Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
  • ஹிந்துமதம் பொய்யானது - I
  • ஹிந்துமதம் பொய்யானது - I

    ஹிந்துமதம் பொய்யானது - I

    இந்து மதம் - ஹிந்து மத விளக்கக் கட்டுரைத் தொடர்-1

    இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.

    இன்றைய நாட்டு நடப்பில், நாத்திகர்களும், மத எதிர்ப்பாளர்களும் மதவரலாறுகளையும், மத இலக்கியங்களையும், தத்துவங்களையும் ஊன்றிப் படித்து வருகின்றார்கள். மதவாதிகள் அனைவரும் ஆர்வமோ, ஆழமான புலமையோ இல்லாதவர்களாகத்தான் வாழ்கின்றார்கள். இவற்றால்தான் (1984ஆம் ஆண்டுக் கணக்கின்படி) 43,73,085 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான மெய்யான இந்து மதத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்த வடஆரியர்கள் தங்களுடைய ஆபாசக் கற்பனைகள் மிகுந்த காட்டுமிராண்டிக் கதைகள் மிகுந்த, வாழ்வியலுக்குப் பயன்படாத நடைமுறைகளும் மிகுந்த தங்களுடைய வேத மதத்தால் உருத்தெரியாமல் சீரழித்துச் சிதைத்து விட்டார்கள். அதாவது, இன்றைக்குச் சொல்லப்படுகின்ற ஹிந்துமதம் உருவாயிற்று. இந்த ஹிந்து மதத்தால்தான் ஜாதிகள் வலுப்பட்டன. சாஸ்த்திர சடங்குகள், விரதங்கள் மிகுந்தன. மதமே மடமையும், மூடநம்பிக்கையும், ஆபாசமும் மிகுந்தது என்ற கருத்து வலுப்பட்டது.

    இந்த ஹிந்து மதத்தால்தான் அனைத்து வகையான முன்னேற்றங்களுக்கும், முட்டுக்கட்டைப் போடப்படுகின்றன என்று பகுத்திறிவு வாதிகளும், நாத்திகவாதிகளும் துணிந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இவற்றிற்கு எல்லாம் மேலாகச் சத்தியையோ, சித்தியையோ தர முடியாத சமசுகிருத மந்திரங்களால் அலுப்பும், சலிப்பும், புளிப்பும், தோல்வியும் அடைந்திட்ட உண்மையான பத்தர்கள் திகைத்து திணறி ஹிந்து மத மறுப்பாளர்களாகவும், வெறுப்பாளர்களாகவும் மாறிடும் நிலை ஏற்பட்டது. சமசுகிருத மதம் கூறும் புராண இதிகாசங்கள் ஏற்கனவே தமிழிலுள்ள மெய்யான இந்து மதத்தின் புராண இதிகாசங்களோடு வேறுபட்டும், மாறுபட்டும், முரண்பட்டும் தெளிவுக்கே வர முடியாத குழப்பநிலை பெற்றுவிட்டன. ஆன்மீகத் துறையிலுள்ள இலக்கியங்களின் பெயர்களையும், பழக்க வழக்கச் சம்பிறதாயங்களின் பெயர்களையும், பிற மத வாழ்வியல் நடைமுறைகளைக் குறிக்கும் சொற்களையும் சமசுகிருத மொழிச் சொற்கள் சிதைத்துப் புதிய பொருளற்ற சொற்களை உருவாக்கியும் முழுமையாகக் கொன்று முடி மறைத்து விட்டு பொருளுள்ள புதிய சொற்களை உருவாக்கியும் செயல்பட்டு விட்ட காரணத்தினால்தான், தங்களை போல் ஹிந்து மதம் என்ற ஒன்று இருக்கின்றதா? அதாவது, அனாதி காலத்துக்கு முன் விண்வெளியிலிருந்து வந்து பதினெண் சித்தர்கள் தங்களுடைய தாய்மொழியான அமுதத் தமிழ் மொழியில் வெளியிட்டதுதான் அண்டபேரண்டமாளும் மெய்யான இந்துமதம். இதற்கு தெளிவான வரலாறு உண்டு, பயன்மிக்க இலக்கியங்களும் உண்டு, நடைமுறைகளும் உண்டு.

    இவற்றையெல்லாம் வடஆரியர்கள் தங்களுடைய சமசுக்கிருத மொழியில்தான் நன்கு திட்டமிட்டுப் படிப்படியாக அடிப்படையோடு சிதைத்துச் சீரழித்து விட்டார்கள். இம்மாபெரும் மோசடியை, பித்தலாட்டத்தை, ஏமாற்றத்தை, சதியை, சூழ்ச்சியை ….. பதினெண் சித்தர் பீடாதிபதிகளால்தான் முறையாகவும், நிறையாகவும், இனங் கண்டு தெளிவாக விளக்கியுரைக்க முடியும். இதைத்தான் பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் செய்தார்கள். இருந்த போதிலும், நீடித்த நிலைத்து நிற்கக் கூடிய வெற்றிகளைப் பெற முடியாமல் போய்விட்டது. எனவேதான், ஏட்டுலகில், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் மெய்யான இந்து மதத்தின் மறு மலர்ச்சிக்கும், வளவளர்ச்சிக்கும், ஆட்சி மீட்சிக்கும் சாதனைகள் சாதிக்கப் படுவதோடு; நாட்டு நடப்பில் அருளை அனுபவப் பொருளாக வழங்கச் கூடிய அடியான்களும், அடியாள்களும், அடியார்களும், தோற்றுவிக்கப்பட்டுப் பரவலாக அருட்பணி விரிவாக்கத் திட்ட நிலையங்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட நேரிட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் மேலாக கற்றவர்களுக்கிடையில் தமிழ் மொழியுணர்வு, இனப்பற்று மிகு ஒற்றுமையுணர்வு, பண்பாட்டுப் பாரம்பரிய உரிமையுணர்வு ….. முதலியவைகள் விழிச்சி பெற்றும், எழிச்சி பெற்றும், செழிச்சி பெற்றும், இந்துமத மறுமலர்ச்சிக்குரிய பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

    இந்து மதத்தையும், ஹிந்து மதத்தையும் தனித்தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிச் செயல்பட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பதனை மெய்யான இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் புரிந்து கொண்டேயாக வேண்டும் என்பதற்காக மட்டும் சித்தர் நெறிச் செல்வர்கள் செயல்படத் துவங்கவில்லை. ஹிந்துமதத்தால் நிறைய

    இப்படி மிகத் தெளிவான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற காரணத்தால்தான் இவற்றிற்குப் பரிகாரம் தேடி, மேற்கண்ட ஹிந்து மதத்தையும், அதற்குரிய மனிதர்களையும், அவர்களின் முயற்சிகளையும் எதிர்த்துப் பேசிப் போராடி விமர்சித்து வீண்பொழுது போக்காமல்; நேரடியாக உண்மையான இந்து மதத்தின் வரலாறுகளையும், தத்துவங்களையும், செயல் சித்தாந்தங்களையும், அநுபவ நெறிகளையும், கடைபிடிக்க வேண்டிய சட்டதிட்டக் கட்டுப்பாடுகளையும், சடங்குகளையும், சம்பிறதாயங்களையும், பூசாவிதிகளையும் ஏட்டறிவாகவும், பட்டறிவாகவும் வழங்குகிற பணி இ.ம.இ.யின் மூலம் நடைபெற ஆரம்பித்து விட்டது.


    தொடர்புடையவை: