Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • ஆதிசங்கரர் வரலாறு
  • ஆதிசங்கரர் வரலாறு

    ஆதிசங்கரர் ஞானசித்தன் ஆதிசங்கரன்

    இமயமலைச் சாரலில் நிறைவு கொண்ட ஆதிசங்கரரின் உண்மை வரலாறு.

    குருபாரம்பரியம் குறிக்கும் தென்பாண்டித் தமிழன், ஞானசித்தன், உச்சிக்குடுமியான், வெள்ளாடையான், மந்திர சித்தியான் ஆதிசங்கரன் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஆதிசங்கரன் முதலாம் விசயாலயனின் அருளாட்சி முயற்சிக் காலத்தில் வாழ்ந்தவன். ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தென்னாட்டை பெளத்தம், சமணம், வட ஆரிய வேதமதம் … முதலியவைகளிலிருந்து காத்திடுவாரென்பது உணர்ந்து அவரின் அருளில் வடநாடு சென்றவனே ஆதிசங்கரன். இவன் வடநாட்டவர்க்காகவும், வட ஆரியர்களைத் திருத்துவதற்காகவுமே சமசுக்கிருத மொழியில் சித்தர்களின் உண்மையான இந்துமதத் தத்துவத்தை எழுதினான்.


    ஆதிசங்கரர் வரலாறு

    (வெள்ளாடை மேனியான், உச்சிக் குடுமியான், தென்பாண்டித் தமிழன், தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்)

    (கருவூறார் வழிவந்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமி பிள்ளை அவர்கள் வழங்கியது.)

    மேலும் படிக்க...


    ஞானசித்தர் ஆதிசங்கரன்

    ‘வெள்ளாடை மேனியான் உச்சிக்குடுமியான்
    தென்பாண்டித் தமிழன், திருமூலர் குருவழி வாரிசு
    திருவாசக தேவார சாரம் கண்டோன்
    வடபுலத்துச் சித்தர் நெறி பரப்பியோன்
    தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்
    சித்தர் இலக்கியம் பிறாமணர் பயில வழியமைத்தோன்
    தென்னக அருட்பேரரசுக்கு உதவியாக வடபுலத்து அருட்பேரரசு கண்டோன்’

    மேலும் படிக்க...


    ஆதிசங்கரர் - சங்கரர்

    ‘மெய்யான இந்து மதமும், பொய்யான ஹிந்து மதமும்’ வரிசையில் …!

    பிறமண்ணினரான பிறாமணர்கள் ஆதிசங்கராச்சாரியார் என்பவரும், சங்கராச்சாரியார் என்பவரும் ஒருவரே என்று கூறி வருகின்றனர். அதாவது, ஆதிசங்கராச்சாரியார் என்பவர் (காலடி ஆதிசங்கரன்) முதலாவது நபர் என்றும்; அவரின் அடியொற்றி வந்தவர்கள் சங்கராச்சாரியார் என்றும் கூறி மிகப் பெரிய குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனர். ஆனால் இதைப்பற்றி மிகத் தெளிவாகப் பதினெண்சித்தர்கள் கூறும் கருத்தென்ன என்பதை ஆராய்வோம்.

    மேலும் படிக்க...


    ஆதிசங்கரர் - அத்வைதம்

    எங்களுக்குத் தெரியும்! உங்களுக்கு!?……

    (1) அத்வைதம் என்ற பெயரினால் ஏமாற்று!

    மெய்யான இந்து மதத்திற்கு மேல் போக்கான வண்ணப் பூச்சாக உருவாக்கப் பட்டதுதான் பொய்யான ஹிந்துமதம். அனைத்துக்கும் ஒரே பரம்பொருள், அனைத்து உயிர்களுக்கும் ஒரே ஆன்மா என்ற கருத்துக்களை உள்ளிட்ட ‘அத்வைதம்’ என்ற தத்துவம். இந்த ‘அத்வைதம்’ முழுமையான கற்பனை. இந்த அத்வைத வாதிகளோ அனைத்துக் கோயில்களுக்கும் செல்கின்றனர்.

    மேலும் படிக்க...


    ஆதிசங்கரர் - சின்னச் சின்னச் செய்திகள்
    • காலடி ஆதிசங்கரர் காசியிலிருந்த போது கரூரிலிருந்து காக்கையரின் வேளாளர் குடியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் தேடி வந்து அடியானாக மாறினார்.

    • சந்தானத்தின் ஆழமான தமிழ்ப் புலமையையும், விரிவான இந்துமத இலக்கிய அறிவையும் உணர்ந்து போற்றி அவரைத் தலைமை மாணாக்கராக ஏற்றார் ஆதிசங்கரர். சமசுக்கிருத மொழிக்கு ஏற்ப அவரின் பெயரை சனந்தா (சுனந்தா) என்றழைத்தார். மற்றவர்கள் சனந்தர் என்றே அழைத்தனர்.

    மேலும் படிக்க...


    உலககுரு சகடகுரு ஆதிசங்கரர்

    உலக குரு, சகட குரு என்று பதினெண் சித்தர்களால் குறிக்கப்படும் சொற்கள் சமசுக்கிருதத்தில் லோககுரு, ஜகத்குரு என்று இன்றைய காஞ்சி மடத்து சங்கராச்சாரியார்களால் குறிக்கப்படுகின்றன.

    உலகம் = இம்மண்ணுலகைக் குறிக்கிறது.

    உலக + குரு –> லோக குரு

    மேலும் படிக்க...


    ஆதிசங்கரர் - தமிழனே

    ஆதிசங்கராச்சாரியார் என்பவர்கள் பதினெண்சித்தர்களின் நெறிப்படி சத்தி வழிபாடு, கன்னிப்பூசை, தாய்வழிபாடு … முதலிய பூசைகளைச் செய்பவர்களேயாவார்கள். இவர்களில் ஞானசித்தர்களும் தோன்றுவதுண்டு. இப்படித் தோன்றும் ‘ஞானசித்தர்கள்’ உலகியலுக்காகவாவது பெயரளவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, இல்லறத்தை ஏற்றவர்களாக இருக்க வேண்டும்.

    மேலும் படிக்க...


    ஆதிசங்கரர் - குருபாரம்பரியச் செய்தி.

    திருமாளிகைத் தேவர் குருபாரம்பரியத்தில் இருந்து காலடி ஆதிசங்கரர் பற்றிய செய்திகள்

    “….. என் தாத்தா பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி தன் காலத்தில் தோன்றிய தேவகுமாரப் பதிலி; சமயக் குரவர் சீர்காழித் திருஞான சம்பந்தரின் மறுபிறப்பு; கருவறை ஊழியம் புரியும் சிவாச்சாரியார் மரபுக் கொழுந்து; ஆலமர் கடவுட் புதல்வன் முருகனின் அருட் தோன்றல்; கருணீக்கச் சைவ வேளாள மரபின் குல விளக்கு; சேரநாட்டுக் காலடி சங்கராச்சாரியார் பிறப்பெடுத்ததை வானியலால் உணர்ந்து, உரிய காலத்தில் சென்று உரிய வண்ணம் அருளையும் அருளுரையையும் அருளார்ந்த அறிவுரையையும் தேவையான அருளூறு பூசைமொழிகளையும், பூசை வழிவகைகளையும் வாரிவாரி வழங்கித் தயாரித்தார்.

    மேலும் படிக்க...


    ஆதிசங்கரர் சித்தாந்தவாதியே!
    ஆதிசங்கரர் அத்வைத வாதியா? அல்லது சித்தர்களின் சித்தாந்தவாதியா? ஏனெனில், அனைத்தும் மாயை என்று கூறிய அவர் மாந்தரீக சக்கரங்களையும், தாந்தரீகப் பூசாவிதிகளையும், வேதப் பாராயணங்களையும் நம்பியே வாழ்ந்திருக்கிறார்.

    மேலும் படிக்க...