Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • எந்த மானுடம் இந்த மானுடம்>
  • கருவூறார்கள்.
  • கருவூறார்கள்.

    கருவூறார்கள்.

    கருவூறார்கள் மற்றும் சித்தர் ஏளனம்பட்டியார்

    சித்தர் ஏளனம்பட்டியார் கண்டப்ப கோட்டைக் கருவூறார் (நிலக்கோட்டை வட்டம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு) கி.பி. 19-20 நூற்றாண்டுகள்

    10.3.82
    அம்பத்தூர்

    கருவூரார்’ என்றால் ‘கருவூர்’ என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்.

    சித்தர் கருவூரார்’ என்ற பெயரிலும் ‘கருவூர் சித்தர்’ என்ற பெயரிலும் வாழ்ந்திட்ட வாழ்ந்திடும் சித்தர்கள் பலர் உள்ளார்கள். சிலரின் இலக்கியங்களும், வரலாறுகளும் ஓரளவு நாடறிய உள்ளன.

    பதினெண் சித்தர்களில் ‘பிறவாமை பெற்றவர்கள்’ ‘மீண்டும் கருவில் ஊறமாட்டார்கள்’ என்ற பொருளில் ‘கருவூறார்’ என்று குறிக்கப் படுகின்றனர். இவர்களன்றிச் சித்தர்களின் நூல்களில் ‘பிறவாயாக்கைப் பெரியோர்கள்’, ‘இறவாயாக்கைப் பெரியோர்கள்’, ‘பிறப்பிறப்பற்ற ஆன்றோர்’, ‘சாவிறந்த சான்றோர்’, ‘சாகாக்கலை வல்லோர்’, ‘பிறவிப் பெருங்கடல் கடந்தோர்’, ‘மரணமிலாப் பெருவாழ்வு கண்டோர்’, ‘மரணமிலாப் பெருவாழ்வு பெற்றோர்’, ‘மரணத்தை வென்றோர்’… என்று பல சொற்கள் இருக்கின்றன. ஆனால், ‘கருவூறார்’ என்ற சொல் ஆட்சியில் இல்லை. அதாவது, பதினெண் சித்தர் பீடாதிபதிகளாய் உள்ளவர்களே சிறப்பாகக் ‘கருவூறார்’ என்று குறிக்கப்படும் மரபு இருந்து வருகிறது.

    இதுவன்றிக் கருவூறார்களின் விந்துவழி வாரிசுகளில் ‘பிறவாமைச் சித்தி’ பெற்றவர்கள் மட்டும் தங்களைக் ‘கருவூறார் என்று குறிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.

    சித்தர்கள் பற்றிய செய்திகளையும், சித்தர்களின் நூல்களையும், சித்தர்களின் சாதனைகளையும் ஒன்று திரட்டிச் சென்றிட்டவரே ‘இராமசாமி பிள்ளை’ எனக் குறிக்கப் படும் சித்தர் ஏளனம்பட்டியார். இவர் கி.பி. 1800இல் பிறந்து கி.பி. 1928 வரை வாழ்ந்ததாகப் பல குறிப்புகளும் நேரடிச் சான்றுகளும் ஊன்றுகளும் கண்டுள்ளோம் யாம். இவரது பிறந்த காலம் 1800க்கும் முந்தியது என்போரும் இருந்தார்கள். அப்படிப்பட்ட குறிப்புக்களும் உண்டு. இவரைப் பற்றிய விரிவான வரலாறு எம் தந்தையாலும் எம்மாலும் எழுதப்பட்டுள்ளன. சுவைமிக்க நிகழ்ச்சிகளும், அரிய வரலாற்றுப் பேருண்மைகளும் சீரிய சமயச் செய்திகளும்… இவரது வரலாற்றில் உள்ளன.

    இவர் பனைஓலைகளில் எழுதியவைகளைக் காப்பதும், படிப்பது, படியெடுப்பதும் (நகல் எழுதுவது) கடினமாக இருக்கின்றன என்பதால் அனைத்தையும் தாள்களில் எழுதிக் காத்திட ஆரம்பித்தார். அதனால், பழமைச் சிறப்பும், உரிமையும் பெருமையுமுடைய ஏடுகள் பாழாயின.

    இந்து மறுமலர்ச்சி இயக்கம் கி.பி. 1772இல் துவக்கப் பட்டது என்ற கணிப்பை என் தந்தை தமது நூல்களில் வெளியிட்டுள்ளார். அதனால் இந்த இயக்கம் பற்றிய செய்தி இடம் பெறும் நூல்கள் சித்தர் ஏளனம்பட்டியாருக்குச் சற்று முன்போ அல்லது சமகாலத்திலோ பிறந்தவை என்று முடிவு கட்ட வேண்டியிருக்கிறது. மேலும் ஓலை ஒன்று, ஓலை இரண்டு…. என்று சிறுசிறு பாராக்கள் அல்லது சில சொற்¦றாடர்கள் தனித்து எண்ணிக்கையிடப் பட்டுள்ளன என்பதால்; பனை ஓலைகளில் எழுதப்பட்ட உரைநடைகள் அந்தந்த ஓலையில் எழுதப்பட்டவை அப்படியப்படியே தனித்தனியாக எண்ணிக்கையிடப்பட்டு தாளில் (Note-book paper) தொகுத்து எழுதப்பட்டன போலும் என்று கருத வேண்டியிருக்கிறது.

    தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தாம் தொகுத்த நூல்களிலும், எழுதிய நூல்களிலும் இது போல் செய்திகளை, கருத்துக்களை, தத்துவங்களை…. தனித்தனியாக ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து எண்ணிக்கையிட்டு (Numbering in a Serial Order) காட்டியுள்ளார். குருபாரம்பரியம், அரச பாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், குருவாசகம், பூசாவிதிகள், கருவறைப் படிகள், தவ முறைகள், வேள்வி நெறிகள், ஞானக் கட்டளைகள், அருளுரைகள், அரச நீதிகள், மன்ற ஒழுகலாறுகள், சன்னதி வழக்காறுகள், குருமார் ஒழுக்கங்கள், சிவவாதத் தத்துவங்கள், உயிர்ப்பு மந்திரங்கள், சித்தர் தோத்திரங்கள், போர் வாகுகள், பிறமாணங்கள், பிறாணாயாமங்கள், பிறணவங்கள், காயந்திரிகள், நிடதங்கள், உபநிடதங்கள், மீமாம்சைகள், ஆகமங்கள், மறைகள், முறைகள், நெறிகள், வேதங்கள், சித்தங்கள், நாதங்கள், போதங்கள், போகங்கள்…. எனப்படும் எல்லா நூல்களிலும் சிலசில சொற்¦றாடர்களைக் கருத்து முழுமை பெற்றவுடன் ஒன்று என்று கணக்கிட்டுக் குறித்துள்ளார். எனவே, இந்த முந்தையோர் மரபை ஒட்டியே ஏளனம்பட்டியாரும் தமது நூல்களிலும், தாம் தொகுத்த நூல்களிலும் நகலெடுத்த நூல்களிலும் ஒவ்வொரு ஏட்டிலுள்ள வாசகத்தையும் தனித்தனியாகப் பிரித்துக் காட்ட வரிசையாக எண் குறித்து எழுதியிருக்கிறார் என்று கருத வேண்டி யிருக்கிறது.

    ஓய்வின்மையாலும், ஆட்சி இன்மையாலும், அடிக்கடி பயிற்சி யின்மையாலும் எம்மாலேயே பல நூல்களும், செய்திகளும், பேருண்மைகளும் மறக்கப் பட்டு வருகின்றன. ஒருவேளை, மிகப் பெரிய இழப்பு தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் அறிவுப் பசி கொண்ட உலக மேதைகளுக்கும் ஏற்படும் வண்ணம் யாம் திடீரென்று எதையும் எழுதுவதில்லை; பேசுவதில்லை என்று ‘மவுன விரதம்’ ஏற்றிட நேரிட்டாலும் நேரிடலாம். அதற்கு அஞ்சியே இரவு பகலாக கண் விழித்துக் கைவிரல் நோக எமது நினைவில் உள்ளவைகளை எழுதிக் குவிக்கிறோம். அத்துடன் ஆர்வமிக்க, நம்பிக்கைக்குரியவர்கள் கிடைக்கும் போதெல்லாம் யாம் செய்திகளைச் சொல்லி எழுதிக் குவிக்கும்படி செய்கிறோம்.

    மதமறுப்பு, மதவெறுப்பு, நாத்திகம் என்ற பெயரால் சித்தர்களின் கலைகளும், அறிவியல்களும் (The Arts and Sciences invented and cultivated by the Siddhars who are the founders of the Mother Liquor of Religion as a whole - உலகில் மதங்கள் தோன்றுவதற்குத் தாயாக உள்ள தத்துவங்களை ஈன்றெடுத்தவர்களே சித்தர்கள். இவர்களே எண்ணற்ற கலைகளையும், விஞ்ஞானங்களையும் கண்டு பிடித்தவர்கள்) புறக்கணிக்கப் படுவதால் மானுட இனத்துக்குத்தான் மாபெரும் இழப்பு. யாம் இந்த இழப்பு ஏற்படாவண்ணம் எடுத்திட்ட முயற்சிகளே ஆயிரமாயிரம் அருட்செல்வர்களை, அலைகடல் கடந்தும், மலைமுகடுகளிலும், காடுகளிலும், நாடுநகரங்களிலும், பட்டிதொட்டிகளிலும் உருவாக்கியுள்ளன.

    இவர்களை ஓர் இயக்கமாக இணைத்து இயங்கச் செய்யும் முயற்சியே இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே, இலைமறை காயாக இருந்த ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ வெளிப்படையாகக் கொடி பிடித்துப் பணிபுரிய அணிவகுக்கிறது. ‘இந்துமதம்’ என்பது ஒரு மதமல்ல. அது ஒரு மாபெரும் ‘சமூகவியல் தத்துவமே’ (The Induism is Not a Religion and It is only a Social Philosophy) என்ற பேருண்மையை விளக்கத்தான் ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ என்று பத்தி இயக்கத்துக்குப் பேர் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதை ‘இந்துமத மறுமலர்ச்சி இயக்கம்’ என்று தவறாகக் கருதவோ குறிக்கவோ கூடாது! கூடாது! கூடவே கூடாது!

    இந்து மதம் மலர்ந்தேதான் இருக்கிறது. அது வாடியதே இல்லை! குவிந்து கூம்பி வதங்கியதே இல்லை. அதாவது இந்து மதம் தனது மலர்ச்சியை எக்காரணத்தாலும் இழக்கவே இல்லை. எனவேதான், ‘இந்துமத மறுமலர்ச்சி” என்ற சொல்லைக் கண்டிப்பாக யாரும் பயன்படுத்தவே கூடாது. அப்படி யாரும் கூறினால் அது இந்து மதத்தை இழிவு படுத்துவதாகும். எனவே, இந்தியாவில் பழம்பெரும் வாழ்வியல் தத்துவமான இந்து மதத்தை யாரும் மறுமலர்ச்சி பெறச் செய்யவோ! முன்னணி பெறச் செய்யவோ! விழிப்புணர்ச்சி பெறச் செய்யவோ முயல்வதாகக் கூறக் கூடாது. அப்படிக் கூறுவது கண்டிக்கத் தக்கது. வருந்தத் தக்கது. எனவே, ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்பது ஒரு பண்பாட்டுக் கழகம் (A Cultural Organisation) என்று மட்டுமே விளக்கம் தருகிறோம் யாம். எம்மில் சிலர் பண்பாட்டு வளர்ச்சிக் கழகம் என்று குறிப்பதைக் கூட யாமே வன்மையாகக் கண்டித்து வருகிறோம் என்பதைப் பெருமையோடு இங்கு குறிக்கிறோம்.

    ‘மதம் ஒரு சமூக விஞ்ஞானம் (Religion is only a Social Science) என்ற சித்தர்களின் கொள்கையே காலப்போக்கில் சடங்குகள், சம்பிறதாயங்கள், மரபுகள், ஒழுகலாறுகள், சட்டதிட்டக் கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், விரதங்கள், விழாக்கள், சாத்திறங்கள், தோத்திரங்கள், புராண இதிகாசங்கள்…. முதலியவைகளைப் பெற்று ‘மதம்’ என்று வாழ்வைப் பெற்று விட்டது. எனவே, ‘இந்துமதம்’ என்பது இந்திய மக்களின் ‘சமுதாய வளர்ச்சித் தத்துவமே’யாகும். (The present INDUISM is the blossomed stage of the Indian Social Philosophy). எனவே, இந்திய மக்களுக்கு உண்மையான புதுவாழ்வு (A New Life), நல்வாழ்வு (Healthy Life), மகிழ் வாழ்வு (Happy Life), நிறைவாழ்வு (Contented Life), அமைதி வாழ்வு (Peaceful Life), சுக வாழ்வு (Pleasurable Life), உரிமை வாழ்வு (Life with Fraternity), விடுதலை வாழ்வு (Life with Independence) …. உருவாக வேண்டுமென்றால் ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் (A Great Social Change) உருவாக்கப் பட்டாக வேண்டும். அதுவும், ஒரு முழுமைப் புரட்சியின் மூலம் சமுதாயக் கட்டமைப்புக்களனைத்தும் நொறுக்கப்பட்டுத் தேவைக்கேற்ப புதிய வடிவில் கட்டியமைக்கப்படல் வேண்டும். (A Radical Change as a whole in the Social setup must take place. And that too must be carried out by a ‘Total Revolution’. If not, nothing can be done. All other political changes, Revolutions, Renaissances and Reformations can not do even a pin-point benefit to the commons or the public or the citizens….) இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது.

    இந்த நாட்டில் எத்தகைய மாபெரும் ‘அரசியல் மாற்றங்கள்’, ‘அரசியல் புரட்சிகள்’, ‘அரசியல் மறுமலர்ச்சிகள்’, ‘அரசியல் சீர்திருத்தங்கள்’ … ஏற்பட்டாலும் அவற்றால் பொதுமக்களுக்கு ஊசிமுனையளவு கூட நன்மை ஏற்படவே ஏற்படாது! ஏற்படவே முடியாது! ஏற்படவே இயலாது!….. இம்மாபெரும் தெளிந்த பேருண்மையினை இந்திய விடுதலைப் போராட்டத்திலிருந்து இன்றுவரை இந்திய அரசியல் வாதிகள் ஒப்புக் கொள்ள அல்லது ஏற்றுக் கொள்ள வெறுக்கிறார்கள்! மறுக்கிறார்கள்!! எதிர்க்கிறார்கள்!!! ஆனால், ஏறத்தாழ எல்லா அரசியல் தலைவர்களுக்கும் இந்தப் பேருண்மை தெரியும், புரியும். இருப்பினும் எவருமே இதை உரிய அளவு, பெரிய நிலையில் உணரவில்லை என்று கூறலாம். ஆனால், இந்திய அரசியல் வாதிகள் இந்தப் பேருண்மையை உணர இயலாதவர்கள் என்றோ! அல்லது உணர முடியாதவர்கள் என்றோ கூறத் துணியவே மாட்டோம் யாம்.

    ஏனெனில் எம் தந்தை எம்மை வரட்டுச் சூத்திரவாதியாகவோ! முரட்டுத் தத்துவ வாதியாகவோ! ஆரவாரக் கற்பனா வாதியாகவோ உருவாக்க வில்லை. யாம் ஒரு மாபெரும் தத்துவத்தின் வாரிசு. (I am a Theoretician. I have a clear, well-formed, framed political philosophy, policy and principle. So, I have a long look to the future with lifted heart and strong mind. Even I can state or explain clearly all the means and ways to achieve the great and noble aims and expectations. So, innumerable followers or disciples will spring out all over the nation to carry out or to lead or to fulfill my life career; that is to say the Theory, the Policy, the Principle…) யாம் ஒரு தத்துவவாதி. எமது தத்துவம் நன்கு வடிவப்பட்டது, வளர்க்கப்பட்டது. ‘பலகாலம் பலமுறை ஆராயப்பட்டுப் பக்குவமாக உருவாக்கப்பட்ட ஒன்று’. அதாவது எமது தத்துவம் எளிதில் எவரும் செயல்படுத்தக் கூடிய ஒரு செயல் வடிவச் சித்தாந்தமாகும். இதனை செயலுக்குரிய கொள்கை அல்லது நடைமுறை வேதம் என்று கூறலாம். எனவேதான், யாம் ஓர் உயர்ந்த உள்ளத்தோடும், உறுதியான உரமிக்க சிந்தையோடும், வருங்காலத்தை தீர்க்கமாகத் தொலைதூரம் நோக்கி ஆய்வு செய்தபடி எமது செயல்களைச் செய்கிறோம் என்று துணிவாகப் பணிவுடன் வெளியிடுகிறோம். இது ஆரவார அகம்பாவ உரையல்ல; இது உண்மையான உரிமையுரையாகும்.

    இந்த நாட்டைப் பொறுத்தவரை கலை, இலக்கியம், கல்வி, தொழில் எனும் நான்குமே வலிமையான உயரமான பக்கச் சுவர்களாக அமைந்த ஒரு சிறைச்சாலையே தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்தச் சிறைச்சாலைக்குள்தான் எல்லா அரசியல்வாதிகளும், சமுதாயவாதிகளும் ஆயுட்காலக் கைதிகளாக அடைபட்டிருக்கிறார்கள். இதனைப் புரியாத அவர்கள் வேகமாக நடந்தும், விறுவிறுப்பாக ஓடியும், உரக்கப் பேசியும் பார்க்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் அனைத்தும் சிறைச்சாலை சுவர்களைத் தாண்டுவதே இல்லை. இதனால்தான், மிக நெடுங்காலமாக எத்தனையோ பேராற்றல் மிக்க அரசியல், சமுதாயப் பெருந்தலைவர்கள், மாவீரர்கள்… தோன்றியும்கூட இந்நாட்டு மக்களுக்கு நன்மையைச் செய்ய முடியவில்லை. எனவே, முதலில் இந்தச் சிறைச்சாலையை உடைத்துத் தகர்க்க வேண்டும். அதற்காக வெடி வைத்தால் இடிந்து விழும் கட்டிடம் உள்ளிருக்கும் அனைவரின் உயிரையும் குடித்து உடலையும் உருக்குலைத்து விடும். அதனால், முறைப்படி சிறைச்சாலையின் முன் கதவைத் திறந்தே அனைவரையும் விடுவித்தாக வேண்டும். அதற்கு முன் கதவைத் திறக்கும் உரிமையும், அதிகாரமும் தேவை. அவற்றைத் தரக் கூடியதுதான் இந்துமதம்.

    அதாவது, இந்த நாட்டின் கலை, இலக்கியம், கல்வி, தொழில் எனும் நான்கையும் தேவைக்கேற்ப மலர்ச்சிப் படுத்தவோ அன்றி வளர்ச்சிப் படுத்தவோ வேண்டுமானால் அதற்கு இந்துமதத்தின் துணைதான் இன்றியமையாதது. இதனை இன்னும் சற்று நேரடியாகவும், வெட்ட வெளிச்சமாகவும் கூற வேண்டுமானால், இந்து மதத்தின் வழியாகத்தான் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் அல்லது மலர்ச்சியையும் அல்லது வளர்ச்சியையும் செய்ய முடியும்! செய்ய முடியும்! செய்ய முடியும்! அப்படி யல்லாமல் இந்து மதத்தை மறந்தோ! துறந்தோ! புறக்கணித்தோ! மறுத்தோ! வெறுத்தோ! எதிர்த்தோ!…. எதையுமே முழுமையாகச் சாதிக்கவே முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது!

    ஒருவேளை யாராவது இந்து மதத்தின் துணையன்றி ஒரு சில சாதனைகளை சாதித்திருப்பார்களேயானால் அவை காலையில் புல் நுனியில் காணப்படும் பனித் துளிகள் போல் விரைவில் மறையும்! மறையும்! மறையும்! எனவேதான், முதலில் உடனடியாகச் சமுதாய மாற்றம் (Social Change) ஏற்படுத்துவதற்குரிய அறவழி முயற்சியாக! அமைதிவழி முயற்சியாக! மென்மை வழி முயற்சியாக ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற பண்பாட்டுக் கழகத்தின் மூலமாகச் சமுதாய மாற்றப் பணிகள் துவக்கப் பட்டுள்ளன. எம் மதத்தவரும், மொழியினரும், வட்டாரத்தினரும், இனத்தவரும் புண்படாமல் கருத்து விளக்கங்கள் மூலம் தீர்த்து பணிகள் துவக்கப் பட்டுள்ளன. இன்றைய நிலையில் இந்தியத் துணைக் கண்டம் வாழும் எல்லோரும் இந்தியராக ஏற்கப்பட்டு எல்லா வித உரிமைகளையும், பெருமைகளையும் உலகியல் வாழ்வில் பெறுவர். இப்படி யேற்கப்படும் எல்லா நாட்டினரும், மதத்தவரும், மொழியினரும், இனத்தவரும் தொன்று தொட்டு வரும் இந்தியப் பண்பாட்டு மரபு வழிக் கூறுபாடுகளைப் (The Indian Cultural Heritage) போற்றிப் பேணி மதித்துக் காப்பாற்றக் கடமைப் பட்டவர்களாவர். இக்கருத்தே இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் அடிப்படையாகவும், உயிராகவும் இருந்து வருகிறது. இந்தியப் பூர்வீகக் குடியான தமிழினத்தின் சமயத் தத்துவமும் (The Religious Philosophy and Theology of the Tamils who are the aboriginates of the India) சித்தாந்தமும் உலக மக்களிடையில் உள்ள மத மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும், ஆத்திகப் போட்டிகளையும் அகற்றி வரும் மதத்தால் ஒன்றுபட்ட ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வாழுமாறு செய்வதே இவ்வியக்கத்தின் குறிக்கோள். இதற்கு ‘மதவழிச் செயல்பாடே மனித நல்வாழ்வைக் காக்கும்’ (The approaches and attempts through Religion can alone take care of the Universal Human Welfare) என்ற சித்தர்களின் கருத்தே அடிப்படையாக அமைகின்றது.

    விரிவஞ்சி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறோம். எமது நூறாயிரக் கணக்கான கட்டுரைகளும், நூற்றுக் கணக்கான நூல்களும் கையெழுத்துப் பிறதிகளாக உலவியே உலகெங்கும் “அருளாளர்களை” (Divinators, Mystics, Sages and Saints) உருவாக்கி யிருக்கின்றன என்கின்ற நிலையில், அவற்றில் சிலவாவது அச்சேறிய நூல்களாக (Printed Books) உலவ ஆரம்பித்திட்டால்

    அத்துணையும் அத்தனால் ஆத்தாவால் நிகழும் எனத் தூய மறைமுதல் இறைவர் மேல் ஆணையிட்டுரைக்கிறோம்.

    ஓம் திருச்சிற்றம்பலம்

    தென்னாடுடைய சிவனே போற்றி!

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

    அரகர நமப் பார்வதி பதே

    அரகர மகாதேவா

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

    எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே

    எல்லாம் வல்லான் தனையேத்து

    தொடர்புடையவை: