Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • தமிழ்மொழி
  • தமிழ்மொழி

    இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால் பேசப்படுகின்ற மொழிகளிலேயே முதல்மொழியாக அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக (அனைத்து மொழிகளின் ஒலிகளையுடைய ஒரே மொழியாக) விளங்குவது இத் தமிழ்மொழிதான்.

    இந்தத் தமிழ்மொழிதான் பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் எழுத்து மொழியும் (The Literary Language or Diction), பேச்சுமொழியும் (The Conversational Language or Diction) ஒரே மாதிரியாக இருக்கக் கூடிய சிறப்பைப் பெற்றிருக்கின்றது.

    இந்தத் தமிழ்மொழியில்தான் ஆரம்பக் காலம் முதல் இன்றுவரை இடைவிடாமல் தொடர்ந்து அருளாளர்கள் தோன்றி அருளூறும் வாக்குகளையும், வாக்கியங்களையும், வாசகங்களையும் வழங்கி வருகிறார்கள். இந்தத் தமிழ்மொழிதான் பதினெண்சித்தர்களால் ‘அண்டபேரண்டமாளும் அருளுலக ஆட்சிமொழி’ என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

    இந்தத் தமிழ்மொழிதான் ‘அருள் மொழி’, ‘ஆண்டவர் மொழி’, ‘இறை மொழி’, ‘உயிர் மொழி’, ‘உயிர்ப்பு மொழி’, ‘எல்லா மொழி’, ‘கடவுள் மொழி’, ‘தெய்வ மொழி’, ‘தேவ மொழி’, ‘மாறாத இளமையுடைய கன்னி மொழி’, ‘அமுதத் தமிழ் மொழி’, ‘செந்தமிழ் மொழி’, ‘பைந்தமிழ் மொழி’, ‘வண்டமிழ் மொழி’ என்றெல்லாம் பாராட்டப்படுகிறது.


    காலக் கணக்கீடு.

    பதினெண்சித்தர்கள் தரும் வரலாற்றுக் காலக் கணக்கீடு

    சிவபெருமான் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்பதால், அவர் ‘ஞானாச்சாரியாராக’, ‘குவலய குருபீடமாக’, ‘இந்துமதத் தந்தையாக’, ‘தத்துவ நாயகமாக’, ‘அருளாட்சி நாயகமாக’, … தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண்சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார்.

    மேலும் படிக்க...


    இந்திய மொழிகள்.

    தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்ட இந்தியாவில் பிறமொழிகள் பிறந்த விதம்.

    மேலும் படிக்க...


    கொள்கை விளக்கம்.

    தமிழின மொழி, மத விடுதலை இயக்கம் - கொள்கை விளக்கம்.

    மேலும் படிக்க...


    இயக்கத்தின் கொள்கை விளக்கம்

    இம்மண்ணுலக அகப் பண்பாடுகளுக்கும் புற நாகரீகங்களுக்கும் அடிப்படையான மதங்களின் மூலமதமான ‘மெய்யான இந்துமதமே’ தமிழருடைய மதம். இம் மதம், அறியாமைகளாலும், புரியாமைகளாலும், தெரியாமைகளாலும் பல்வேறு பிரிவுகளையும், திரிபுகளையும், மாற்று வடிவங்களையும், சிதைவுகளையும், மொழியாட்சிகளையும் பெற்றுவிட்டது.

    மேலும் படிக்க...


    கொள்கை விளக்க - அறிமுகவுரை

    இந்து மறுமலர்ச்சி இயக்கம்

    தோற்றம்: கி.பி.1772

    தமிழின மொழி மத விடுதலை இயக்கங்களின் கொள்கை விளக்க அறிமுகவுரை

    மேலும் படிக்க...


    உலக ஆன்மீக விடுதலை
    தமிழினம்தான், இம்மண்ணுலகில் தோன்றிய முதல் இனம், மூத்த இனம்.

    மேலும் படிக்க...


    தமிழர் மதமே இந்துமதம்

    “இந்துமதத்தின் ஆறு சமயங்கள்” (ஆறு பதினெட்டுக்கள்)

    1. இந்துமதச் சமயம் ஒவ்வொன்றும் பதினெண்சித்தர் வடிவாக, வாழ்வாக, அருளூறு இலக்கியங்கள் பதினெட்டினைப் பெற்றிருக்கிறது.

    மேலும் படிக்க...


    பிறாமணரால் தமிழர் வீழ்ச்சி

    நாமறிய, இந்தக் கலியுகத்தில் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் இந்து மதத்துக்குரிய இந்தியாவுக்குள் நுழைந்த நாள் முதல்; இந்தியா முழுதும் பரவியிருந்த தமிழர்களின் அகவாழ்வுக்கும், புறவாழ்வுக்கும் பல்வேறு வகையான சிதைவுகளும், சிக்கல்களும், சீரழிவுகளும் சிறுகச் சிறுகத் தோன்ற ஆரம்பித்து விட்டன.

    மேலும் படிக்க...


    கருவூறார் அருளுரைகள்
    • மொழியுரிமைகளைப் பேணுவது இந்து மதமே! His Holiness 11th Pathinensiddhar Peedam
    • இன விடுதலைகளைப் போற்றுவது இந்து மதமே!
    • நாட்டுத் தன்னாட்சிகளைக் காப்பாற்றுவது இந்து மதமே!
    • மேலும் படிக்க...


    திருவள்ளுவர் பற்றி

    தமிழிலக்கிய சிறப்பு மலர்

    (1) தமிழ் நாட்டிலுள்ள தலைவர்கள், வழிகாட்டிகள், வழித்துணைவர்கள் என்ற மூன்று நிலையினருமே இனத்துக்கோ, நாட்டுக்கோ, பண்பாட்டுக்கோ நிலையானத் தொண்டு செய்பவர்களாகவோ, வழங்காதவர்களாகவோதான் இருந்திடுகின்றார்கள். இதற்குக் காரணம் தமிழ் மொழி அறிவோ, இலக்கிய அறிவோ, வரலாற்று அறிவோ இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் அனைத்துத் துறைகளிலும் முதல்நிலைச் செயல்வீரர்களாகவும், தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், வழித் துணைவர்களாகவும் இருக்கின்றார்கள்.

    மேலும் படிக்க...


    தமிழனைத் தமிழனாக்குவது
    ‘தமிழனைத் தமிழனாக்குவதே சிறந்த தவம்’, … … இப்படி குருவாசகங்களை கணக்கற்று எல்லாக் குறிப்பேடுகளிலும் குருபாரம்பரியத்திலும் எழுதிச் செல்லுகிறோம் யாம். இவற்றின் மூலமாவது கணக்கற்றோரின் முயற்சியால் என்றாவது ஒருநாள் தமிழன் தமிழனாக்கப்படுவான். அப்படி, தமிழன் தமிழனாக்கப் பட்ட பிறகுதான் இந்துவேதம் வளவளர்ச்சியையும், ஆட்சிமீட்சியையும் பெற்றிடும். அதையொட்டியே, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும், ஆட்சிமீட்சி பெற்றிடும். - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

    மேலும் படிக்க...


    குருவாக்கியங்கள்
    … … குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்களில் பல்வேறு மொழியினர்களும், பல்வேறு இனத்தவர்களும் இருந்த போதிலும் எல்லா இந்துக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சில குருவாக்கியங்களை இங்கு குறிப்பிடுகிறோம். இந்தக் குருவாக்கியங்களாவது தமிழ்மொழிக்கும் இந்துவேதத்துக்குமுள்ள இணைப்பையும், பிணைப்பையும் தமிழர்களுக்காவது உணர்த்தட்டும், உணர்த்தட்டும், உணர்த்தட்டும் என்ற அறிவிப்பை வழங்கியே இந்துமதம் எப்படியாவது என்றைக்காவது ஹிந்துமதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் படுவதற்குரிய பணிகளைத் தொடருகிறோம் இந்துமதத் தந்தையாகிய யாம்!!!… - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

    மேலும் படிக்க...


    திருவாசக முன்னுரை
    தேவாரம் பாடிய நால்வரில் மறவேள்வி நடத்தி சித்தர் நெறியான இந்துமதத்தை மீண்டும் இம்மண்ணில் நிலைநாட்டிய ‘திருஞானசம்பந்தர்’ வட ஆரியரல்ல என்ற பேருண்மையையும்; அத்வைதத்தை உருவாக்கிய ‘ஆதிசங்கரர்’ அவர்களும் வட ஆரியரல்ல! தமிழரே! என்ற பேருண்மையையும் தமிழர்கள் முதற்கண் உணர வேண்டும். ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரின் ஆசியோடு புறப்பட்டு; சைவமதமாம் சித்தர் நெறியின் உண்மைகளை நிலைநாட்டிட மதுரை மாநகர் சென்று சமணர்களுடன் அனல்-புனல் வாதத்தில் வென்றார். தோற்ற சமணர்கள் தாங்களாகவே மனம் இறுகி கழுவில் ஏறி இறந்தனரே அன்றி! வட ஆரியர்கள் கூறுவது போல் சம்பந்தரோ, பாண்டிய மன்னனோ சமணர்களைக் கழுவில் ஏற்றவில்லை.

    மேலும் படிக்க...


    பதினெண்சித்தர் திருவாசகம்
    தமிழால் இறையாற்றல் நிலைநாட்டி விளக்கிட தமிழந்தணன் சமசுக்கிருதப் பிணநிலை மெய்ப்பித்தான் விரிசடைக் கடவுளின் நமச்சிவாய நற்றமிழ் எரிதழலில் பனையேட்டில் பொறித்திடச் சாமங்கள் விரைந்தோடியும் சாம்பலாகா நிலைகண்டே வெட்கினர் தேரைமொழிச் சமசுக்கிருத எண்ணாயிரச் சமணர்.

    மேலும் படிக்க...