Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • குண்டலினி சத்தி
  • குண்டலினி சத்தி

    குண்டலினி சத்தி

    நெருப்பருகில் உட்கார்ந்து இதமான சூட்டை குளிர்காலத்தில் அனுபவிப்பது போல் குண்டலினியின் வெப்பம் உடல், உயிர், ஆவி, ஆன்மா முதலிய அனைத்தையும் இதமாகவும், பதமாகவும், இன்பமாகவும் காத்திடும்.

    உடம்பில் தான் உணரவும், பிறர் உணரவும் கூடிய அளவிற்கு ஒலி அலைகள் (Sound Waves) உற்பத்தியாகிடும். மார்புக் குலை (Heart) ஒளி ஒலி அலைகளைப் பெறவும், புருவப் பூட்டு திறக்கவும், உச்சித் தாமரை மலரவும் வாய்ப்புக்கள் உருவாகிடும். அவரவர் முயற்சி, பயிற்சி, கருவருள், குருவருள், தருவருள், திருவருள், தாத்தாக்கள், ஆத்தாக்கள் அருள் முதலியவைகளுக்கு ஏற்ப இவை விளைந்திடும்.

    குண்டலினி சத்தி உடல் முழுவதும், அகமும், புறமும் ஒளி பெறச் செய்திடும்.

    குண்டலினி சத்தி தனி மனிதர்களை சுறுசுறுப்பாக, விரைவாக, விரிவாகச் செயல்பட உதவி செய்யும். இதுவே மற்ற அனைத்து பத்தி, சத்தி, சித்தி, முத்தி நிலை எனும் நான்கையும் அடைவதற்குரிய ஆரம்பக் கட்டமாக இருக்கக் கூடும்.

    பாம்புச் சத்தி (Serpent Power): பாம்புச் சத்தி என்று கூறப்படும் தாக்கும் சத்தி, பகைவரை அழிக்கும் சத்தி உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலும் குண்டலினி சத்தியால் கிடைத்திடும். அருளாட்சிக்காக தனி மனிதர்களைக் கடவுளாக்கும் இம்மாபெரும் திடம் செயலாக்கப் பட்டுவிட்டது! செயலாக்கப் பட்டு விட்டது! செயலாக்கப் பட்டு விட்டது! அருளுலகச் செல்வங்கள் வாரி வாரி வழங்கப்படுகின்றன. பயிரினங்களும் உயிரினங்களும் உய்வடையட்டும்.

    குண்டலினி சத்தியை எழுப்பிக் கொள்வதில் 18 வகை இருக்கின்றன. எல்லோரும் கையாளக் கூடிய ஒரே ஒரு வகையை முதலில் அனைவருக்கும் அறிவிக்க அருளுலக ஒப்புதலைப் பெற்றுள்ளார் குருதேவர். இதுவே மனித இனத்திற்கு மாபெரும் வெற்றி. அண்டபேரண்ட வெற்றி! இதுவரை யாரும் சாதிக்காத இச்செயல் அருளுலக இருளகற்றும் பணியை முழுமை பெறச் செய்யும்.

    ஓம் திருச்சிற்றம்பலம்

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்
    3/3/1985,
    சென்னை.


    குண்டலினியின் பயன்கள்:-

    சமுதாயத்தின் பேராசை, பொறாமை போன்ற வெறியுணர்வுகளைத் தடுக்கும். தனி மனிதர்களுக்கு அருளுள்ளம், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, நல்ல நினைவாற்றல்; ஓரளவு உடல் நோய்கள், முழுமையாக உயிருக்கு வரக் கூடிய நோய்களைக் குணப்படுத்தும்.

    குண்டலினிக்கும், ஞானக் காட்சிக்கும் உள்ள தொடர்புகள்:- ஆண்களுக்கு உச்சித் தாமரை, பெண்களுக்கு அடிவயிற்றில் தாமரை மலரும். குண்டலினி கிளம்புவது முதுகுத் தண்டிலிருந்து இடுப்போடு சேரும் இடம். முதலில் வலி இருக்கும்.

    உணவு:- Non-vegetarianism. பச்சைக் காய்கறி, இறைச்சி, மீன் போன்றவை நெருப்பில் சுட்டுச் சாப்பிட வேண்டும். குருதி பச்சையாகச் சாப்பிடல். குண்டலினியால் சமுதாயத்தில் சுமுகமான உறவு இருக்கும். எல்லோரும் காந்த சத்தி அதிகம் ஆகி ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழுவார்கள்.

    அருளை அநுபவப் பொருளாக வழங்கிட best and eaasiest practical method. குண்டலி பயிலுபவர்கள் உடலில் ஒரு விறுவிறுப்புச் சத்தி இருக்கும். Like Electric Touch; Power Transfer செய்ய இது ஒரு வழி.

    Individuals gain power through this practice. No other religion gives this sort of practice. கூட்டு வழிபாடு தேவையில்லை என்பது குண்டலி பயிற்சியின் மூலம்தான் புரியும்.


    தொடர்புடையவை: