(1) தமிழ் நாட்டிலுள்ள தலைவர்கள், வழிகாட்டிகள், வழித்துணைவர்கள் என்ற மூன்று நிலையினருமே இனத்துக்கோ, நாட்டுக்கோ, பண்பாட்டுக்கோ நிலையானத் தொண்டு செய்பவர்களாகவோ, வழங்காதவர்களாகவோதான் இருந்திடுகின்றார்கள். இதற்குக் காரணம் தமிழ் மொழி அறிவோ, இலக்கிய அறிவோ, வரலாற்று அறிவோ இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் அனைத்துத் துறைகளிலும் முதல்நிலைச் செயல்வீரர்களாகவும், தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், வழித் துணைவர்களாகவும் இருக்கின்றார்கள்.
எனவேதான், அவர்களால் தமிழ்மொழியின் வளவளர்ச்சிக்கோ, மறுமலர்ச்சிக்கோ, உரிமை மீட்சிக்கோ பாடுபட முடியவில்லை; இதேபோல் இவர்களால் தமிழின ஒற்றுமைக்கோ, விழிச்சிக்கோ, கிளர்ச்சிமிகு எழுச்சிக்கோ, பயன்மிகு உரிமை மீட்சிச் செழுச்சிக்கோ பாடுபட முடியவில்லை.
எனவே, இக்குறைபாடுகள் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் விடுதலைக்கு முன்னும், விடுதலைக்குப் பின்னும் தொடர்கின்றன என்ற ஆய்வினை முறையாகவும், நிறைவாகவும் செய்த காரணத்தினால்தான் முதலில் தமிழ்மக்களுக்கு தங்களுடைய மொழிவரலாறு (History of the Language), இலக்கிய வரலாறு (History of LIterature), தத்துவ வளம் (The fertility, purity and utility of the Tamil Philosophy, Policy, Principle…) … முதலியவைகளை காலக் கணக்கீட்டு அடிப்படையில் வரலாற்றுச் சான்றுகளையும், ஊன்றுகளையும் வழங்கி விளக்கிடும் பணியை இப்பொழுது அவசர அவசியமாக விளக்கிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. (Everything should be explained with historical proves and evidences having a chronological approach.) அதாவது பெரும்பாலான தமிழர்களுக்கு நல்ல வளமான தமிழறிவு ஏற்பட்டு விடுமேயானால் பிறகு தானாகவே வலிமையான தமிழ்மொழிப் பற்று, தமிழினப் பற்று, தமிழ்நாட்டுப் பற்று, இன ஒற்றுமை, தன்மானப் பிடிப்பு, தன்னம்பிக்கை முதலியவை விளைந்திடும், விளைந்திடும், விளைந்திடும், விளைந்திடும். இப் பெருநோக்கின், முயற்சியின் முதல் கட்டமே இந்த மாத இலக்கியச் சிறப்பிதழ்.
(2) நமக்கு - தமிழருக்கு - மூன்று நான்கு பல்கலைக் கழகங்கள் தோன்றிவிட்டன. இருந்தும், தமிழின வரலாறோ, தமிழ்ச் சமய வரலாறோ, தமிழ் சமுதாய வரலாறோ, தமிழ் இலக்கிய வரலாறோ, தமிழக அரசியல் வரலாறோ முறையாகவும், முழுமையாகவும் எழுதப்பட்டு தமிழர்களுக்கும் அன்னியர்களுக்குப் பிறமொழிகளிலும் (உலக முக்கிய மொழிகளில் = ஆங்கிலம், பிரஞ்சு, செர்மனி, உருசியா, பிரசியா, சீனம் …) வழங்கப்படவில்லை. அப்படி வழங்கப்பட்டால்தான்;
‘தமிழர் என்றோர் இனமுண்டு; அவர்களே இந்தியாவின் பூர்வீகக் குடிகள் (The Tamilians are the aboriginates of India)’ என்பதும்; ‘தமிழ்மொழிதான் இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய்’ என்பதும், ‘தமிழரின் பண்பாடும், நாகரீகமும் இந்தியப் பண்பாட்டுக்கும், நாகரீகத்துக்கும் அடிப்படை’ என்பதும்; உலகத்தவர்களுக்கு தெரிந்திடும்; தமிழர்களுக்குப் புரிந்திடும்.
இதுவே தமிழின, மொழி, சமுதாய, அரசியல் விழிச்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும், வளர்ச்சிகளுக்கும், வளவளர்ச்சிக்கும் வழிகோலும்! வழிகோலும்! வழிகோலும்! வழியாய் அமைந்திடும்! அமைந்திடும்! அமைந்திடும்! இப்பேருண்மையைப் புரிந்த பலரும் வாயில்லாப் பூச்சிகளாக காவடி தூக்கும் அடிமைகளாக, கைக்கூலி பெற்றுச் செயல்படும் கங்காணிகளாக வாழ்ந்திடுகின்றார்கள். இந்த அவலத்துக்கும், கேவலத்துக்கும் காரணம் ஆழ்ந்த அகன்ற தமிழ்ப் புலமையும், வளமான வரலாற்றறிவும், உண்மையான தமிழறிவும் உள்ள நல்ல தமிழர்கள் தமிழர்களுக்கு வழிகாட்டிகளாக அமைய முடியாமல் போனதுதான்! போனதுதான்! போனதுதான்!
(3) முச்சங்கங்கள் பற்றியும், சங்க இலக்கியங்கள் பற்றியும், சங்கப் புலவர் பற்றியும்; சங்கத்தை அடுத்துத் தோன்றிய இலக்கியங்களைப் பற்றியும்; புலவர்களைப் பற்றியும் தெளிவான வரலாறு உருவாகிடாமல் தொடர்ந்து செய்திக் (Information) குழப்பங்களையும், காலக் (Periods) குழப்பங்களையும், ஒரே பெயரில் பல ஆசிரியர்கள் என்று பெயர்க் குழப்பங்களையும் … தொடர்ந்து தமிழ்ப் புலவர்களும், அன்னியர்களும் விளைவித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இக்குழப்பங்களை யாருமே தீர்க்க முடியாது, என்றைக்குமே தீராது என்ற மாயை நிலையை தமிழின விரோதிகளும், துரோகிகளும், கைக்கூலிகளும், கங்காணிகளும் உருவாக்கி வருகின்றார்கள். இதை அப்பாவித் தமிழர்களும் நம்பி வருகின்றார்கள்.
(4) இந்த மாயை ஒரு தற்காலிகமான மாயை. சதிகாரர்களால் நன்கு திட்டமிடப்பட்டு நன்கு உருவாக்கப்பட்டு தொடர்ந்து கட்டிக் காக்கப்பட்டு வரும் ஒரு மாயை! ஏனென்றால், இந்த மாயை முழுமையாக அகற்றப்பட்டு விட்டால் உண்மையான தமிழ்மொழிப் பற்று, தமிழ் இனப்பற்று, தமிழ் நாட்டுப்பற்று, தமிழின ஒற்றுமை, தமிழ்ப் பண்பாட்டுப் பற்று, தமிழ் நாகரீக ஈர்ப்பு, தமிழ்நாட்டு மான உணர்வு, தமிழினத் தன்னம்பிக்கை உணர்வு முதலிய அனைத்தும் விழித்தெழுந்த வேங்கை குகையை விட்டு வெளிக் கிளம்புவது போல் வளவளர்ச்சி பெற்று தழைத்தெழுந்து விடும்.
எனவேதான், அரசோ, பல்கலைக் கழகங்களோ, தமிழுக்கென்று உருவான மடங்களோ, தமிழின் பெயரால் உருவான கழகங்களோ, சங்கங்களோ, தமிழால் வாழும் பெரிய பெரிய அமைப்புக்களோ, தனிமனிதர்களோ … செய்ய நினைக்காத, செய்ய முன்வராத இலக்கியப் பணிகளை இந்து மறுமலர்ச்சி இயக்கம் செய்யத் துவங்கியிருக்கின்றது. இதனைத் தெரிந்து, அறிந்து, ஆராய்ந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து, நம்பி நமது இயக்கத்தை ஏற்றுப் பேராதரவு நல்கும் நிலை தமிழர்களிடையே எந்த அளவு வளவளர்ச்சியும், வலிமைப் பொலிவும் பெறுகின்றதோ அந்த அளவுதான் இந்துமத விடுதலை, இந்துமதத்தின் மூலவரான தமிழரின் விடுதலை, இந்துமதத்தின் ஆட்சிமொழியான தமிழ்மொழியின் விடுதலை, இந்துமதத்தின் உடலாகவும், உயிராகவும் இருக்கின்ற தமிழ்ப் பண்பாட்டுக்கு விடுதலை, இந்துமதம் கூறுகின்ற உலக ஆன்ம நேய ஒருமைப்பாடும், உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் விளைந்திடும், விளைந்திடும், விளைந்திடும்.
(5) இப்படி ஒரு நெடிய பெரிய முன்னுரையுடன் தான், திருவள்ளுவரைப் பற்றிய கருத்துக்களைக் கூற முன்வர வேண்டியிருக்கின்றது. ஏனெனில், பதினெண்சித்தர்களும், பதினெண்சித்தர் பீடாதிபதிகளூம், 48 வகைச் சித்தர்களும் தருகின்ற செய்திகள் (Siddhar’s Information) என்று தனித்துப் பட்டியலிட்டுத்தான் கூற வேண்டியிருக்கின்றது. அதாவது, இன்றைக்கு நாட்டு நடப்பில் உள்ள அனைத்துத் துறை வரலாறுகளுமே தமிழினத் துரோகிகளாலும், விரோதிகளாலும், எதிரிகளாலும், குறையறிவு படைத்தவர்களாலும்; ஆராய்ச்சிக் கண்ணோட்டமில்லாதவர்களாலும்தான் எழுதப் பட்டிருக்கின்றன! எழுதப் பட்டிருக்கின்றன! எழுதப் பட்டிருக்கின்றன!
இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்மொழியறிவு, தமிழிலக்கிய அறிவு, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுபாட்டு அறிவு, நாகரீக அடிப்படை அறிவு, சமய உயிரோட்ட அறிவு, சமுதாய கட்டமைப்பு அறிவு, … முதலியவற்றில் போதுமான அளவு கூட (necessary and fundamental knowledge) இல்லாதவர்கள்தான் நமது வரலாறுகளை எழுதி உள்ளார்கள். எனவே அனைத்து வரலாறுகளுக்கும் மூலமாக, தாயாக, ஆரம்பமாக, கருவாக, அடிப்படையாக, சான்றாக, ஊன்றாக, … விளங்குகின்ற தனிப்பெரும் இலக்கியங்களையும், இலக்கியக் கலைஞர்களையும் பற்றிய உண்மையான செய்திகளை சித்தர்களின் செய்திப் பின்னணியில் வெளியிடும் பணியே துவக்கப் பட்டிருக்கின்றது. இதன்படி, நான்கு யுகங்களிலும் வாழ்ந்திட்ட இலக்கியங்களும், இலக்கிய ஆசிரியர்களும் விமரிசிக்கப்பட்டே தீருவார்கள்.
முதல்யுகத்தை சிவன்கள், பிறமண்கள், இந்திரன்கள், தேவேந்திரன்கள், இயமண்கள், நாரதர்கள், இருடிகள், முனிகள், … தமிழ்ச் சங்கத்துக்குத் தலைவனாக இருந்த சிவபெருமான், அவன் மகன் முருகன் … முதலிய இலக்கியக் கலைஞர்களைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் விமரிசிக்கப்படும். இது பற்றிய ஓரளவுச் செய்திகள் நமது குருதேவர் ஏட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த கிரேதாயுகத்தை அடுத்து வந்த திரேதாயுகத்திலும், துவாபர யுகத்திலும் வாழ்ந்த இலக்கியக் கலைஞர்களின் பட்டியல் ‘யக்ஞவல்லி’யை பின்னணியாகக் கொண்டும்; ‘தன்வந்திரி’யைப் பின்னணியாகக் கொண்டும் ஏற்கனவே பல கட்டுரைகள் வந்து விட்டன. எனவே, இந்த நான்காவது யுகமான கலியுகத்தின் பட்டியல்தான் இந்த மலரிலிருந்து துவங்குகின்றன.
(5) “… இந்த கலியுகம் பிறந்து ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்துமதத்துக்கும்; இந்துமத மொழியான தமிழுக்கும், இந்துமத மூலவர்களான தமிழர்களுக்கும், இந்துமத வாழ்வியலான தமிழ்ப் பண்பாட்டிற்கும், தமிழ் நாகரீகத்துக்கும் அனைத்து வகையான நலிவுகளையும், மெலிவுகளையும், சிதைவுகளையும், சீரழிவுகளையும், கலக்கங்களையும், குழப்பங்களையும், இழிவுகளையும், அழிவுகளையும் வழங்கிட்ட பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர் இந்துமத நாடான இந்தியாவுக்குள் புகுந்தனர். அவர்கள், காட்டானை கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து அழித்ததுபோல், குரங்குக் கூட்டம் பழமரச் சோலைக்குள் புகுந்தது போல் எலிக்கூட்டம் விளைந்த காய்கறித் தோட்டத்திற்குள் புகுந்ததுபோல், நரிக்கூட்டம் ஆட்டுமந்தைக்குள் நுழைந்தது போல், தமிழினத்தில் புகுந்து மொழி, இலக்கியம், இனம், நாடு, பண்பாடு, நாகரீகம், சமுதாயம், சமயம், கலை, … முதலிய அனைத்துத் துறைகளையும் பாழாக்கி விட்டார்கள் …” என்று பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் இந்த முன்னுரையைக் கூறியே முதன்முதலில் குருபாரம்பரியம் எழுதத் துவங்குகின்றார். இப்படிக் கூறியே இவர் இந்துமதத்தையும், தமிழ்மொழியையும், தமிழினத்தையும், தமிழ்நாட்டையும் பாதுகாக்கும் முயற்சியை வரலாற்று வடிவில் துவக்குகின்றார்.
அதாவது, சமுதாய வரலாற்றை இலக்கியப் பாரம்பரியம் என்றும்; (The Social History of Tamils is written as the History of the Language and Literature), சமய வரலாற்றை குருபாரம்பரியம் என்றும் (The History of Religion), நாட்டு வரலாற்றை அரச பாரம்பரியம் என்றும் (The Political History) முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்து எழுதுகின்றார். இவையல்லாமல், வாக்குகள், வாசகங்கள் என்ற பெயரில் எண்ணற்ற செய்திகள் தொகுக்கப்பட்டு உள்ளன. காலப்போக்கில் நாயன்மார்கள், ஆழ்வார்கள், வள்ளலார்கள், மெளனகுருக்கள், தாயுமானவர்கள், பட்டினத்தார்கள், சந்தான ஆச்சாரியார்கள், … முதலியோர்கள் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளை சுவைமிகு இலக்கியங்களாக ஆக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இலக்கியங்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் மிக முக்கியமான தெளிவான பயன்மிகு உண்மையான வரலாறுகளை எழுதுவோம்! எழுதுவோம்!
(6) திருவள்ளுவரை ஒரு நவநாத சித்தர் என்று பதினெண்சித்தர் பீடாதிபதிகளும், மற்ற சித்தர்களும் குறிக்கின்றார்கள். ஆச்சாரியார்களும், சன்னிதானங்களும், புராண எழுத்தாளர்களும் திருவள்ளுவரை நாயனார் என்று குறிக்கின்றார்கள். இவற்றிற்கிடையில், சமண சமயத்தவர்கள் தங்களின் குருமார்களில் ஒருவராகக் குறிக்கின்றனர்; புத்தர்கள் இவரைத் தங்களின் மதத்தலைவர்களுள் (தலைமைப் பிச்சுக்களில் அல்லது மடாதிபதிகளுள்) ஒருவராகத் துணிந்து கூறுகின்றார்கள். எனவே, திருவள்ளுவரின் சொந்த வாழ்க்கை, வாழ்ந்த காலம், கூறிய தத்துவம், அல்லது ஏற்றுக் கொண்ட தத்துவம், … முதலியவையே முதலில் தீர்க்க முடியாத மிகப்பெரிய சிக்கல்களையும், குழப்பங்களையும், மயக்கங்களையும் வழங்குகின்றன. இவற்றைத் தீர்த்துக் கொண்டபிறகு இவர் எழுதிய நூல்களில் இவருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்துள்ள திருக்குறள் மூலம் இவர் வழங்கும் கருத்துக்கள் முதலியவை ஆராயப்பட வேண்டும்.
நல்ல காலமாக தமிழினத் தலைவர், சிந்தனை ஊற்று, பகுத்தறிவுப் பகலவன், தன்னம்பிக்கையின் இமயம், தமிழர் தன்மானங் காக்க சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் எடுத்த மாபெரும் முயற்சிகளால் திருவள்ளுவரின் பெயரும், திருக்குறள் பெயரும் அரசு முதல் அன்னக்காவடி மடம் வரை அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக ஆகிவிட்டன. எனவே, நாம் தாராளமாக நேரிடையாக திருவள்ளுவர் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் கூறலாம்.
(7) சித்தர்களின் கருத்தோட்டத்திலும், கண்ணோட்டத்திலும் நவநாத சித்தர்கள் என்று திருவள்ளுவரும், திருமூலரும் சேர்த்தே பேசப்படுகின்றார்கள். அதாவது திருமூலர் சமயத்துக்காகவும், திருவள்ளுவர் சமுதாயத்துக்காகவும் வாழ்வின் ஒன்பது வகைச் சுவைகளை இனிய இசையாக, இசைமிகு இலக்கியமாக, நிலையான இலக்கிய வாழ்வாகப் படைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதே சித்தர்களின் கருத்து.
(8) யாம் ஏற்கனவே திருமூலர் வரலாறு விரிந்த அளவில் நிறைந்த கருத்துக்களோடு எழுதி முடித்துள்ளோம். அதனை திருமூலருக்கே உரிய மடாதிபதிகளுக்குத் தெரிவித்தும் வெளியிட முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். அவர் திருமந்தரம், திருமந்திரம், திருமந்திறம் எனும் மூன்று வகையான நூல்களை உலகறிய எழுதியிருந்தும் அவருடைய திருமந்திரமும், திருமந்திறமும் இரண்டறக் கலந்த ஒரு நூல் மட்டும்தான் இன்றைக்கு நாட்டு வழக்கில் உள்ளது. அவர் வாழ்க்கை வரலாற்றையும் மிகப்பெரிய நூலாக எழுதியுள்ளோம். இருந்தும் திருமூலரின் பெயரால் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துக் கொண்டிருக்கும் திருவாவடுதுறை ஆதீனம், சித்தர்கள் திருமூலரைப் பற்றிக் கூறும் கருத்துக்களைக் கேட்கவோ, பரப்பவோ தயாராக இல்லை! இல்லை! இல்லை! இதுவே இன்றைய தமிழகத்தின் நிலை. நல்லகாலமாக திருவள்ளுவருக்கு என்று மடம் ஏதுமில்லை. எனவே, நமது கருத்துக்களை நாமே துணிந்தும், வரையறுத்தும், திட்பமாகவும், நுட்பமாகவும் உரைக்கலாம்.
(9) பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் காலம் கி.மு.100 முதல் கி.பி.150 வரை என்று மிகத் தெளிவாக வரையறைச் செய்யப்படுவதாலும் இவர் வளர்த்த இம்மண்ணுலகின் 47வது தேவகுமாரனாகத் தோன்றிய செருசலத்து ஈசா (Jerusalem Jesus Christ) இவரிடம் ஒன்பது வயது முதல் 27 வயது வரை ஆக 18 ஆண்டுகள் பயிற்சிகள் பெற்ற போது ‘சங்க இலக்கியங்களும், திருக்குறளும், திருவள்ளூவரின் நூல்களும், திருமூலரின் நூல்களும், சித்தர்களின் இலக்கியங்களும், மற்ற நவநாத சித்தர்களின் புராணங்களும், கதைகளும், காதைகளூம், கவிதைகளும், கீதைகளும் முறையாகக் கற்றிட்டார்’ என்ற குறிப்பு இருப்பதாலும் திருவள்ளுவரின் காலம் கி.மு.வுக்கு உரியதே ஆகும். {பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் அருளாணைப்படியும், குருவாணைப்படியும் செயல்படாததால்தான் 47வது தேவகுமாரனான ஈசன் எனப்படும் ஈசா –> ஏசா –> இயேசு எனப் பெயர் பெற்ற ஏசுநாதர் சிலுவையில் மாண்டு, மீண்டு உயிர்த்தெழுந்தார். அப்படி உடலோடு உயிர்த்தெழுந்த ஏசு, தமிழகத்துக் கரூர் அமராவதியாற்றங்கரை வட்டாரத்தில் நெடுங்காலம் வாழ்ந்தார் என்பதால்தான் இவர் அடியார்களில் சிலர் இந்தியாவுக்கு வந்து தேடிக் கண்டுபிடித்து அவருடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே ‘புனித தாமசு’ (Saint Thomas) ஆவார். 48வது தேவகுமாரன் ‘அந்திக் கிறித்து’ (The Last Christ) தமிழகத்தில்தான் தோன்றுவார், தமிழினத்தில்தான் தோன்றுவார் என்று மிகத் தெளிவாகக் குறிக்கின்றார்கள். இந்தத் தேவகுமாரன் ஒரு சீவன்முத்தன்; அருவுருவ சித்தியாளன். பிறரை நம்ப வைப்பதற்காகத் தனக்குக் கிடைத்த தெய்வீகச் சத்திகளை யெல்லாம் குருவாணையை மீறிச் செலவிட்டுவிட்ட காரணத்தினால்தான் உடல் சிதைந்து குருதி கொட்டி மூன்று நாட்கள் மரணமென்னும் துக்கத்தில் ஆழ நேரிட்டது என்ற குறிப்பும் குருபாரம்பரியத்தில் உள்ளது.}
(10) திருவள்ளுவரைக் குறிக்கும் போதும் சரி, அவருடைய நூல்களில் சிறந்த திருக்குறளைக் குறிக்கும் போதும் சரி; அவரைச் சங்கப் புலவர்களுள் ஒருவராகக் குறிப்பதும் இல்லை; சங்க நூல்களில் ஒன்றாகவும் குறிப்பதும் இல்லை. ஏனெனில், அவர் சங்க காலத்தில் மற்ற அனைவரோடும் சேராத ஒரு புதுச் சிந்தனையாளராக (A New Thinker, that is to say, a revolutionary thinker who stood against all the odd conventions, traditions, customs and manners. So, he was a different thinker or a writer.) அன்றைய சமுதாயம் பழம்பெரும் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், மரபுகளுக்கும் எதிர்ப்பாளராக இருந்திட்டார் அவர்.
எனவேதான், அவர் எழுதிய பல நூல்கள் செல்வாக்குப் பெற முடியாமலேயே போய்விட்டன. எனவேதான், அவர் கடைசியாகத் தன்னுடைய கொள்கைகள் அனைத்தையும் குறுகிய, நன்கு வடிவப் படுத்தப்பட்ட குறட்பாக்களாக எழுதிப் பத்துப் பத்து குறட்பாக்களாகத் தொகுத்து தலைப்பிட்டு வகை செய்து அறநூலாக, நீதிநூலாக, சமயச் சாரமாக வெளியிட்டார். இதற்கு, தமிழகம் முழுவதுமிருந்த புலவர்களின் எதிர்ப்பு இருந்தது. தமிழ்ச் சங்கம் இவர் நூலை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இவர் தனது கொள்கைகளுக்காக புத்தரைப் போலவோ, மகாவீரரைப் போலவோ தன்னுடைய தத்துவத்திற்கு வாரிசையும், வழித்துணையையும், பெரிய போராட்டக் குழுவையும் உருவாக்கவில்லை. அதாவது, தனது தத்துவத்துக்கு என்று தனிக் கூட்டத்தையோ, இயக்கத்தையோ உருவாக்கவில்லை. குறைந்த அளவு கிரேக்கத்தில் சாக்கரடீசு தன்னைச் சுற்றி மாணவக் கூட்டத்தை உருவாக்கியது போலக் கூட உருவாக்கவில்லை. எனவேதான், இவர் பெயரால் ஒரு மதமோ, தத்துவக் கூட்டமோ வாழையடி வாழையாக உருவாக முடியாமல் போய்விட்டது. இது அவருக்கு ஒரு மாபெரும் தோல்விதான். அவருடைய கருத்துக்கள், சிந்தனைகள், … முதலிய அனைத்துமே தமிழரின் அகப்பண்பாட்டிற்கும், புறநாகரீகத்துக்கும் இலக்கிய மரபுக்கும் பெரிய சவாலாக அமைந்திட்டன.
எனவேதான், திருவள்ளுவர் சமய அளவிலோ, சமுதாய அளவிலோ, இலக்கிய அளவிலோ மிகப்பெரிய வெற்றியினை, தொடர் வாரிசுநிலைகளை, ஒப்புதலைப் பெறமுடியாமல் போய்விட்டது. கிரேக்கத்தில் சாக்கரடீசும், வடநாட்டில் புத்தரும், மகாவீரரும், சீனத்தில் கன்பூசியசும், பாரசீகத்தில் சொராசிட்டரும் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்துச் செயல்பட்ட காலத்தில்தான் திருவள்ளுவர் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்து செயல்பட்டார் என்பது பொருத்தமுடையதாக இருக்கின்றது.