Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் அருளியவை>
  • ஞானாச்சாரியார் கருத்துக்கள்
  • ஞானாச்சாரியார் கருத்துக்கள்

    ஞானாச்சாரியார் கருத்துக்கள்

    ஞானாச்சாரியார் கூறும் கருத்துக்கள்:
    குருதேவர்
    1. “தமிழில்தான் இந்துவேதம் இருக்கிறது”
    2. “தமிழன்தான் இந்துவேத தலைமை ஆச்சாரியார்”
    3. “தமிழன்தான் இந்துவேத நாயகம்”
    4. “ஆதிசிவனார் தமிழ்மொழியில்தான் வேதத்தை அருளினார்”
    5. மணு தரும சாத்தரங்கள் தமிழில்தான் இருக்கின்றன”
    6. “தமிழ் மொழியில்தான் ஐந்தீ வளர்க்க வேண்டும், முத்தீ ஓம்ப வேண்டும்”
    7. “அந்தணர் எனப்படுபவர்கள் தமிழர்களே”
    8. “சிவன் கோயில்கள் மட்டும் பாழடைந்தது ஏன்?”
    9. “சிவ மதமே சைவ மதம்”
    10. “63 நாயன்மார்களும் தமிழர்களே”
    11. “64 முறை திருவிளையாடல்கள் நிகழ்த்திய சிவபெருமான்கள் தமிழில்தான் பேசினார்கள்”
    12. “12 ஆழ்வார்களும் தமிழ் மொழியில்தான் பாடியுள்ளார்கள்”
    13. “96 தொகையடியார்களும் தமிழர்களே”
    14. “பிறப்பியல், வரியியல், பெயரியல், அங்கவியல், மனையியல் அனைத்தும் தமிழ்மொழியில்தான் இருக்கின்றன”
    15. தமிழ்மொழியில் உள்ள காயந்திரி மந்திரங்களை ஓதினால் ஒரு மண்டல கால அளவிலேயே பயன் தெரியும்”
    16. “தமிழ்மொழியில்தான் எல்லாக் கடவுள்களுக்கும், தேவர் தேவதைகளுக்கும், தெய்வங்களுக்கும், ஆண்டவர்களுக்கும் காயந்திரி மந்தர, மந்திர, மந்திறங்கள் இருக்கின்றன”
    17. “மனிதரைக் கடவுளாக்கும் பூசைமொழி தமிழ்மொழியில்தான் உள்ளது”
    18. “இமயம் முதல் குமரி வரை உள்ள எல்லா இந்துக் கோயில்களிலும் உள்ள கடவுள்களுக்கு தமிழ்மொழி நன்றாகத் தெரியும்”
    19. “மேலும் எல்லாக் கோயில்களிலும் உள்ள சக்கரங்கள் எல்லாம் தமிழ்மொழியில் எழுதப்பட்டவைதான்”
    20. “இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் அருளிய பதினெண்சித்தர்கள் தமிழர்களே”
      இந்த மூன்று பேருண்மைகளால் தமிழ்மொழியில்தான் எல்லா கோயில்களிலும் பூசை செய்ய வேண்டும், அருட்சினை செய்ய வேண்டும். அப்படி தமிழ்மொழியில் பூசை செய்யாததால்தான் இந்துக் கோயில்கள் பாழடைந்தன. இந்துக்கள் மாற்றுமதக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.
    21. “தமிழ்மொழியிலுள்ள காயந்திரி மந்தர, மந்திர, மந்திறங்களால்தான் கங்கணம் (முடிகயிறு), பாதுகாப்புக் கயிறு, குளிசம், சக்கரம், உருத்திராக்கம் … முதலியவற்றிற்கு சத்தியைத் தர முடியும்.”
    22. “தமிழ்மொழியிலுள்ள காயந்திரி மந்தர, மந்திர, மந்திறங்களால்தான் தீட்சை அருள முடியும், பூணூல் அணிவிக்க முடியும், ஞானக்காட்சி சித்தி தரமுடியும், தவத்தில் ஆழ்ந்து ஈடுபட முடியும்”
    23. “தமிழில் உள்ள காயந்திரி மந்தர, மந்திர, மந்திறங்களைப் பயன்படுத்தாததால்தான் மாற்றுமத மந்திரவாதிகளிடம் இந்துக்கள் மந்திரித்துக் கொள்வதும், முடிகயிறு தாயத்து சக்கரம் வழங்குவதும் தோன்றி வளர்ந்தன.”
    24. “வேத சுலோகங்களும், சுருதி ஆரண ஆகம மீமாம்சைகளும் தமிழ்மொழியில்தான் இருக்கின்றன”

    …… என்ற கருத்துக்களையெல்லாம் ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் கூறுகிறார்.

    தொடர்புடையவை: