம் இதுவரை மதத்துறையை இழித்தும் பழித்தும், சிதைத்தும் சீரழித்தும் வளவளர்ச்சியும் ஆட்சியும் பெற்றுச் சுகவாழ்வு வாழ்ந்து வந்த அனைத்துத் துறைகளையும் நேர்மையோடு நேரடியாக விமர்சித்து மதவிடுதலைக்கான போராட்டத்தைத் துவக்கியேயாக வேண்டும்.

    மேலும் படிக்க...


    அருட்பணியின் தேவை

    அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்

    மேலும் படிக்க...


    இயக்கத்தின் வளவளர்ச்சி

    நமது வளவளர்ச்சியும், செயல் நிலையும்

    மேலும் படிக்க...


    அருளுலகப் பயிற்சிமுறை

    அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம்

    மேலும் படிக்க...


    அருளுலக தேர்ச்சி முறை

    அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம் - (தொடர்ச்சி)

    அன்புச் சேவுக!

    அனாதி காலத்து, விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மனிதனுக்கு விண்வெளியிலிருந்து வந்திட்ட பதினெண் சித்தர்கள் ஆரம்ப கட்டத்தில் வழங்கிய அதே பயிற்சிகளையும், முயற்சிகளையும் வழங்குகிறோம் யாம்.

    மேலும் படிக்க...


    தத்துவத் தலைமை

    நமக்குத் தனிமனிதத் தலைமை கிடையாது; தத்துவம்தான் தலைமையேற்கும்

    மேலும் படிக்க...


    குருவழிச் செயல்படுதல்

    நமது தேக்க நிலைக்குக் காரணம் நம்மவர்களின் பக்குவமின்மையா?!
    ‘இலக்காட்சியினரின் தோல்விக்குக் காரணம் குருவழிச் செயல்படாமையே’

    மேலும் படிக்க...


    பண்பாட்டுப் புரட்சி இயக்கம்

    ஊசலாட்டம்

    இந்து மறுமலர்ச்சி இயக்க ஊக்கம் தேயுமா! ஓயுமா! மாயுமா!

    மேலும் படிக்க...


    மதமே அரசின் தலைமை

    அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்திற்கு உட்பட்டது அரசியலா?

    மேலும் படிக்க...