Gurudevar.org
 • அறிமுகம்>
 • மெய்யான இந்துமதம்
 • மெய்யான இந்துமதம்

  இந்துமதம் இந்த உலகில் மண் தோன்று முன் கற்பாறைகள் மட்டுமே தோன்றியிருந்த காலத்தில் பதினெண்சித்தர்கள் எண்ணற்ற முறை இங்கு வந்து தங்கி ஆய்வுகள் நிகழ்த்தி இந்த உலகம் (48 இலட்சம்) நாற்பத்தெட்டு நூறாயிரம் ஆண்டுகள் கழிந்து அழியும் என்று முடிவு செய்தனர். மானுட இனம் அழிந்த பிறகு இந்த உலகம் இருண்டு முழுமையாகச் சிதைய ஐந்து நூறாயிரம் (ஐந்து இலட்சம்) ஆண்டுகள் ஆகிடும்.

  எனவே, பதினெண்சித்தர்கள் இந்த உலக அருவங்கள், உருவங்கள், அருவுருவங்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு நாற்பத்தெட்டு எண்ணிக்கைகளைப் பெற்ற பல நிலைகளை உடைய இந்து மதத்தைத் தங்களின் தாய்மொழியான தமிழ்மொழியில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே படைக்க ஆரம்பித்திட்டார்கள்.

  [expand]

  ‘இந்து’ என்ற சொல்லை ‘விந்து’, ‘உயிரணு’, ‘உயிரின் கரு’, உயிரின் ஆரம்பமும் முடிவும், ஒளி, ஒலி, வலிமை, வளம், அழகு, இளமை, இனிமை, அன்பு, அமைதி, நிறைவு, நிம்மதி, ஒற்றுமை, உறவு, உரிமை, பற்று, பாசம், நேர்மை, வாய்மை, தூய்மை, மெய்ம்மை, துய்ப்பு, பத்தி, சத்தி, சித்தி, முத்தி, நிலைப்பேறு, பிறப்பிறப்பற்ற பெருநிலை, தவம், ஞானம், … எனும் நாற்பத்தெட்டு வகையான பொருளுணர்வை குறிக்கும் சொல்லாகவே படைத்தனர். எனவேதான், இந்துமதம் உலக மானுட இனத்தைப் பண்படுத்திடும் வழியாய், வழிகாட்டியாய், வழித்துணையாய், வழிப்பயனாய் என்றென்றும் இருந்து வருகின்றது.

  இந்த உலகை ஒன்பது கோள்களும், பன்னிரண்டு இராசிகளும், இருபத்தியேழு விண்மீன்களும் (நட்சத்திரங்கள்) ஆக நாற்பத்தெட்டு எனும் விண்ணுலகச் சத்திகளே ஆட்டிப் படைக்கின்றன. இவற்றிலிருந்து தப்பிக்கப் பரிகாரப் பூசைகளை விளக்குவதே இந்துமதம்.

  தமிழர் மதமே இந்து மதம்.

  [/expand]

  அருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி

  இந்து மறுமலர்ச்சி இயக்கம் (பண்பாட்டுக் கழகம்) தோற்றம்: கி.பி.1772

  1. பதினெண்சித்தர்களின் வாழ்வியல் நெறியான “சித்தர் நெறியே” இந்து மதம். இதில் கலந்து விட்ட மூடநம்பிக்கைகள், மடமைகள், கற்பனைகள்,…. முதலியவற்றை பயிற்சிகள் தருவதன் மூலம் அகற்றுவதே நோக்கம்.

  மேலும் படிக்க...


  அன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்

  அருட்சத்தி என்பது பொதுவான மனித அறிவின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருட்சத்தியால் மனித வாழ்வின் அனைத்து வகையான தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் சரி செய்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் மனித வாழ்வில் அறிவியலால் நலப்படுத்த முடியாத அனைத்து வகையான குறைகளையும் அருட்சத்தியால் நலப்படுத்த முடியும்.

  மேலும் படிக்க...


  சித்தர் நெறி சிறு விளக்கம் .

  சோதிடம், பிறப்பியல், மனையியல், அங்கவியல், கைரேகை, பஞ்சாங்கம், பூசை, தவம், மந்திரம் …. முதலியவை மனித மனத்துக்கு நிறைவையும், சிந்தைக்குத் தெளிவையும், உணர்வுக்கு அமைதியையும், செயலுக்கு உறுதியையும், எண்ணத்துக்கு உரத்தையும், வாழ்வுக்குக் கவர்ச்சியையும் நல்கிடும்! நல்கிடும்! நல்கிடும்! வேறு எதனாலும் இவற்றைப் பெற முடியாது, விலை கொடுத்து வாங்க முடியாது.

  மேலும் படிக்க...


  இந்துமதம் என்பது எது ?

  மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான ‘சித்தர் நெறி’ உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் = அன்னியர் = வெளிநாட்டவர் - ‘ தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ஆதியில் இருந்த பயன்மிக்க, நன்மைமிக்க, உண்மையான இந்து மதம் பாதியில் கற்பனை, பொய், மடமை…. முதலியவைகளால் நலிவுற்று மெலிந்தது.

  மேலும் படிக்க...


  இந்துமதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம்
  10வது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகம்.

  மேலும் படிக்க...