Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
  • ஹிந்துமதம் பொய்யானது - IV
  • ஹிந்துமதம் பொய்யானது - IV

    ஹிந்துமதம் பொய்யானது - IV

    இந்துமதம்-ஹிந்துமத விளக்கக் கட்டுரைத் தொடர்-4

    முனிவர்களும் இந்து - ஹிந்து மதக் கருத்து முரண்பாடுகளும்

    இந்து மதத்தில் முனிவர்கள், இருடிகள், கருக்கள், குருக்கள், தருக்கள், திருக்கள், கந்தர்வர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், … என்று பலர் இம்மண்ணுலகில் தோன்றிய மனிதர்களுக்குள்ளிருந்தே, தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப் பட்டவர்களே யாவார்கள். இவர்கள் மூலமே பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இந்த மண்ணின் ஈசர்களான மணீசர்கள் (மண் + ஈசர் = மணீசர்; சித்தர்களின் நூல்களில் மணீசர் என்றுதான் குறிக்கப் படுகிறது. மனிதர் என்ற சொல் ஆட்சியிலில்லை.) வாழ்வில் அருட் பயிரினங்களை விளைவித்தார்கள். எனவே குறிப்பிட்ட முனிவர், இருடி, … முதலியவர்கள்தான் அருட்பயிர் விளைவிக்கும் உழவர்கள் ஆவார்கள். இவர்களின் பட்டியலிலே நாரதர், பிறப்பாதி, பிறப்பதிபதி (இந்த இருவரை ஆரியர்கள் தங்களின் சமசுக்கிருத மொழியில் பிரஜாபதி என்று குறிப்பிடுகிறார்கள், வசிட்டர், அத்திரி, பத்திரி, புத்திரி, போத்திரி, முத்திரி, சித்திரி, பிறங்கி (பிருங்கி என்று சமசுக்கிருதத்தில் சொல்கிறார்கள்) 1)அருகு 2)இருகு 3)உருகு 4)எருகு 5)குருகு 6)தருகு 7)புருகு (ப்ருகு என்று சமசுக்கிருதத்தில் கூறுகிறார்கள்) 8)வருகு 9)திருகு 10)முருகு என்று பத்து பேர் “அருகாதிப் பதின்மர்” என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்படும் குழுவாகப் படைக்கப் பட்டார்கள்.

    ஆரியர்களால் உண்டாக்கப் பட்ட பொய்யான ஹிந்துமதத்தில் மேலே கூறிய வரலாற்றுக்கு முரணான செய்திகளை ஆபாசமான முறையில் அறிவுக்குப் பொருந்தாத வகையில் கூறுகிறார்கள். ‘பிறம்ம தேவன் மடியிலிருந்து நாரதர் தோன்றினார். கட்டை விரலிலிருந்து பிரஜாபதி தோன்றினார். பிராணனிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். தொடர்ந்து பிரம்மனின் சங்கல்பத்தால் அத்ரி, ப்ருகு ஆகிய மஹரிஷிகள் தோன்றினர்.’

    விண்வெளியிலிருந்து பதினெண்சித்தர்களோடு வந்தவர்களில் ஒருவரையே முதல் முதல் பிறமண் என்ற பொறுப்பில் நியமித்தார்கள் பதினெண்சித்தர்கள். சித்தர் நெறிப்படி

    … என்ற தெளிவான கருத்துக்கள் இருப்பதால் இந்தப் பிறமண் இம்மண்ணுலகத்துப் பெண்களில் அருட்கல்விக்குத் தகுதியுடையவர்களை யெல்லாம் தேர்ந்தெடுத்துக் கல்வி புகட்டிக் கலைமகள்கள் ஆக்கினார். அப்படி அவர் உருவாக்கிய மாணவிகளில் தலை சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்துத்தான் தன் மனைவியாக ஆக்கிக் கொண்டார். — இப்படிக் குருபாரம்பரியம், குருவாசகம், குருவாக்கியம் முதலிய நூல்கள் பதினெண்சித்தர்கள் உண்டாக்கிய மெய்யான இந்துமதத்தில் வாழ்ந்த பிறமண் என்ற சித்தரின் காதல் திருமணம் பற்றிய செய்தியைக் குறிக்கின்றன.

    ஆனால், பிறமண்ணினரான பிறாமணர் எனப்படும் வட ஆரியர்கள் தங்களுடைய சமசுக்கிருத மொழியில் தாங்கள் உருவாக்கிய பொய்யான ஹிந்துமதத்தில் ‘இப்படி பிரம்மன் தொடர்ந்து சிருஷ்டித்துக் கொண்டிருந்த போது அவன் சங்கல்பத்தால் கல்விக்கும், ஞானத்துக்கும், அறிவுக்கும் உறைவிடமான சரஸ்வதி தோன்றினாள். அவளே பிரம்மனின் தர்ம பத்தினியானாள். தான் படைத்த பெண்ணைத் தனக்குப் பத்தினியாக்கு முன் பிரம்மன் தன் தேகத்தைப் புதிய சரீரமாக மாற்றிக் கொண்டான். இங்கே மறுபிறவித் தத்துவத்தைப் பிரம்மனே ஆரம்பித்து வைக்கிறான்.’

    இப்படி மெய்யான இந்துமதத்தை பிறமண்ணினரான பிறாமணர்கள் தங்களின் சமசுக்கிருத மொழியின் மூலம் சிதைத்துச் சீரழித்துச் செயலிழக்கச் செய்து உருவாக்கிய பயனற்ற, தேவையற்ற, மாயமான, ஆபாசமான, அநாகரீகமான, மோசமான, மோசடியான மதம்தான் பொய்யான இந்துமதம் எனும் ஹிந்து மதம். இப்படி இந்த இரண்டு மதங்களின் தோற்ற மாற்ற, ஏற்ற மாறுபாடு, வேறுபாடு, முரண்பாடு, திரிபு, … முதலியவைகளை எல்லாம் வரலாற்றுப் பூர்வமாகவும், தத்துவ ரீதியாகவும், இலக்கியப் பின்னணியோடும் அறிவிக்கப் பட்டு மக்கள் அறிந்து கொண்டால்தான் இந்து மறுமலர்ச்சிப் பணி அணி பெறும்; வெற்றி பெறும்; பயன் பெறும்; நன்மை நல்கும்.

    இவற்றை எண்ணித்தான் வட ஆரிய மாயைகளை, சமசுக்கிருத இலக்கியத் திருட்டுக்களை, குழப்பங்களை, கலகங்களை, வேதமத புரட்டுக்களை, பொய்களை, கற்பனைகளை, கனவுகளை, ஆபாசங்களை, மோச நாசங்களை, மோசடிகளை, ….. மிக மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், முறையாகவும், நிறையாகவும் பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும் விளக்கும் பணி துவங்கி இருக்கிறது.

    இதனைப் புரிந்தும் புரியவைத்தும் விருப்பத்தோடு எல்லாவிதமான ஆதரவுகளையும் வழங்கும் நிலை வளர்ந்தால்தான் இந்து மதத்துக்கு வருங்காலமுண்டு. இல்லையேல் இது மாற்று மதங்களாலும், வேற்று மதங்களாலும், நாத்திகர்களாலும், பகுத்தறிவாளர்களாலும், இந்துமத துரோகிகளாலும், விரோதிகளாலும் இந்துமதத்துக்கு வருங்காலமே இல்லாமல் இருண்ட நிலை ஏற்பட்டு விடக் கூடும். எனவே, இந்து மறுமலர்ச்சி இயக்கக் கருத்துக்களை அதாவது சித்தர் நெறிக் கருத்துக்களைச் சாதாரண மறுப்பு, வெறுப்பு, எதிர்ப்புக் கருத்தாக நினைக்க வேண்டாம். அதாவது சித்தர் நெறிச் செயல்வீரர்களும், வீராங்கனைகளும் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் மெய்யான இந்து மதத்தைக் காக்கும் உயிர்ப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

    இந்த உயிர்ப் போராட்டம் உயர் போராட்டமாக இருந்தும், வளவளர்ச்சியோ, வலிமைப் பொலிவோ, ஆட்சிச் செல்வாக்கோ பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் இன்றுள்ள இந்துக்களுக்கு ‘மெய்யான இந்துமதத்திற்கும், பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாததால்தான்’. மேலும், இன்றுள்ள இந்துக்கள் பிறாமணத் தலைவர்களையே, இந்துமதத் தலைவர்களாக நினைக்கிறார்கள். பிறாமண மொழியான சமசுக்கிருத மொழியையே இந்துமத அருளாட்சி மொழியாகக் கருதுகிறார்கள். பிறாமண வட ஆரிய வேத மத சாத்திறச் சம்பிறதாயங்களையும், சடங்குகளையும், பூசாவிதிகளையும், மந்திரங்களையுமே இந்துமத மந்திரங்கள் என்று நம்பி விரும்பியேற்றுச் செயல்படுகிறார்கள்.

    இவற்றிற்கெல்லாம் மேலாக, பல அரைகுறை மதச் சீர்திருத்த வாதிகள் பகுத்தறிவின் பெயரால் பிறாமணரின் வேதமதமான பொய்யான ஹிந்துமதத்தின் புராண இதிகாச சாத்திறச் சம்பிறதாயச் சடங்குக் குப்பைகளை மெய்யான இந்துமதத்துக்குரியது என்றெண்ணி தேவையற்ற போராட்டத்தில் வெறுப்புப் பணியில், மறுப்புப் பணியில், எதிர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது, சமசுக்கிருத வெறுப்பு, பிறாமண வெறுப்பு, மூடநம்பிக்கை வெறுப்பு, பழமை வெறுப்பு, மத வெறுப்பு, … முதலிய உணர்ச்சிகளெல்லாம் உலக வரலாறு, இந்திய வரலாறு, தமிழ்மொழி வரலாறு, தமிழின வரலாறு, மெய்யான இந்துமத வரலாறு முதலியவைகளை முறையாகவும், நிறையாகவும் தெரியாதவர்களால் நிகழ்த்தப் படுவதால் தமிழுக்கும், தமிழினத்துக்கும், அருளுலகுக்கும், மிக மிகப் பெரிய பாதிப்புக்களே ஏற்படுகின்றன. எனவேதான், இந்து மதத்தையும், ஹிந்து மதத்தையும் பிரித்து வேறுபடுத்தி விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


    தொடர்புடையவை: