இந்து மத எழுச்சியே இந்தியாவின் செழுச்சி!

இந்தியாவின் செழுச்சியே இம்மானுட நல விழிச்சி!

இந்த மெய்யான இந்துமதம் பற்றிய உண்மைகளை முதலில் தமிழர்கள், பின் இந்தியர்கள் புரிந்து கொண்டால் இன்றைக்கு இருக்கும் அனைத்து விதமான போராட்ட நிலைகளும், ஆதிக்க நிலைகளும், பொருள் ஆதாரம் பற்றிய மயக்க நிலைகளும், குழப்ப நிலைகளும், கேவலங்களும், அவலங்களும்,  ... உலக அளவில் அகன்று விடும்.

எனவேதான், கி.மு.43,71,101இல் இந்துமதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் பீடாதிபதிகளே காலங்கள் தோறும் தோன்றித் தோன்றி இந்துமதம் மறுமலர்ச்சி, வளவளர்ச்சி, வலிமைமிகு ஆட்சிமீட்சி,... முதலியவைகளைarasayogi நிறைவேற்றும் இந்துமதத் தந்தையாக, உலக மானுட நலக் காவலராக விளங்குகின்றனர்.

  இந்தப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் வழியில் 11 பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்குப் பின் இராசிவட்ட நிறைவுடையாராக திருத்தோற்றம் நல்கியவரே குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள். (கி.பி.1936முதல்). இவர் கருவிலேயே பெற்ற திருவுடன் இலைமறை காயாகவே செயல்படுகின்றார்..

  இவர் சாதி, இன, மொழி, நாட்டு...வேறுபாடுகளோ, வெறிகளோ இல்லாமல் 'உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும்', 'உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தையும்' உருவாக்கும் பணியில் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

  இவர்

..... என்ற கருத்து விளக்க வாசகங்களை வழங்கி உலக மத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகின்றார்....

மறுமலர்ச்சிப் பணி.

'.... தனிமனிதன் செம்மைப்பட்டால்தான் அக் குடும்பமே செம்மைப்படும். ஒரு குடும்பம் செம்மைப் பட்டால் ஒருThaathaa சமூகமே செம்மைப்படும். ஒரு சமூகம் செம்மைப் பட்டிட்டால் அந்த இனத்தின் அனைத்துப் பிரிவு மக்களுமே செம்மைப் பட்டிடுவர். அப்படி ஓர் இனம் செம்மைப் பட்டிட்டால் படிப்படியாகப் பல இனங்களும் செம்மைப்பட்டு உலகமே செம்மைப் பட்டிடும் ..... அதனால்தான் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் காலங்கள் தோறும் தோன்றி இம்மண்ணுலக மூல இனமும் முதல் இனமுமான தமிழினத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். இப்படித்தான் உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டையும்; மானுட நல மேம்பாட்டையும் ..... படிப்படியாக உருவாக்கியே உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தைத் தோற்றுவிக்க முடியும். அதுவே, விண்ணும் மண்ணும் இணையும் நிலை. ..... அந்நிலைக்காகவே கலியுகத்தில் இந்து மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவிக்கப்படுகின்றது ......'

-- பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் (கி.பி.785-கி.பி.1040) அவர்களின் குருபாரம்பரிய வாசகம்.

தமிழே அருளுலக ஆட்சி மொழி; தமிழரே இம்மண்ணுலகின் வழிகாட்டிகள்.

தமிழர்கள்தான், இம்மண்ணுலகின் அருளுலக வாரிசுகள், வழிகாட்டிகள், தத்துவ வித்துக்கள் .....  தமிழினம் குறையும்போது அருளுலகம் இருண்டு போகும், வறண்டு போகும். அநீதி அரசாட்சி செய்யும். திருடர்கள் காவலர்களாக இருப்பார்கள். அயோக்கியர்கள் நீதிபதியாக இருப்பார்கள்.

- சித்தர்களின் அருள்வாசகம், மருள்வாசகம்

சித்தர்கள் யார்?

Wrong list of Siddharsஇன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும் அகத்தியர், திருமூலர், இடைக்காடர், போகர், புலிப்பாணி, அகப்பையர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பையர், சட்டைநாதர் ...  என்ற பட்டியலில் உள்ளவர்கள் மூலப் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர்.காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong imageஆதிசங்கரர் உண்மையான வரலாறு
Jesusகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே!
கடவுள் யார்?

யார் பெரியார்?

உண்மையான காயந்திரி மந்தரம்
kaayanthiriஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.