Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
 • தமிழருக்கு மட்டும் தாழ்ச்சி ஏன்?
 • தமிழருக்கு மட்டும் தாழ்ச்சி ஏன்?

  தமிழருக்கு மட்டும் தாழ்ச்சி ஏன்?

  தமிழருக்கு மட்டும் தாழ்ச்சியேன்?!?!?!

  இம்மண்ணுலகிலுள்ள எல்லா இனத்தவர்களும் வரலாற்றுப் போக்கிலே உயர்ச்சியையும், தாழ்ச்சியையும்; வெற்றியையும், தோல்வியையும்; உரிமை வாழ்வையும், அடிமை வாழ்வையும்; … மாறி மாறித்தான் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தத் தமிழர்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாகப் பெற்றிட்ட மிகப்பெரிய சமய சமுதாய வீழ்ச்சியிலிருந்து மீட்சியே பெறவில்லை; உயர்ச்சியே அடையவில்லை. ஆனால், இவர்களுக்கிடையில் குறிப்பிட்ட வட்டாரத்தார் மட்டுமே (தென்மண்டலத்தார், வடமண்டலத்தார், தொண்டை மண்டலத்தார், கீழைப்புலத்தார், மேலைப்புலத்தார், நடுநாட்டார், மலைநாட்டார், பேரியாற்றார், வைகையாற்றார், காவிரியாற்றார், வேகவதியாற்றார், … ) குறிப்பிட்ட சில காலம் மற்ற வட்டாரத்தார்களை அரசியலால் அடக்கி ஆண்டு உயர்ச்சியும், உரிமையும் பெற்று வெற்றி வாழ்வு வாழ்ந்ததாகத் தெரிகின்றது. இதைத் தவிரத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அரசியலில் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் பெற்று முயன்று மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று உயர்ச்சியையும், உரிமை வாழ்வையும் நெடுங்காலம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. சங்ககாலத் தனியரசுகள், பிற்காலச் சோழப் பேரரசு, பிற்காலப் பாண்டியப் பேரரசு, … என்று விரல்விட்டு எண்ணக் கூடியவைதான் தமிழரின் அரசியல் வெற்றிக்குச் சான்றாக இருக்கின்றன. அதுவும் இந்த ஒருசில தமிழினப் பேரரசுகளின் காலத்திலும், தமிழ்மொழி மதத்துறையில் உரிமையையும் பெருமையையும் இழந்து தீண்டாமை நிலையையே பெற்றிருந்தது. அதாவது, தமிழினப் பேரரசுகளின் காலங்களிலும் சமசுக்கிருதம்தான் மதத்துறையில் ஆட்சியும் உயர்ச்சியும் உரிமையும் பெருமையும் பெற்று விளங்கிடும் மொழியாக இருந்திட்டது.

  “.. கலியுகம் பிறந்து 1359 ஆண்டுகள் கழித்தே; இமயமலைக் கணவாய்கள் வழியாக ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு; தோலாலான கோவணமும், கோலும் குடுவையும் குடுமியுமாகப் பால்வண்ணப் பழுப்பு மேனிக் கூட்டத்தார் இந்துமத அருளாளர்கள் கொலுவிருந்த இமயமலையின் மடிப் பகுதிகளுக்கும், அடிப் பகுதிகளுக்கும், ஆற்றங்கரைப் பகுதிகளுக்கும் வந்தனர். இவர்களுடைய பெண்டிர்களின் அழகும், பல்வேறு வகையான ஆட்டம், பாட்டு, கூத்து, விளையாட்டு முதலியவைகளும் இவர்களை எங்கும் வரவேற்புப் பெறவும், வாழ்வுறவும் செய்தன. இவர்களால் கிடைத்த பால், வெண்ணை, … முதலிய பொருள்களுக்காகவும்; இவர்களுடைய ஆண்களின் பணிவான உழைப்பையும் பெரிதும் விரும்பிய இந்து (சிந்து), யமுனை, கங்கை … முதலிய ஆற்றங்கரைச் சிற்றரசர்களும், பேரரசர்களும், பொதுமக்களும் இவர்களை விரும்பி ஏற்றுக் கொண்டிட்டார்கள். ஆனால், சூழ்ச்சித் திறமும், இனக் கட்டுப்பாடும், எதையும் தியாகம் செய்து வாழத் தெரிந்த பண்பும், … உடைய இவர்கள் விரைந்து அரசகுடும்பத்தார்கள் முதல் ஆண்டிகளின் கூட்டம் வரை ஊடுருவல் செய்து செல்வாக்கான நிலையான வாழ்வைப் பெற்று விட்டார்கள்.

  இவர்கள் எப்போதுமே ‘கண்கொத்திப் பாம்பு போல்’ எதிரிகளை அழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். இவர்கள் எங்கிருந்தாலும் சரி, அங்குள்ளவர்களுக்கிடையில் பிரிவும், பகையும், வேற்றுமையும், வேறுபாடும், போட்டியும், பொறாமையும் … அருகம்புல் போல் பசுமையாக முளைத்துக் கொண்டே இருக்குமாறு செய்திடுவார்கள். இதே நேரத்தில் இவர்கள் ஆயிரமாயிரம் கல் தொலைவு பிரிந்திருக்கக் கூடிய தங்களது வட ஆரிய இனத்தவர்களுடன் எல்லாம் நெருங்கிய அந்தரங்கமான உறவை வளமாகவும், வலிவாகவும், பசுமையாகவும் வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். அதனால், இவர்கள், தங்களுடைய இனத்தவரில் யாருக்கேனும் ஊசிமுனையளவு பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே கடல்போல் சீறி எழுந்து விரைந்து முழுமையாகச் செயல்பட்டுப் பாதுகாப்பு வழங்கிடுவார்கள். இப்படிப்பட்ட இவர்கள் தெய்வீகத் தமிழகத்தையே தங்களின் நாற்றங்காலாகவும், தலைமைப்பீடமாகவும் ஆக்கிக் கொண்டு விட்டார்கள். எனவேதான், தமிழருக்கு மட்டும் தாழ்ச்சி என்றென்றும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

  எனவே, இந்தப் பிறமண்ணினரான பிறாமணர் எனப்படும் வட ஆரியர்களைத் திருத்தித் தமிழர்களோடு எல்லா வகையிலும், நிலையிலும் இரண்டறக் கலந்திடும்படிச் செய்திடலே சிறந்த செயலாகத் தெரிகிறது. இதற்கு அவர்களின் சமசுக்கிருத மொழி வெறி, வேதமத வெறி, இன வெறி, … முதலியவைகள் முழுமையாக அகற்றப்படல் வேண்டும். அது இயலுமா? அதற்காக அருள்வழியில் அமைதியாக முயலுவது தோற்குமேயானால்; மாபெரும் சமய சமுதாய அரசியல் போர்களே நிகழ்ந்து குருதிமழை பெய்துதான் தமிழினப் பயிர் செழிக்க நேரிட்டிடும். இதனைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்பட வேண்டியவர்கள்தான் தமிழினத்தின் தலைவர்கள், குரு, குருமார், குருக்கள், பூசாறி, குருதேவர், … முதலானோர்கள்….”

  == தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குருபாரம்பரிய வாசகம்.

  இதே வாசகம், ‘அரசபாரம்பரியம்’, ‘இலக்கியப் பாரம்பரியம்’ எனும் இரண்டிலும் பலமுறை திரும்பத் திரும்ப இவராலேயே எழுதப் பட்டிருக்கின்றன. இவ் வாசகத்தின் பொருளுக்கு முன்னோடியாக, இதே கருத்துடைய குருபாரம்பரிய, அரச பாரம்பரிய, இலக்கியப் பாரம்பரிய வாசகங்கள் பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களால் எழுதப் பட்டுள்ளன.


  தொடர்புடையவை: