• அறிமுகம்>
 • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி
 • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி

  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார்

  இமயம் முதல் குமரி வரை இருந்த தமிழின மக்கள் சமுதாயம் (The Tamils are the Indians = The Tamils are the aboriginates of the India) பல்வேறு வகையான சாதி சமயப் பிரிவுகளால் வேற்றுமைகளையும், வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும், ஏற்ற இறக்கங்களையும், வெறுப்புகளையும், மறுப்புகளையும், போட்டி பொறாமைகளையும், சண்டை சச்சரவுகளையும் பெற்று எழுச்சி பெற முடியாத வீழ்ச்சிகளையும், உயர்ச்சி பெற முடியாத தாழ்ச்சிகளையும் பெற்றதைக் கண்டு; அதன் மீட்சிக்காகத் திட்டமிட்டுச் செயலாற்றப் புறப்பட்ட மாவீரரே ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் (கி.பி.785- கி.பி.1040).

  இவர் தமிழ்ச் சமுதாயத்தைத் தொடர்ந்து சூழ்ச்சியால் வீழ்ச்சி நிலையில் வைத்திருக்கும் பேராற்றல் மிக்கவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக சமய மறுமலர்ச்சியை (The Religious Renaissance) உருவாக்கினார். அதற்காக கி.பி.785இலேயே மிகப் பெரிய முயற்சிகளைச் செய்து பொதிகை மலையில் இருந்து ‘சத்தி இலிங்கம்’, ‘சிவ இலிங்கம்’ என்ற இரண்டையும் மிகமிகப் பெரிய தொடர் முயற்சியால் நெடுந்தொலைவு எடுத்து வந்து முறையே தஞ்சாவூரிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலும் நிறுவினார்.

  [expand]

  தஞ்சைப் பெரிய கோயில்இவற்றிற்குரிய கோயில்களை இருநூறு ஆண்டுகள் கழித்தே, தான் உருவாக்கிய பிற்காலச் சோழப் பேரரசின் புகழ் மிக்க மாமன்னர்களைக் கொண்டு கட்டினார். இவர் மிகச் சிறந்த சிற்பி என்பதால் எண்ணற்ற கற்சிற்பங்களைச் செதுக்கியும், உலோகச் சிற்பங்களை வார்த்தும் பல அருள்வழங்கு நிலையங்களைக் கட்டினார்.

  அக்கோயில்களைச் சாதனமாகக் கொண்டு, ஆங்காங்கே கிடைத்த அருட்தன்மையுடைய மனிதர்களைத் தேர்ந்தெடுத்து முறையான பயிற்சியின் மூலம் அவர்களை அருளாளர்களாக ஆக்கினார். அப்படி உருவான அருளாளர்களைக் கொண்டே சமய சமுதாய இருள்களை அகற்றினார். இதனால், பிற்காலச் சோழப் பேரரசு எனும் ‘தெய்வீகப் பேரரசை’# (The Divine Kingdom; The Kingdom to safeguard the Siddharism or the Indhuism) உருவாக்கும் பெரும்படையினை அருட்படையாகத் திரட்டினார்.

  சித்தர் கருவூறார் சன்னதி அவரது முயற்சி நானூறு ஆண்டு காலம் (கி.பி.785 - 1290) வரலாற்றில் நின்றது. ஆனால் அவரை இன்றுகூட உணர்பவர் யாரும் இல்லை. இருப்பினும் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின் மடியிலேயே அவர் சிலை வடிவில் நிலைத்து நிற்கிறார்.

  கடலலைகள் ஓய்ந்தாலும் கன்னித் தமிழினத்தைக் காக்க இவர் எடுத்த முயற்சிப் பேரலைகள் என்றைக்குமே ஓயா மாட்டாதவை. இவர் உருவாக்கிய அருள் வழங்கு நிலையங்கள் விலை மதிக்க முடியாத கலைக் கருவூலங்களாக மலையென நிமிர்ந்து நிற்கின்றன.

  [/expand]


  ஞானாச்சாரியார் வரலாறு பகுதி 1

  இன்றுள்ள படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஏறத்தாழ எல்லோருமே தங்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளவும், தேவைகளை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளவுமே முயற்சிப்பவர்களாக இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க...


  சித்தர் கருவூறார்

  இந்தியத் துணைக் கண்டத்தில், இந்து மதத்துக்கென உள்ள கோயில்களில் மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியையுடைய கோயில் இதுதான். இக்கோயில்தான் கட்டிடக் கலையிலும், கோயில் விஞ்ஞானத்திலும், அருட் துறையிலும் புரட்சியாகக் கட்டப்பட்டது.

  மேலும் படிக்க...


  கருவறைக் கோபுரக் கோயில்

  தஞ்சைப் பெரிய கோயிலை அருளாட்சிக்குரிய கருவறைக் கோபுரக் கோயிலாகக் கட்டிய ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் தம் காலத்திலேயே குமரி முதல் இமயத்தின் முடி வரை உள்ள எல்லாக் கோயில்களையுமே புத்துயிர்ப்புச் செய்து முடித்தார்.

  மேலும் படிக்க...


  தஞ்சைப் பெரிய கோயிலின் பின்னணி.

  மொட்டைக் கோபுரம்:-

  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தஞ்சைப் பெரிய கோயிலை நான்காண்டு காலத்திற்கு மேல் கோயில் கோபுரத்தின் மேல் பகுதியை மூடாமல் மொட்டைக் கோபுரமாகவே வைத்திருந்தார்.

  மேலும் படிக்க...