Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்
  • மெய்யான இந்துமதம்

    இந்துமதம் இந்த உலகில் மண் தோன்று முன் கற்பாறைகள் மட்டுமே தோன்றியிருந்த காலத்தில் பதினெண்சித்தர்கள் எண்ணற்ற முறை இங்கு வந்து தங்கி ஆய்வுகள் நிகழ்த்தி இந்த உலகம் (48 இலட்சம்) நாற்பத்தெட்டு நூறாயிரம் ஆண்டுகள் கழிந்து அழியும் என்று முடிவு செய்தனர். மானுட இனம் அழிந்த பிறகு இந்த உலகம் இருண்டு முழுமையாகச் சிதைய ஐந்து நூறாயிரம் (ஐந்து இலட்சம்) ஆண்டுகள் ஆகிடும்.

    எனவே, பதினெண்சித்தர்கள் இந்த உலக அருவங்கள், உருவங்கள், அருவுருவங்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு நாற்பத்தெட்டு எண்ணிக்கைகளைப் பெற்ற பல நிலைகளை உடைய இந்து மதத்தைத் தங்களின் தாய்மொழியான தமிழ்மொழியில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே படைக்க ஆரம்பித்திட்டார்கள்.

    ‘இந்து’ என்ற சொல்லை ‘விந்து’, ‘உயிரணு’, ‘உயிரின் கரு’, உயிரின் ஆரம்பமும் முடிவும், ஒளி, ஒலி, வலிமை, வளம், அழகு, இளமை, இனிமை, அன்பு, அமைதி, நிறைவு, நிம்மதி, ஒற்றுமை, உறவு, உரிமை, பற்று, பாசம், நேர்மை, வாய்மை, தூய்மை, மெய்ம்மை, துய்ப்பு, பத்தி, சத்தி, சித்தி, முத்தி, நிலைப்பேறு, பிறப்பிறப்பற்ற பெருநிலை, தவம், ஞானம், … எனும் நாற்பத்தெட்டு வகையான பொருளுணர்வை குறிக்கும் சொல்லாகவே படைத்தனர். எனவேதான், இந்துமதம் உலக மானுட இனத்தைப் பண்படுத்திடும் வழியாய், வழிகாட்டியாய், வழித்துணையாய், வழிப்பயனாய் என்றென்றும் இருந்து வருகின்றது.

    இந்த உலகை ஒன்பது கோள்களும், பன்னிரண்டு இராசிகளும், இருபத்தியேழு விண்மீன்களும் (நட்சத்திரங்கள்) ஆக நாற்பத்தெட்டு எனும் விண்ணுலகச் சத்திகளே ஆட்டிப் படைக்கின்றன. இவற்றிலிருந்து தப்பிக்கப் பரிகாரப் பூசைகளை விளக்குவதே இந்துமதம்.

    தமிழர் மதமே இந்து மதம்.


    அருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி

    இந்து மறுமலர்ச்சி இயக்கம் (பண்பாட்டுக் கழகம்) தோற்றம்: கி.பி.1772

    1. பதினெண்சித்தர்களின் வாழ்வியல் நெறியான “சித்தர் நெறியே” இந்து மதம். இதில் கலந்து விட்ட மூடநம்பிக்கைகள், மடமைகள், கற்பனைகள்,…. முதலியவற்றை பயிற்சிகள் தருவதன் மூலம் அகற்றுவதே நோக்கம்.

    மேலும் படிக்க...


    அன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்

    அருட்சத்தி என்பது பொதுவான மனித அறிவின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருட்சத்தியால் மனித வாழ்வின் அனைத்து வகையான தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் சரி செய்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் மனித வாழ்வில் அறிவியலால் நலப்படுத்த முடியாத அனைத்து வகையான குறைகளையும் அருட்சத்தியால் நலப்படுத்த முடியும்.

    மேலும் படிக்க...


    சித்தர் நெறி சிறு விளக்கம்.

    சோதிடம், பிறப்பியல், மனையியல், அங்கவியல், கைரேகை, பஞ்சாங்கம், பூசை, தவம், மந்திரம் …. முதலியவை மனித மனத்துக்கு நிறைவையும், சிந்தைக்குத் தெளிவையும், உணர்வுக்கு அமைதியையும், செயலுக்கு உறுதியையும், எண்ணத்துக்கு உரத்தையும், வாழ்வுக்குக் கவர்ச்சியையும் நல்கிடும்! நல்கிடும்! நல்கிடும்! வேறு எதனாலும் இவற்றைப் பெற முடியாது, விலை கொடுத்து வாங்க முடியாது.

    மேலும் படிக்க...


    இந்துமதம் என்பது எது ?

    மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான ‘சித்தர் நெறி’ உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் = அன்னியர் = வெளிநாட்டவர் - ‘ தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ஆதியில் இருந்த பயன்மிக்க, நன்மைமிக்க, உண்மையான இந்து மதம் பாதியில் கற்பனை, பொய், மடமை…. முதலியவைகளால் நலிவுற்று மெலிந்தது.

    மேலும் படிக்க...


    இந்துமதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம்
    10வது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகம்.

    மேலும் படிக்க...


    ஆச்சாரியார்கள்

    நான்குவகைப் பீடாதிபதிகளின் ஞான உலா

    இந்துமதம் தோற்றுவிக்கப்பட்டு இன்றோடு (இந்த 1986 ஆண்டோடு) 43,73,087 ஆண்டுகளாகின்றன. இந்த நெடிய கால இடைவெளி கிரேதாயுகம், திரேதகா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே அருளாட்சி நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது.

    மேலும் படிக்க...


    குருபாரம்பரியத்தில் ஏசுநாதர் வரலாறு
    குருபாரம்பரியத்தில்தான் ஏசுநாதர் வரலாறு மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் கூறப்படுகின்றது. ஏசுவை ஈசா, ஈசுவரன், ஈசன், தேவகுமாரன், சித்தர் குருவழி வாரிசு, ஞானசித்தர், நவநாத சித்தர், சீவன்முத்தர், … என்று பல பெயர்ச் சொற்களால் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் குறிக்கின்றார்.

    மேலும் படிக்க...


    குண்டலினி சத்தி

    நெருப்பருகில் உட்கார்ந்து இதமான சூட்டை குளிர்காலத்தில் அனுபவிப்பது போல் குண்டலினியின் வெப்பம் உடல், உயிர், ஆவி, ஆன்மா முதலிய அனைத்தையும் இதமாகவும், பதமாகவும், இன்பமாகவும் காத்திடும்.

    மேலும் படிக்க...


    தீவாளித் (தீபாவளி) திருநாள்

    பதினெண் சித்தர்கள் வழங்கிய இந்தியத் திருநாள்

    தீவாளி - விளக்கம்

    தீ ஆவளி சித்தர்கள் உருவாக்கிய திருநாள். கார்த்திகைக்கு அகல் விளக்குகளை வழிபாடு செய்வது போல்; தீஆவளிக்கு குத்து விளக்கு ஏற்றியும், தீ வளர்த்தும் (ஐந்தீ) ஒளியை வழிபடுவதுதான் தீஆவளித் திருநாள். இந்த ஒளி வணக்கமே இம் மண்ணுலகை அண்டபேரண்டங்களோடு இணைக்கிறது.

    மேலும் படிக்க...


    தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் தொடர்பில்லை!

    மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும்

    ஓர் அசுரனை, அரக்கனை, அநீதிக் காரனை… அழித்ததற்காக ஒரு திருநாள், திருவிழா, கொண்டாட்டம்…. தோன்றியிருக்குமா? இருக்காது! இருக்காது! இருக்காது!

    மேலும் படிக்க...


    இந்து மறுமலர்ச்சி இயக்கம்

    இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழையடி வாழையென சித்தர் கருவூறார் வழியில் வந்த சித்தர் ஏளனம்பட்டியார், "தமிழகத்தையோ, இந்தியத் துணைக்கண்டத்தையோ வளப்படுத்தி வளர்க்கும் குறுகிய நோக்கில் பிறந்ததல்ல சித்தர் நெறி" என்ற பேருண்மையினை உலகுக்கு அறிவிக்க 'இந்து மறுமலர்ச்சி இயக்கம்' உருவாக்கினார்.

    மேலும் படிக்க...


    தமிழரின் அறிவியல் சாதனைக்குச் சான்று

    தமிழ் நாட்டுச் சமயத் துறையில் 'சித்தியார்' நிலையை அடைந்தவராகக் கருதப் படும் மாணிக்க வாசகர், சைவ சமயக் குரவர் நால்வருள் முதல்வர். இவரது காலம், களப் பிறர்களின் ஆட்சித் துவக்கமாகிய கி.பி. முதலாம் நூற்றாண்டு ஆகும். அவர் வழிபட்ட இடங்கள் முதலிய சான்றுகளால் அவரே, வரலாற்றுப் படி கிடைத்துள்ள சமயவாதிகளில் முதல்வர்.

    மேலும் படிக்க...


    தமிழர்களின் அறிவியல் சாதனைகள்
    இன்றைய தென்னிந்தியாவும், கடலுக்குள் மூழ்கிய குமரிக் கண்டமும் உலகில் தோன்றிய முதல் நிலப் பரப்புக்கள் என்பதால்; ஆயிரத்து முன்னூற்றைம்பத்தொன்பது அண்டங்களையும் ஆளும் பதினெண் சித்தர்கள்; இந்நிலப் பகுதியிலேயே தங்களின் பணியைத் துவக்கினர். அதனால்தான், தமிழர்களுடைய இனத்தில், நாட்டில், மொழியில் பதினெண் சித்தர்களின் பாரம்பரியம் அமைந்துள்ளது.

    மேலும் படிக்க...


    இந்துவேத மதமே உலக மூலமதம்
    வடகோடி இமயத்தின் முடி முதல் தென்கோடி கன்னியாகுமரிக் கடலடி வரை உள்ள அனைத்து கடவுள்களுக்கும் தெரிந்த ஒரே ஒரு மொழி அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியேயாகும். இந்த உலகில் உள்ள அனைத்து வகைப்பட்ட கோயில்களிலும் உள்ள நூற்றியெட்டு வகை (108) திருப்பதிச் சக்கரங்களும், இருநூற்று நாற்பத்து மூன்று (243) வகைச் சத்திபீடச் சக்கரங்களும், ஆயிரத்தெட்டு (1008) வகைச் சீவாலயச் சக்கரங்களும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் எழுதப்பட்டவை! எழுதப்பட்டவை!! எழுதப்பட்டவை!!!

    மேலும் படிக்க...


    இராமகிருட்டிணரியம்
    இராமகிருட்டிணர் வாழ்ந்த மெய்யான இந்துமத வாழ்வும், அவர் போதித்த மெய்யான இந்துமதத் தத்துவமும் ஒருங்கிணைந்த இராமகிருட்டிணரியம் (அல்லது இராமகிருட்டிணரியல் = The Ramakrishnarism) மீண்டும் உடனடியாக இந்தியா முழுவதும் முளைத்துக் கிளைத்துத் தழைத்துச் செழித்து வளர வேண்டும்.

    மேலும் படிக்க...


    மணு தரும சாத்திரம்
    அனாதிசிவனார், இளமுறியாக் கண்டத்தில் இருந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதங்களை சமாதானப் படுத்தவும், சமநிலைப் படுத்தவும், ஒருநிலைப் படுத்தவும், ஒற்றுமைப் படுத்தவும் முயற்சிக்கும் சாதனங்களாக ‘மணுநீதி நூல்கள் பதினெட்டை’ அருளினார்கள்.

    மேலும் படிக்க...


    இந்துமத வரலாற்றுச் சுருக்கம்
    உலக மக்கள் அனைவரும் இந்துக்களே! அனைத்து மதங்களும் இந்து மதத்தின் அங்கங்களே! தமிழ்நாடே இந்துமத வீடு! இந்துமத அறிவே இந்துமத ஒற்றுமை! இந்துமதப் பயிற்சியே இந்துமத ஆட்சி!

    மேலும் படிக்க...


    இந்துமத விளக்கவுரை
    இந்துமத விளக்கம் என்ற பெயரில் மெய்யான இந்துமதத்தையும் பொய்யான ஹிந்துமதத்தையும் பற்றி விளக்கியுரைக்க வேண்டிய இன்றியமையாத, அவசியமான கடமையாகி விட்டது.

    மேலும் படிக்க...


    நமது தாயகம்
    நம் தாயகத்து மக்கள் பாகப்பிரிவினையால் பல பங்குகளாக்கப் பட்ட ஒரு மந்தையின் ஆடுகள் போலத் தனித்தனிச் சிறு குழுக்களாக அல்லது கூட்டங்களாகப் பிரிந்து நின்று சரியாக வாழாமல் (மேயாமல்) கலங்கியுள்ளனர். இவர்களை யெல்லாம் ஒன்றுபடுத்தும் முயற்சி வென்றிட முடியாத கவலைக்குரிய சிக்கலான நிலையில்தான் இருந்து வருகின்றது.

    மேலும் படிக்க...


    அ.வி.தி. வரலாறு
    காலப்போக்கில் மணிசரின் கற்பனையாலும், கனவாலும், தன்னலவெறியாலும், சுரண்டல் போக்காலும், ஏமாற்று உணர்வாலும், நினைவாற்றல் குறைவாலும் ….. இந்து மதம் பல தேக்கங்களையும், முடக்கங்களையும், இயலாமைகளையும் …. பெற்று விட்டது. அவற்றைப் போக்கிடவே ஆதிகாலக் கருவூறார் இந்து மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவித்தார். அதற்காக ‘அருட்பணி விரிவாக்கத் திட்டம்’ அமைத்து அருளை அநுபவப் பொருளாக வழங்கினார்.

    மேலும் படிக்க...


    குருவாசகங்கள்

    குருவாசகங்கள் - I

    1. ஊழ்வினை தொடரும்
    2. பழம் பிறப்புக்களின் நினைவு திருவருளால் இணையும் போது பிறப்பற்ற பெருநிலை கிட்டும்.

    மேலும் படிக்க...


    சாதி வெறி
    பிறமண்ணினரான பிறாமணர்கள் இந்தச் சாதியெனும் பொருளாழமிக்க அழகிய தமிழ்ச் சொல்லை ஜாதி என்ற தங்களின் சமசுக்கிருதச் சொல்லால் மூடி மறைத்ததால்தான் அனைத்து வகையான வெறிகளும் பிறந்தன. மெய்யான இந்துமதத்துக்குச் சாதி, மத, இன, மொழி, வெறிகள் இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

    மேலும் படிக்க...