Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • குருதேவர் அருளியவை
 • குருதேவர் அருளியவை

  Gurudevar

  "…. ஒரு மாபெரும் உலக முதல் இனத்தைத் தொடர்ந்து சூழ்ச்சியால் வீழ்த்தித் தாழ்த்தியே வரும் மற்றொரு இனத்தை எதிர்த்து நேரடிப் போர் புரியத் தயாராகி வரும் அருளாட்சி நாயகமே யாம்!…"

  இந்தப் படத்தில் இருப்பவர்தான் இந்த மண்ணுலகம் தோன்றிய ஐநூறு கோடியாண்டு கால வரலாற்றில் அருளாட்சியை நிலைநாட்டுவதற்காகத் தோன்றிய பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாவார். இவருக்குப் பிறகு மீண்டும் அருளாட்சியை நிலைநாட்ட முப்பத்தாறு (36) பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றுவார்கள் என்பதே மெய்யான இந்துமத வரலாற்றின் முழுமை.

  இந்து மறுமலர்ச்சியே இந்தியர் நல்வாழ்வு!

  மதவழிப் புரட்சியே மானுட நல்வாழ்வு! அருளாட்சியே அறத்தின் செழுச்சி!

  சித்தர் நெறி வளர்ச்சியே இந்துமதச் செழுச்சி

  தமிழ் வாழ்க! தமிழினம் வெல்க! இந்தியர் ஒற்றுமை ஓங்குக!

  சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் காண்பதே இந்துமதம்; அதுவே சித்தர் நெறி!


  அருளாட்சி அமைப்பு

  இந்து மறுமலர்ச்சி இயக்கம்

  அருளாட்சி அமைப்பு எழிச்சி நிலை அறிவிப்பு

  பதினெண் சித்தர்கள் தங்களது தாய்மொழியான அண்டபேரண்டமாளும் அமுதத் தமிழில் 43,73,112 ஆண்டுகளுக்கு முன் (கி.பி.2011ஆம் ஆண்டுக் கணக்கின்படி)வழங்கிய இந்து மதத்தால்தான் அருளாட்சி அமைக்க முடியும். இதுவே, இம்மண்ணுலகின் முதல் மதம், தாய் மதம். இதன் குழந்தைகளாகவே அனைத்து அருள் நிலையங்களும், அருளாளர்களும் தோன்றினர்.

  மேலும் படிக்க...


  எங்களைச் சந்தித்தால்...

  ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ என்பது உலக மதங்கள் அனைத்துக்கும் தாயாக உள்ள இந்துமதத்தின் அருமை பெருமைகளை விளக்கியுரைப்பதன் மூலம் உலக மதங்களின் பிணைப்புக்கும் இணைப்புக்கும் வழி செய்கிறது. எனவே, இந்த ‘எங்களைச் சந்தித்தால்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள முழக்கங்களை! உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டுக்குரிய மத விழிச்சி! எழிச்சி! செழிச்சி! நிலைகளை உருவாக்கிடும்.

  மேலும் படிக்க...


  அருளாட்சிக்கு அழைப்பு.

  “இந்து மத எழுச்சியே இந்தியாவின் செழுச்சி!”

  “இந்தியாவின் செழுச்சியே இம்மானுட நல விழிச்சி!”

  மேலும் படிக்க...


  குருதேவர் - அறிமுகம்

  “…. ஒரு மாபெரும் உலக முதல் இனத்தைத் தொடர்ந்து சூழ்ச்சியால் வீழ்த்தித் தாழ்த்தியே வரும் மற்றொரு இனத்தை எதிர்த்து நேரடிப் போர் புரியத் தயாராகி வரும் அருளாட்சி நாயகமே யாம்!…”
  குருதேவரின் எழுத்துக்களில் இருந்து எடுக்கப்பட்ட வாசகம்

  மேலும் படிக்க...


  தமிழின மொழி மத விடுதலை

  இம் மண்ணுலக அகப் பண்பாடுகளுக்கும், புற நாகரீகங்களுக்கும் அடிப்படையான மதங்களின் மூல மதமான ‘மெய்யான இந்துமதமே’ தமிழருடைய மதம். இம் மதம், அறியாமைகளாலும், புரியாமைகளாலும், தெரியாமைகளாலும் பல்வேறு பிரிவுகளையும், திரிபுகளையும், மாற்று வடிவங்களையும், சிதைவுகளையும், மொழியாட்சிகளையும் பெற்று விட்டது.

  மேலும் படிக்க...


  சாதிகள்.
  தொழிலினடிப்படையில் பிரிவேற்பட்ட பிறகே சாதிமுறை மனுவால் உண்டாக்கப் பட்டது. It was not until the Aryans had established themselves in the country that the caste system was evolved.

  மேலும் படிக்க...


  புத்தாண்டு வாழ்த்து.

  புத்தாண்டு ஆங்கிலேயருடையது, அவணியெல்லாம் விழாவாகிறது.
  எத்திசையோரும் ஏற்றுப் போற்றுவது போலவே போற்றுகிறோம்.
  இத்திருநிலை தமிழ்ப் புத்தாண்டு பெற்றிடவே ஏற்போம் உறுதி

  மேலும் படிக்க...


  பிறந்த நாள் செய்தி

  “சித்தர் நெறி, இம்மண்ணுலகுக்கும் முன்பே பிறந்தது. சித்தர்கள் தோன்றித் தோன்றி மறைவார்கள், நிறைவார்கள். அப்போதைக்கப்போது பித்தர்கள், எத்தர்கள் சித்தர் நெறியைச் சிதைக்க முயல்வர். அது அறுவடைக்குப் பின் உழுது விதைப்பது போல் அடுத்தடுத்துத் தோன்றும் சித்தர்களைச் செயல்படச் செய்யும்”

  மேலும் படிக்க...


  பூசைமொழி முன்னுரை.

  பதினெண் சித்தர்களின் அருட்கொடை

  பதினெண் சித்தர்கள் மனிதர்களின் உடல் நலம் வளத்தோடும், வலிமையோடும், வாலிப்போடும், பொலிவோடும் விளங்க வேண்டுமென்பதற்காக உடம்பில் பூசிக் கொள்ளக் கூடிய தைலங்கள், உள்ளே சாப்பிடக் கூடிய காயகல்ப மருந்துகள், நவநஞ்சுகள், நச்சுமுறிகள், பாலில் சாப்பிடக் கூடிய வளம் எனும் சூரணம், வலிமை எனும் சூரணம், காயகல்ப லேகியங்கள்…… முதலிய பல மருந்துகளை விருந்தாக வழங்கியிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க...


  பூசைமொழிகள் பயன்படுத்தும் விதம்.

  பதினெண் சித்தர்களின் அருட்கொடையான நூற்றெட்டுப் பூசைமொழி நூல்களிலிருந்து இக்காலத்துக்கு ஏற்றனவாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பூசைமொழிகள் இந்த முதல்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. மொழி, இனம், நாடு, மதம்,…… என்ற வேறுபாடின்றி எல்லோரும் பயன்படுத்துதற்காகவே அருளூறு ஒலிநயங்களையும், பொருளையும் தரக்கூடிய சொற்களால் உருவாக்கப் பட்டதே இப்பூசைமொழி.

  மேலும் படிக்க...


  மறுபிறவி.

  இறந்தவர் பிறந்தே ஆக வேண்டும்

  எல்லா மதங்களுமே (ஏறத்தாழ) முற்பிறப்புக்களையும் மறுபிறப்புக்களையும் ஒப்புக் கொள்கின்றன. அதனால்தான் இறந்தவர் பிறந்தே ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.

  மேலும் படிக்க...


  வளரும் புரட்சி வரலாறு
  நண்ப! நமது குருதேவர் தனது அநுபவங்களை ஒன்று திரட்டி இன்றைய மக்களின் எல்லா நிலைகளையும் உணர்ந்து அதற்கேற்பவே தமது செயல் திட்டங்களை வகுத்துள்ளார். நாம் யாவரும் போராட்டமோ, பெரிய பெரிய ஊர்வலங்களோ செய்யத் தேவையில்லை. நம்மில் யாரும் சிறைக்குக் கூடச் செல்லத் தேவையில்லை. எக்காரணத்தை முன்னிட்டும் நம்மில் யாரும் வன்முறைச் செயலில் ஈடுபடப் போவதில்லை.

  மேலும் படிக்க...


  நனவு

  இனிய நண்பா! கலிகாலத்தில் தங்களைப் போன்று சில ஆயிரம் பேர்களே உண்மையான தன்னம்பிக்கையும், தெளிவும், துணிவும், தளரா முயற்சியும் உடையவர்களாக வாழ்ந்து தெய்வீகத் துறையில் வளர்ந்தோங்கி சிறந்து வருகிறார்கள். நீங்கள்தான் குளிர்ந்த நிழலும் மணமிக்க மலர்களும் இனிய சுவைமிக்க கனிகளும் உலகுக்கு வழங்கக் கூடிய கனிமலர்ச் சோலைகள் ஆவீர்கள்.

  மேலும் படிக்க...


  குருபாரம்பரிய வாசகங்கள் சில
  “தனி மனிதர்கள் அருள்நீர் நிறைந்த கார்மேகங்களாக அருள்மழை பொழிதல் வேண்டும். அப்பொழுதுதான் அருள்நீர் எங்கும் ஊற்றெடுத்து தாகங்களையும், பசிகளையும் தணிக்க வகை செய்யும்”

  மேலும் படிக்க...


  தை மாதத்தின் சிறப்பு.

  (I) பொதுவாக நாட்டு வழக்கில்; “தை பிறந்தால் வழி பிறக்கும்” - என்ற பழமொழி, என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

  மேலும் படிக்க...


  சைவசித்தாந்தம்

  சைவ சித்தாந்தப் பற்றுமிக்க திருவருட்செல்வர் நெடுஞ்சேரலாதன் அவர்கள் சமூகத்திற்கு, பதினெண் சித்தர் மடாதிபதி, பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு இந்துமதத் தந்தை, தலைமை ஆச்சாரியக் குருபீடக் குருதேவர், அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் திருவாய் மலர்ந்தருளிய வாசகத் தொகுப்பின் சுருக்கம்:

  மேலும் படிக்க...


  சிவராத்திரி வழிபாடு.

  சிவராத்திரி வழிபாடு தமிழர்களுடையது; தமிழர்களைப் பார்த்து மற்ற இனத்தார்கள் இந்த வழிபாட்டைப் பின்பற்றிட ஆரம்பித்தார்கள்; தமிழர்களோ இது தங்களுடையது என்பதை மறந்து அன்னியருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். விளக்கம் கீழே தரப்படுகிறது.

  மேலும் படிக்க...


  குருதேவர் உரை.
  இந்த நாட்டை யார் ஆளுகின்றார்கள் என்று கேட்க விரும்ப வில்லை. எது ஆளுகிறது? எந்தத் தத்துவம் இந்த நாட்டை ஆளுகிறது?; அந்தத் தத்துவத்திலே தவறு இருக்கிறது அல்லது பிழை இருக்கிறது, குறை இருக்கிறது, ஊனம் இருக்கிறது; அதைச் செப்பனிட்டுப் பார்ப்போம் என்று நெருங்க முடியவில்லை.

  மேலும் படிக்க...


  இலங்கைத் தமிழர் பிறச்சினை.
  பன்னெடுங்காலமாகப் பைந்தமிழர் கூட்டம் பகல் வேடக் காரர்களின் பத்தர்களாக வாழ்ந்து பழியும், இழிவும், நலிவும், மெலிவும், அழிவுமே அடைந்து வந்துள்ளார்கள். இவர்களை உண்மையான தத்துவ வாரிசு எத்தகைய பெருவீரமும், தீரமும், தியாகமும், அருளும் காட்டிச் செயல்பட்டாலும் சரி செய்வது எளிதாக இருப்பதில்லை என்ற வரலாறு எமக்கும் உரியதாகவே இருக்கிறது.

  மேலும் படிக்க...


  இந்துவேத மாநாடு.

  1991, செப்டம்பர் 28,29 தேதிகளில் தஞ்சை திலகர் திடலில் நடைபெறும் ‘இந்து வேத மாநாடு’ குறித்த சிறு விளக்கம்!

  மேலும் படிக்க...


  உடனடியாகத் தேவையான சிந்தனைப் போக்கு

  அன்புச் சேவுக! உன்னோடு உளம் திறந்த சிந்தை நிறைந்த அஞ்சல் வழித் தொடர்பு நிகழ்த்துவதில் பல நன்மைகள் விளைகின்றன. முதலாவதாக என்னுள்ளே உள்ள தத்துவப் போராட்டங்கள், சித்தாந்தப் போராட்டங்கள், உலகியல் போராட்டங்கள், முரண்பாடுகளுக்குள் பிறக்கும் முரண்பாட்டுச் சிந்தனைப் போராட்டங்கள், திடீர் திடீரென்று எமது நினைவுக்கு வரும் எமது கேள்வியறிவுச் செய்தி, பட்டறிவுச் செய்தி, ஏட்டறிவுச் செய்தி, … முதலியவை உலகுக்குக் கூறப்பட்டேயாக வேண்டுமென்ற ஏக்கப் போராட்டங்கள்,…. முதலியவற்றின் வழிகளாக, அமைதி வழி முயற்சியாக அமைகின்றன யாமெழுதும் அஞ்சல்கள்.

  மேலும் படிக்க...


  அருளுலகத்தார் ஒற்றுமை செழுச்சி அழைப்பு.
  இந்த அஞ்சல் அருட் சித்தராகிய தங்களுக்கு எழுதுவதன் மூலம் அருளுலகத்தார்களுக்கு கையெழுத்துப் பிறதியாகவும், அச்சுப் பிறதியாகவும் அனுப்பும் பணி துவக்கப் படுகிறது.

  மேலும் படிக்க...


  அருளாட்சி அமைப்புப் பணி

  அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை முதல்படி அருட்பணி விரிவாக்கத் திட்டத்திற்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் சித்தரடியார் குருவழி வாரிசு சோ.இரவீந்திரன் அவர்களுக்கு, ‘ஞாலகுரு’, குருமகா சன்னிதானம், சித்தர் கருவூறார் 25.1.1982 நள்ளிரவில் அஞ்சல்களுக்கிடையில் விடுக்கும் அவசர அவசிய அஞ்சல்.

  மேலும் படிக்க...


  அருட்கேணிகள்.
  அருட்கேணிகள் இருந்து அதில் நீர் இறைப்பவர் இல்லா விட்டாலும் தோல்விதான்; அருள்நீர் இறைப்போர் இருந்து அருட்கேணி இல்லாவிட்டாலும் தோல்விதான். நாம்தான் இரண்டையும் உருவாக்கப் போகிறோம்.

  மேலும் படிக்க...


  Mystical Healing.

  Say South India, in particular Tamilnadu is the most picturesque in the Sub-continent ‘India’.Nature It also has the most fascinating history to tell, 10,000 years of India’s heritage is encapsuled in this ancient small region. No doubt, that the South India, in particular the Tamilnadu, Karnataka, Andhra and Kerala are the remains and the ruins of the ‘Lost Lemuria’ the Kumari Continent which is swallowed by the hungry sea a few thousand years back by a series of three deluges or Tsunamis.

  மேலும் படிக்க...


  நான்வேத வாசகங்கள்
  தமிழரே இந்துமத மூலவர்கள்; தமிழரே இந்துமத நாயகங்கள்; தமிழரே இந்துமத வித்துக்கள்; தமிழரே இந்துமதச் சொத்துக்கள்; தமிழரே இந்துமதக் காவலர்கள்; தமிழ்மொழியே கடவுள் மொழி; தமிழ்மொழியே தெய்வமொழி; தமிழ்மொழியே தேவமொழி; தமிழ்மொழியே வேதமொழி.

  மேலும் படிக்க...


  ஞானாச்சாரியார் கருத்துக்கள்
  தமிழ்மொழியில்தான் எல்லா கோயில்களிலும் பூசை செய்ய வேண்டும், அருட்சினை செய்ய வேண்டும். அப்படி தமிழ்மொழியில் பூசை செய்யாததால்தான் இந்துக் கோயில்கள் பாழடைந்தன. இந்துக்கள் மாற்றுமதக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்…

  மேலும் படிக்க...