இந்துமத-ஹிந்துமத விளக்கக் கட்டுரைத் தொடர்-2
இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் இம்மாபெரும் பணிகளைக் கட்டுக்கோப்பாகப் பிறமணர்களும், பிறாமண அடிமைகளும், ஆர்வலர்களும், ஆதரவாளர்களும், பிறாமண மாயையில் உழலும் அப்பாவிகளும் இருட்டடிப்புச் செய்கிறார்கள்! இருட்டடிப்புச் செய்கிறார்கள்!! இருட்டடிப்புச் செய்கிறார்கள்!!! இதுவரை வெளியிட்ட கோடிக்கணக்கான அறிக்கைகளும் ஓடி மறைந்த மாயமென்ன? தேடிப் பயனைத் தரமுடியாத காரணமென்ன? என்றெல்லாம் எண்ணி எண்ணிக் காலத்தை வீணாக்குவதைச் செய்யாமல், தொடர்ந்து நம்பிக்கையோடு, கொந்தளிக்கும் கடலின் நெடிய தொடரலைகள் போல் சித்தர்நெறிச் செல்வர்கள் பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும் மெய்யான இந்து மதத்தை விளக்கியுணர்த்தி நிலை நாட்டிட ஆரம்பித்து விட்டார்கள். அதன் ஒர் அங்கமே இந்தக் கட்டுரை.
பதினெண் சித்தர்கள் தாங்கள் உருவாக்கிய வழிபாட்டு நிலையங்களில் (48 வகை) எந்தெந்த வழிபாட்டு நிலையங்களில் மட்டும் ஒன்பது கோள்களும் பீடம் அமைக்கப் பெற்று வழிபடு நிலை பெறலாம் என்ற ஆகம விதியை, சுருதி மறையை, ஆரண முறையை, மீமாம்சை நெறியை, வேத ஏந்துகளை … வகுத்துச் சென்றிட்டார்கள்
அதன்படி ஒரே நேர் கோட்டில் ஒரே திசையைப் பார்த்து ஒன்பது (9) கோள்களும், (ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன, வெள்ளி, சனி, இராகு, கேது) ஒரே பீடத்தில் அமர்ந்து அருள் வழங்கும், அருளாட்சி அரியணை அமைக்கும் சட்டம் செய்யப் பட்டது. ஆனால், சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் …… செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் இந்த அருளாட்சி அரியணைச் சட்டத்தையே உடைத்தெறிந்து விட்டு ஒன்பது (9) கோள்களையும் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். அத்துடன் பொதுமக்களின் செளகரியத்துக்காக என்று கூறிப் பதினெண் சித்தர்களின் ஆகம விதிகளை மீறித் தங்களுடைய விருப்பம்போல் அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களுக்கு உள்ளும், புறமும் நினைத்த இடத்தில் ஒன்பது கோள்களுக்கும் பீடம் அமைத்தார்கள்.
இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக …. மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!! அதாவது, அருளூற்றுக்கள் அடை பட்டதால் பிறாமணர்கள் அச்சமோ, கூச்சமோ இன்றி; மெய்யான இந்து மதத்திற்குரிய வழிபாட்டு நிலையங்களைக் கைப்பற்றிப் பொய்யான ஹிந்து மதத்திற்குரியதாக ஆக்கி விட்டார்கள்.
இப்படிப் பிறாமணர்கள் அருளுலகத்தின் கோட்டைகளான வழிபாட்டு நிலையங்களைக் கைப்பற்றிக் கொண்டு விட்டதால் அருளுலகில் தங்களின் வேதமதமான ஹிந்து மதத்தை மிக வேகமாகப் பரவிச் செல்வாக்குப் பெற்றிட்டார்கள். எனவே, இந்துக்களும், பிறாமணர்களின் சமசுக்கிருத மொழிதான் அருளாட்சி மொழி என்று நம்பி ஏமாந்தார்கள். பிறாமணர்களின் ஆபாசக் கதைகளையும், அண்டப் புளுகுகளையும், காட்டுமிராண்டிக் கற்பனைகளையும் நம்பி மோசம் போனார்கள். சமசுகிருத மொழியிலேயே தங்களது பூசைகளையும், சடங்குகளையும், பிறவற்றையும் செய்து அருளுலகக் குருடர்களாக மாறினார்கள்.
இதனால் பிறாமணர்கள் மெய்யான இந்துமதத்தை ஒழிப்பதற்குத் தேவையான கூலிகளையும், போலிகளையும், துரோகிகளையும், கங்காணிகளையும், அப்பாவி அடிமைகளையும் மிக எளிதில் உருவாக்கி விட்டார்கள்!