Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • ஆதிசங்கரர் வரலாறு>
  • உலககுரு சகடகுரு ஆதிசங்கரர்
  • உலககுரு சகடகுரு ஆதிசங்கரர்

    உலககுரு சகடகுரு ஆதிசங்கரர்

    உலக குரு, சகட குரு என்று பதினெண் சித்தர்களால் குறிக்கப்படும் சொற்கள் சமசுக்கிருதத்தில் லோககுரு, ஜகத்குரு என்று இன்றைய காஞ்சி மடத்து சங்கராச்சாரியார்களால் குறிக்கப்படுகின்றன.

    உலகம் = இம்மண்ணுலகைக் குறிக்கிறது.

    உலக + குரு –> லோக குரு

    இம்மண்ணுலகப் பயிரின உயிரினங்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து அநுபவிக்க வழிகாட்டியாக இருப்பவர்.
    மண், பெண், பொன் … அனைத்தையும் ஏற்று அநுபவிப்பவரே.

    சகடம் = இயங்கிக் கொண்டே இருக்கும் இம்மண்ணுலகமும் மானுட வாழ்வையும் குறிக்கும்.

    இம்மனித வாழ்வைத் தாங்கிச் செல்லும் வண்டி போன்று இருப்பவரைக் குறிக்கும்.

    சகட + குரு –> சகத்குரு.

    இப்பொருளிலேயே பதினெண்சித்தர்கள் ஆதிசிவாச்சாரியார், ஆதிபரமாச்சாரியார், ஆதிசங்கராச்சாரியார், ஆதிஈசுவராச்சாரியார் எனும் நான்கு ஆச்சாரியார்களுக்கு மட்டுமே உலககுரு, சகத்குரு என்ற பட்டங்களை வழங்கியுள்ளனர்.

    இதைப் புரிந்து கொள்ளாமல் பிறாமணர்கள் தங்களின் கற்பனையான துறவுக் கோலக் காலடி ஆதிசங்கராச்சாரியாரைப் பின்பற்றித் தோற்றுவித்துக் கொண்ட ஆச்சாரியார்களுக்கும் உலககுரு –> லோககுரு, சகட குரு –> சகத்குரு = ஜகத்குரு என்று சமசுக்கிருத மொழி ஒலிக்கேற்ற ‘லோககுரு’, ‘ஜகத்குரு’ என்ற சொற்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

    குறிப்பு:-

    ஆனால், துறவியாக, பிரம்மச்சாரியாக வாழும் இன்றைய சங்கராச்சாரியார்கள் தங்களை லோககுரு (உலககுரு), ஜகத்குரு (சகட குரு) என்று குறிப்பது தவறே! கேலிக் கூத்தே!


    தொடர்புடையவை: