பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் முன்னுரை
அருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, குருதேவர் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் குவலய குருபீடம், குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார்
“சித்தர் நெறி” எனும் “மெய்யான இந்துமதம்” பற்றிய விளக்கங்களையும், வரலாறுகளையும், நாயகநாயகிகளின் வாழ்வியல்களையும், போதனைகளையும், சாதனைகளையும், அடிப்படைத் தத்துவங்களையும், செயல் சித்தாந்தங்களையும், … முறையாக வழங்கும் பணி அணிபெற்றால்தான் ‘உலக ஆன்ம நேய ஒருமைப்பாடும்’, ‘உலகச் சமய ஒற்றுமையும்’, ‘உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயமும்’, ‘மொழிவிடுதலையும்’, ‘இன விடுதலையும்’, ‘பண்பாட்டுரிமையும்’, ‘நாகரிக உரிமையும்’, ‘நாடுகளின் தன்னாட்சிப் பெருமையும்’, ‘தனிமனிதத் தன்னம்பிக்கை மிகு தன்மானப் பிடிப்பும்’, ‘உலக அருளாட்சிச் செழுமையும்’, … உருவாகிடும்!
மேலும் படிக்க...
குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி வழங்குவது:
பிற்காலச் சோழப் பேரரசை (கி.பி.785 - 1279) ஓர் அருட்பேரரசாகச் செயல்பட உருவாக்கிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்; தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி நிறைவு செய்யும் நிலையில் வெளியிட்ட பதினெட்டு அருளாட்சி ஆணைகள். இவர் உருவாக்கிய தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறை ஆசிரியர்களும் மாணாக்கர்களும் விரும்பி ஏற்றுப் போற்றிப் பேணிப் பரப்பிட்ட சிறப்பினைப் பெற்றவை இந்த ஆணைகள்.
இந்தப் பதினெட்டு அருளாட்சி ஆணைகளைத் தஞ்சைப் பேரரசின் ஆணைகளாக அறிவிக்கத் தயங்கினான் முதலாம் இராசராச சோழன் எனும் அருள்மொழித் தேவன். இவன் ஏற்கனவே தனது அண்ணனும், சோழப் பேரரசின் இளவரசனும் ஆன ஆதித்த கரிகாலனின் கொலை பற்றிய விசாரணையில் பொறுப்பில்லாமல் காலதாமதம் செய்ததால்; பீடாதிபதியின் கோபத்திற்கு ஆளாகியிருந்தான்.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் (பார் ஆண்ட தமிழர்கள் பராரிகளைப் போலப் பிறரின் பாதுகை தாங்கி வாழும் பரிதாப நிலைகளைப் போக்கிடும் ஆற்றல் இந்தப் பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளுக்கு உண்டு.)
கோயில்கள் வழி மட்டுமே நிகழ வேண்டிய அருளாட்சி, பொருளாட்சி:
தமிழர்கள் தங்களுடைய இனத்தைச் சார்ந்தவர்களை அதிகமாக விரும்பவும், நம்பவும், மதிக்கவும், துணையாக ஏற்றுக் கொள்ளவும், வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளவும் …. நிகழ வேண்டும். அப்பொழுதுதான், தமிழினம், தன்னம்பிக்கையும், இன ஒற்றுமையும், விடுதலை வாழ்வும் பெற்றிட முடியும். இதற்காகத் தமிழ் இனநல அலுவலகங்களாகச் செயல்படும் கோயில் சொத்துக்களும் (அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்கள், கருவறைகள், வெட்டவெளிக் கருவறைகள் முதலியவற்றையும் கோயில் என்ற சொல் இங்கு குறிக்கின்றது.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 11வது ஆணை
தமிழன் ஒற்றுமைப்பட வேண்டியதின் அவசியம் தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களைப் பற்றிய விவரங்களும் அவற்றின் சிறப்புக்களும் ஒவ்வொரு கோயிலிலும் அறிவிக்கப் படுகின்ற ஏற்பாடுகள் பல செய்யப் பட்டாக வேண்டும். இதற்காகத் தமிழகத்திலுள்ள கருவறை ஊழியர்கள், மற்றக் கோயில் பணியாளர்கள் கட்டாயமாக அவரவரால் இயன்றளவு தமிழகத்திலுள்ள பல கோயில்களுக்கும் சென்று தங்கி அறிவை வளர்த்துக் கொள்வதோடு; கோயில் ஊழியர்களுக்கிடையிலும், கருவறை ஊழியர்களுக்கிடையிலும் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எல்லாச் சாதியார்களும் அவரவர் ஊழ்வினைப் படியும், விதிப்படியும், ஆர்வப் படியும், முயற்சிப் படியும் இந்துமதத்தின் ஊழியராக, குருமார்களாக, குருக்கள்களாக, பூசாறிகளாக, பண்டாரங்களாக உயர்வதற்கு வழிவகை பிறந்திடும்.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 12வது ஆணை
மெய்யான இந்துமதப் பயிற்சி முறைகள் கோயில் கலைஞர், கூத்தர், மருத்துவர், இசை வேளாளர், ஆசாறியார், ஆசிரியர், பண்டாரம், பூசாறி, குருமார், குருக்கள்…. முதலியவர்களுக்கு அன்றாட உணவும், ஆண்டுக்கு இருமுறை உடையும், ஊதியமும் வழங்கப் படல் வேண்டும். அதாவது உரியவர்களின் உழைப்பு ஆய்வு செய்யப்பட்டு அவ்வப்போது ஊதிய உயர்வும், கூடுதலான ஊதியமும், நன்கொடையும், பரிசும் வழங்கப் படல் வேண்டும். அப்பொழுதுதான் சமுதாயத்திற்கும், அரசியலுக்கும் தேவையானவர்களை உருவாக்குகின்ற ஒரு சாதனமாகச் சமயம் பயன்பட்டிடும். இல்லாவிட்டால், சமயம் சத்திரம் சாவடிகளால் சோம்பேறிகளையும், பிச்சைக்காரர்களையும், கருத்துக் குருடர்களையும், பொருள் திருடர்களையும், மூடப் போக்குடையவர்களையும் அதிகமாக உருவாக்குகின்ற ஒன்றாகிடும்.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 13 வது ஆணை
மெய்யான இந்துமதத்தில் பெண்களின் முக்கியத்துவம் பொய்யான ஹிந்து மதத்தால் பெண்கள் விதவையாக்கப் பட்டு ஒதுக்கி வைக்கப் படுவதும்;
மாதந்தோறும் மங்கையர்கள் பூப்படையும் போது அதனைத் தீட்டு என்று கூறி அவர்களை அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் ஒதுக்கி வைப்பதும்;
ஆணுக்கு மட்டுமே மறுமணம் என்று கூறி பெண்ணின் வாழ்வைப் பாழாக்குவதும்;
பெண்ணை விதவை என்று கூறிப் பிறந்ததிலிருந்து அணிந்து மகிழும் பூ, மஞ்சள், குங்குமம், பொன்நகைகள் துறக்கச் செய்து துன்புறுத்துவதும்;
ஆண் மட்டுமே விருப்பத்திற்கேற்ப மறுமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிப் பெண்ணை அச்சுறுத்தி அடிமையாக்குவதும்;
‘ஐந்தீ வேட்டல்’, ‘முத்தீ ஓம்பல்’, ’48 வகையான கருவறை ஊழியக்காரர்களின் பணிகள்’ முதலியவற்றில் ஒன்றினைக் கூடப் பெண்கள் செய்யக் கூடாது என்று கூறிப் பெண்களை அருளுலகில் எந்தவொரு அருள் நிலையையும் பெறாத இருள்நிலையைப் பெறுமாறு செய்தும்;
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 14வது ஆணை
தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமே அதிகாரிகளாக, அலுவலர்களாக பணிபுரிய நியமிக்கப்பட வேண்டும். ‘மெய்யான இந்துமதமே உலக மதங்கள் அனைத்துக்கும் தாய்’,
‘தமிழ்மொழியே உலகமொழிகளுக்கெல்லாம் தாய்’,
‘தமிழினப் பண்பாடு உலகப் பண்பாடுகளுக்குத் தாய்’,
என்ற இந்தப் பேருண்மைகளால்தான் உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். ஆனால் இதற்காக மெய்யான இந்துமதம் தனது தனித் தன்மையை இழந்து விடக் கூடாது. தன்னுடைய இலக்கிய இலக்கணச் செல்வங்களை பிறமொழிகளின் வேட்டை பொருளாக்கி விடக் கூடாது.
இதே போலத்தான் தமிழர்கள் உலக அளவில் பரந்து விரிந்துபட்ட ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்பதற்காகத் தங்களின் இன வரலாறுகளின் பண்பாடுகளையும், உரிமைகளையும், பெருமைகளையும், பிற இனத்தவர்க்கு காணிக்கையாக்கி அடிமைகளாக்கி விடக் கூடாது.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 15 வது ஆணை
கோயில் நிறுவன நிருவாகப் பொறுப்புக்கள் அனைத்தும் தமிழர்களால் மட்டும் நிகழ்த்தப்பட ஏற்பாடு செய்யவேண்டும். அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களிலும், கருவறைகளிலும், வெட்டவெளிக் கருவறைகளிலும் ஊழியம் புரிகின்ற அனைத்து வகையான ஊழியக் காரர்களுக்கும் நிறைவான ஏட்டறிவும், பட்டறிவும் வழங்குவதற்குரிய பயிற்சிகள் கருகுலங்களின் மூலமும், குருகுலங்களின் மூலமும், தருகுலங்களின் மூலமும், திருகுலங்களின் மூலமும் வழங்கப் பட்டேயாக வேண்டும்! வழங்கப் பட்டேயாக வேண்டும்! வழங்கப் பட்டேயாக வேண்டும்!
இதற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளையும் அவசியம் நேரடிப் பார்வையில் அந்தந்த வட்டாரத்து மக்களால் நிகழுமாறு செய்ய வேண்டும். இதற்குரிய பணிகளையும் கோயில் நிறுவன நிர்வாகங்களையும் கவனிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களிலும் செயல்படக் கூடிய ஏழு கரையினர்களாக (கூட்டத்தினர்களாக) ஒவ்வொரு வட்டாரத்து மக்களையும் பிரித்திடல் வேண்டும்.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 16வது ஆணை
தமிழர்களின் உலக முதன்மை நிலை ஈராயிரம் ஆண்டுகளாக மட்டுமே வீழ்ந்து கிடப்பதையும், அதை உடனடியாக மீட்க வேண்டியதின் அவசியமும். பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதம் பிறந்து வளர்ந்த இளமுறியாக் கண்டம் எனும் குமரிக் கண்டம் இரண்டு பெரிய கடல் கோள்களால், முறையே பஃறுளி ஆற்றங் கரையிலிருந்த தொன்மதுரையின் அருளாட்சிக்குட்பட்ட மிகப் பெரிய பகுதிகளை முதலிலும், குமரி ஆற்றங்கரையிலிருந்த தென்மதுரையின் அருளாட்சிக்குட்பட்ட மிகப் பெரிய பகுதிகளை இரண்டாவதாகவும் கடலுக்குள் இழந்தது.
மிஞ்சிய சிதறிய சிறுசிறு நிலப் பகுதிகளில் மிகப் பெரிய பகுதியே விந்தியத்திற்குத் தெற்கே உள்ள தமிழகம். அதாவது, தென் இந்து நாடு.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 17வது ஆணை
பிறாமணர்களின் சாதுரியமும், அதனை வெல்ல வேண்டிய விதமும் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் நுட்பமான திட்டமிட்ட சூழ்ச்சிகளால் தமிழர்களை வீழ்த்தித் தாழ்த்திச் சுரண்டுகிறார்கள், அடிமைப் படுத்தி யிருக்கிறார்கள், ஒற்றுமை யிழந்து நிற்குமாறு செய்திருக்கிறார்கள். ஆனால், சீனர்களோடும், யவனர்களோடும், சோனகர்களோடும், வடபுலத்தார்களோடும், புத்த மதத்தார்களோடும், சமண மதத்தார்களோடும் மிகமிகச் சாதுரியமாக நட்போடும், தோழமையோடும் பழகி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிறாமணர்கள் தமிழர்களை என்றென்றும் இனப்பற்றோ, மொழிப் பற்றோ, நாட்டுப் பற்றோ, ஒற்றுமை யுணர்வோ தோன்றாதபடி பல பிரிவினர்களாகப் பிரித்து ஒருவரோடு ஒருவர் வேறுபட்டும், மாறுபட்டும், சண்டை சச்சரவுகளையும், போர்களையும் நிகழ்த்திக் கொண்டே யிருக்குமாறு செய்துள்ள சதிகளுக்குத் துணையாகவே எல்லாவித மாற்று மதத்தவர்களையும் தங்களுடைய நண்பர்களாகவும், தோழர்களாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 18வது ஆணை
சாதிகளை ஒழிக்க வேண்டிய விதம் XVIII. எட்டுப் பேர்கள் அருட்பேரரசுக்குரிய அரியணையில் அமர்ந்த பிறகுதான் அருள்மொழித்தேவன் உருவாக முடிந்தது. இதனை மறந்தே இராசராசன் தன்னிச்சையாகத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறான். இந்துமத மறுமலர்ச்சிக்காக உருவாக்கப் பட்ட அருட்பேரரசு; பிறாமணர்களின் சனாதன வேதமத வளவளர்ச்சிக்காக மட்டுமே உழைக்கின்ற அவல நிலை பிறந்து விட்டது.
இதனால் போர் வீரப் பரம்பரையினரில் தொழிலால் படையாட்சி, கள்ளர் (ஒற்றர்), மறவர், தேவர், அம்பலம், அரையர் (ராயர்), முதலி, பிள்ளை, பண்டாரம், அய்யர், ஆசாறி, #ஒட்டார் (#போரில் ஈடுபடாத வேலையாட்கள்), $சாத்தார் ($போர்த் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளை ஓட்டுபவர்கள்), பறையர் (போரில் பறையடிப்போர்), aதுடியர், bகடம்பர், cபாணர் ( a,b - இசைக் கருவி இயக்குவோர், c - வாய்ப்பாட்டு பாடுவோர்) dநாயக்கர் (d - படைப் பிரிவுகளில் சிறு பிரிவுகளின் தலைவர்), eசேனாதிபதி (e பெரிய படைப் பிரிவுகளின் தலைவர்) ….
மேலும் படிக்க...
பதினெண்சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்
நிறைவுரை அருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, குருதேவர் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், குவலய குருபீடம், குருமகா சன்னிதானம் , ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்.
இந்த நிறைவுரை தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எழுதிய குருபாரம்பரிய வாசகங்களையும்; செவிவழியாக வாழுமாறு செய்த குருவாக்கியங்களையும்; பிறர் எழுதி வைத்துக் காத்த குருவாக்கியங்களையும், வாசகங்களையும்; நாமக்கல் மோகனூர் உருத்திரம்பிள்ளை தொகுத்து வைத்த குறிப்புக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு கண்டப்பக் கோட்டை சித்தர் ஏளனம்பட்டியார் எழுதியவைகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
மேலும் படிக்க...
பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்
முடிவுரை இந்தப் ‘பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்’ என்ற கட்டுரை சேலம் மாவட்டம் மோகனூர் உருத்திரம் பிள்ளையால் உரைநடையில் எழுதப்பட்டு (அதுவரை இந்தப் பதினெண் சித்தர் பீடாதிபதியின் அருளாட்சி ஆணைகள் கவிதை நடையில் இருந்திட்டன), கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம் பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளையால் மீண்டும் படியெடுக்கப் பட்டது. பிறகு, இந்த ஆணைகள் கரூர் முடிகணம் காக்காவழியன் பண்ணையாடி சித்தர் காக்கையர் எனப்படும் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட “தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வரலாற்றின்” பன்னிரண்டு தொகுதிகளில் பன்னிரண்டாவது தொகுதியின் இறுதிப் பகுதியாக அமைக்கப் பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...