முகப்புப் பக்கம்>
இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
ஓகாசனமும் யோகாசனமும்.
ஓகாசனமும் யோகாசனமும்.
ஓகாசனமும் யோகாசனமும்.
யோகாசனம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், யோகாசனம் போல் ஓகாசனம், போகாசனம், மோகாசனம் என்று ஆசன வகைகள் உள்ளன என்பதனை பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தங்கள் காலத்தில்தான் கற்றுக் கொடுப்பர். இந்த யோகாசனம் ஓகாசனம், … முதலியவை மூலப் பதினெண் சித்தர்களால் தமிழ் மொழியில் வழங்கப் பட்டவைதான்.
யோகாசனத்தின் பெயர்களை சமசுக்கிருதத்தில் மாற்றியதால் இன்று இவை அனைத்தும் தமிழர்களுடையது என்பது மறைக்கப்பட்டு விட்டது. யோகம், ஓகம் என்று இரு வேறு சொற்கள் தமிழில் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டால் இவை அனைத்தும் தமிழர்களின் கலைகள் என்பதை உணரலாம்.
யோகாசனமும் ஓகாசனமும் எப்படி வேறுபடுகின்றன என்பதை இங்கே காணலாம்.
யோகாசனத்திற்கும் ஓகாசனத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
- யோகாசனம் குறிப்பிட்ட வயதினர்தான் செய்ய வேண்டும். ஆனால் ஓகாசனம் எல்லா வயதினரும் செய்யலாம்.
- யோகாசனம் குறிப்பிட்ட நேரத்தில்தான் செய்தல் வேண்டும். ஆனால், ஓகாசனம் எந்த நேரத்திலும் செய்ய முடியும்.
- யோகாசனம் ஏதும் சாப்பிடாமல் காலியான வயிற்றில்தான் செய்ய வேண்டும். ஆனால், ஓகாசனம் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி (அரை நெல்லிக்கனி அளவு) அல்லது 3 கையளவு நீரில் அந்த மஞ்சள் தூளைக் கரைத்து குடிக்கலாம். அல்லது 3 கையளவு பாலில் இளஞ்சூட்டில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு கலக்கி குடிக்கலாம். அல்லது நீராகாரமும் 1 கையளவு சிறிய வெங்காயம் சேர்த்தும் இப்படி சாப்பிட்டு விட்டே ஓகாசனம் செய்ய வேண்டும்.
- யோகாசனம் உடல் வலிவை மட்டும் தரும். ஓகாசனம் உடல், உயிர், ஆவி, ஆன்மா ஆக நான்கையும் தரும், வலுப்படுத்தும்.
- யோகாசன பயிற்சிக்கு வேறு எந்த விதமான கருவியும் தேவையில்லை. ஆனால் ஓகாசனத்திற்கு கையால் பிடிக்கக் கூடிய பருமன் உள்ள பிரம்பு 8 சாண், 16 சாண் அளவு உள்ளவை தேவை. இதோடு ஆட்டுக்கிடாய் கொம்பு, மான்கொம்பு, குத்துவாள், வீச்சு வாள், ஈட்டி, வேல், திரிசூலம், கண்டகோடாலி, அரிவாள் முதலிய பல ஆயுதங்கள் தேவை.
- யோகாசன பயிற்சி பசி தரும். ஓகாசனப் பயிற்சி பசியிலாப் பெருநிலை தரும்.
- யோகாசனம் இல்லறத்தாருக்கு உரியது அல்ல. ஓகாசனம் இல்லறத்தாருக்கு உரியது.
- யோகாசனக் கலைஞன் பிறரைத் தாக்கத் தயங்க மாட்டான். ஓகாசனக் கலைஞன் தன்னைக் காக்க தற்காப்புப் போரை மட்டும் செய்வான்.
- யோகாசன கலைஞன் பொருள் முதல்வாதியாகவே இருப்பான். ஓகாசனக் கலைஞன் ஒரு அருளாளனாக, தத்துவ வாதியாகவே இருப்பான் (A philosopher or an Idealogist).
- யோகாசனக் கலையை புத்தகத்தைப் பார்த்தே கற்றுக் கொள்ளலாம் அல்லது ஆரம்ப நிலையை மட்டும் குருதேவரிடம் பயிற்சி பெறலாம். மற்ற நேரங்களில் தாமே பயிற்சி செய்து கொள்ளலாம். ஓகாசனக் கலையை ஒரு குறிப்பிட்ட பக்குவம் வரையில் குருவிடம் நேரடியாக மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பு:- குருவால் இட்டும், தொட்டும், சுட்டியும் விளக்கியே ஓகாசனக் கலைஞனை உருவாக்க முடியும்.