Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!

    இந்துமதம் ‘இந்துமதம்’ என்பது 1986ஆம் ஆண்டுக் கணக்கின்படி 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால், ‘இளமுறியாக் கண்டம்’ என்கிற ‘குமரிக் கண்டத்தில்’ (The Lost Lemuria) பதினெண் சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள்… என்பவரால் உருவாக்கப் பட்டது. இந்த இந்துமதம் அமுதத் தமிழ்மொழியில்தான் வெளியிடப் பட்டது. இதனுடைய நூல்களும் (Books), செயல் திட்டங்களும் (Practical Theories), திருநாள்களும் வீம்புக்கென்றே பிறாமணர்களால் தவறான விளக்கங்களால், செய்திகளால் பாழ்படுத்தப் பட்டு விட்டன.

    எனவேதான், தமிழின இந்துமதக் குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் ‘மெய்யான இந்துமதமும், பொய்யான ஹிந்துமதமும்’ என்று தலைப்பிட்டே கருத்துரைகள் வழங்கிச் செயல்படுகிறார்.

    இந்துமதம் பற்றி M.P.பிள்ளை கருத்து.

    இந்துமதத்தவர்கள்தான் தங்களுடைய மதத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்துமதத்தை மறப்பவர்களும், பழிப்பவர்களும், இழிப்பவர்களும், அழிப்பவர்களும், …… மிகுதியாக இருக்கின்றார்கள். இந்துமதத்துக்கு வினோதமாக, வியக்கத் தக்க எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஓர் அரிய ஆற்றல் உண்டு. இந்த அரிய ஆற்றலால்தான் நான்கு யுகங்களாகியும் இந்த இந்துமதம் மட்டும் இறவாமையையும் (Immortality), மக்கள் மறவாமையையும் பெற்று நிற்கின்றது.

    மேலும் படிக்க...


    இந்துமதம் - ஹிந்து மதம்.

    மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாட்டு அட்டவணை. விரிவஞ்சி ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து நாட்டு நடப்பில் உள்ள மதச் செயல்பாடுகளை ஆராய்ந்தால் எண்ணற்ற வேறுபாடுகளை பிரித்துணரலாம்.

    மேலும் படிக்க...


    சிறு தெய்வங்கள் - பகுதி 1.

    பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள், தமிழ்மொழி வளர்க்கவும், காக்கவும், வளவளர்ச்சி செய்யவும் பொறுப்பு ஏற்றிருந்த திங்களங் குலத்து (சந்திர குலத்து) பாண்டியப் பேரரசு மதுரை மாமூதூர் பேரழிவால் சாம்பல் மேடாகிய பிறகு, வாழ்ந்திட்ட காலத்தில் குறித்துள்ள கவலை நிறைந்த, வருத்தம் தோய்ந்த, வெறி மிகுந்த கருத்துக்களே சிறு தெய்வங்களைப் பற்றிய கருத்துக்களை முதன்முதலாக வழங்குகின்றன.

    மேலும் படிக்க...


    சிறு தெய்வங்கள் - பகுதி 2.
    வட ஆரியரின் சதித் திட்டங்கள்:

    (1) வாரத்தில் சில நாட்களும், மாதத்தில் சில நாட்களும், ஆண்டில் குறிப்பிட்ட நாட்களிலும் தொடர்ந்து வழிபடுகின்ற அல்லது கும்பிடப் படுகின்ற கிராமப் பொதுத் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள், காவல் தெய்வங்கள் முதலியவற்றை ஆண்டுக்கொரு முறைதான் கும்பிட வேண்டுமெனச் செய்து விட்டார்கள். இதேபோல், மேற்படி தெய்வங்களைக் குருதிப்பலி இல்லாமல், இறைச்சிப் படையல் இல்லாமல், தேங்காய்ப் பழம், பால், சர்க்கரை, பாயாசம், பொங்கல்,…. என்று படையலிடும் முறைகளை உருவாக்கினார்கள். இவற்றால், தமிழர்கள் காவல் தெய்வங்களின் காவலை இழந்தார்கள்.

    மேலும் படிக்க...


    சிறு தெய்வங்கள் - பகுதி 3.

    கி.பி. 785இல் 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் அருளாட்சி அமைப்புப் பணியை மேற்கொண்டார்.

    மேலும் படிக்க...


    ஓகாசனமும் யோகாசனமும்.

    யோகாசனம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், யோகாசனம் போல் ஓகாசனம், போகாசனம், மோகாசனம் என்று ஆசன வகைகள் உள்ளன என்பதனை பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தங்கள் காலத்தில்தான் கற்றுக் கொடுப்பர். இந்த யோகாசனம் ஓகாசனம், … முதலியவை மூலப் பதினெண் சித்தர்களால் தமிழ் மொழியில் வழங்கப் பட்டவைதான்.

    மேலும் படிக்க...


    ஹிந்துமதம் பொய்யானது - I
    இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.

    மேலும் படிக்க...


    ஹிந்துமதம் பொய்யானது - II
    சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் … செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் பதினெண்சித்தர்களின் ஆகம விதிகளை மீறி ஒன்பது (9) கோள்களையும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய வழிபாட்டுநிலையங்களில் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். … இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக … மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!!.

    மேலும் படிக்க...


    ஹிந்துமதம் பொய்யானது - III
    உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான். இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே.

    மேலும் படிக்க...


    ஹிந்துமதம் பொய்யானது - IV
    பொய்யான ஹிந்துமதத்தில் மேலே கூறிய வரலாற்றுக்கு முரணான செய்திகளை ஆபாசமான முறையில், அறிவுக்குப் பொருந்தாத வகையில் கூறுகிறார்கள்: ‘பிறம்ம தேவன் மடியிலிருந்து நாரதர் தோன்றினார். கட்டை விரலிலிருந்து பிரஜாபதி தோன்றினார். பிராணனிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். தொடர்ந்து பிரம்மனின் சங்கல்பத்தால் அத்ரி, ப்ருகு ஆகிய மஹரிஷிகள் தோன்றினர்.’

    மேலும் படிக்க...


    ஹிந்துமதம் பொய்யானது - V
    பதினெண்சித்தர்கள் உருவாக்கிய நான்கு வேதங்களின் பெயர்களிலும் நான்கு சமசுக்கிருத வேதங்களை உருவாக்கிக் கொண்ட பிறாமணர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய வேத மதத்தை; அதாவது, பொய்யான ஹிந்து மதத்தை மெய்யான இந்து மதமாகவே மாற்ற முயற்சித்தார்கள். அதற்காக பதினெண்சித்தர்கள் ஏற்படுத்திய வழிபடு நிலையினர்கள், வழிபாட்டு நிலையங்கள், பல்வேறு வகை அருளாளர்கள், பலவகைப் பட்ட அருளுலக நூல்கள், … முதலிய அனைத்தையுமே இருட்டடிப்புச் செய்யவும், குழப்பவும், கலக்கவும், பல புதிய கதைகளையும், புராண இதிகாசங்களையும், போலி நூல்களையும், போலி வரலாறுகளையும் உருவாக்கினார்கள்.

    மேலும் படிக்க...


    ஹிந்துமதம் பொய்யானது - VI
    பதினெண்சித்தர்கள் மிகத் தெளிவாக விஞ்ஞானச் சூழலிலும், பகுத்தறிவுப் போக்கிலும், (With a Scientific atmosphere and a Rationaistic Approach) உலகின் தோற்றத்தையும், பயிரின உயிரின தோற்றத்தையும் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பகுத்தறிவுப் போக்கும், விஞ்ஞானச் சூழலும் உடையதுதான் சித்தர்களின் இந்து மதம். அதாவது, மெய்யான இந்துமதம் என்று சொல்லப் படும் பதினெண்சித்தர்களின் இந்துமதம் முழுக்க முழுக்க அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய ஒரு சமூக விஞ்ஞானமே; இது ஒரு பகுத்தறிவுத் தத்துவமே; இது ஓர் அறிவியல் மதமே.

    மேலும் படிக்க...


    மெய்யான சித்தர் பாடல்கள்
    பதினெண்சித்தர் வகையைச் சேர்ந்த சித்தர்களும், 48 வகைச் சித்தர்களும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் மெய்யான இந்துமதம் பற்றியும், பொய்யான ஹிந்துமதம் பற்றியும் பல கருத்துக்களை எழுதியுள்ளார்கள்; பல செய்திகளைத் தருகிறார்கள். அவற்றுள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருக்கிறோம்.

    மேலும் படிக்க...


    அருணகிரிநாதர் வரலாறு

    அருணகிரியார் வரலாற்றில் பொய்யான ஹிந்துமதத்தின் ஆபாசக் கற்பனை

    “அருணகிரியார் பெண்ணின்பத்தை அதிகமாகத் துய்த்து தொழுநோய் வந்து தற்கொலை செய்து கொள்ள முயன்று முருகப் பெருமானால் தடுத்து ஆட்கொள்ளப் பட்ட ஞானியார்” - என்று (பிறமண்ணினர்) பிறாமணரால் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான சூழ்ச்சியான, மோசடியான வரலாறாகும்.

    மேலும் படிக்க...


    பதினெண்சித்தர்களின் வானியலும் விண்ணியலும்

    ‘விண்ணியல்’ (The Universe = அண்ட பேரண்டம்  எல்லையற்றுப் பரந்து கிடக்கும் ஒன்று) என்பது (108) நூற்றெட்டுத் திருப்பதி அண்டங்களையும், (243) இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி அண்டங்களையும், (1008) ஆயிரத்தெட்டுச் சீவ (சிவ) அண்டங்களையும், இவை மிதக்கும் பெருவெளிப் பரப்பையும்; உயிரணுப் பெருங்கடல் சூழ்ந்த (108 + 243 + 1008 = 1359) ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்பது அண்டங்களின் இயக்கம், பயிரின உயிரின நிலைகள்.... முதலியவைகளை விளக்கும் விஞ்ஞானமாகும் (The Cosmic Science).

    மேலும் படிக்க...