“… நான் “எந்த மானுடன் இந்த மானுடன்” என்ற தலைப்பில் சுமார் முன்னூறு (300) வசன கவிதைகளுக்கு மேல் மனப்பாடம் செய்து இருந்தேன். ஆனால், உருப்படியாக நூறு கூட நினைவிற்கு வரவில்லை. இதுபோல், எத்தனையோ பெரிய செய்திகள் எம்மால் மறக்கப்பட்டு விட்டனவோ தெரியவில்லை. யாம் எவ்வளவோ முயன்றும் எழுத்து மங்கியும், தாள் நைந்தும், நகலெடுக்கும் வசதி வாய்ப்புக்கள் இல்லாமலும் அழிந்து வரும் தமிழ்மொழிச் செல்வங்கள் ஏராளம்….” “… இந்தச் சிறு பழம்பெரும் வசன கவிதை நூல், சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் உரைநடை (Prose Order) எப்படி இருந்தது என்பதை விளக்க உதவிடும்….”
அறிமுக உரை
இந்த எழுபத்தைந்து ‘வசன கவிதைகள்’ (Blank Verses) எமது இன்றைய நினைவாற்றலால் எழுதப்பட்டவை. இவற்றில் சொற்பிழைகள் இருக்கலாம். கவிதை வரிசைகளும், வரிகளும் மாறியிருக்கலாம். ஆனால், இவற்றால் பெரிய இழப்புக்கள் இல்லை.
சித்தர் ஏளனம்பட்டியார் கண்டப்ப கோட்டைக் கருவூறார் (நிலக்கோட்டை வட்டம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு) கி.பி. 19-20 நூற்றாண்டுகள்