Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் அருளியவை>
  • சாதிகள்.
  • சாதிகள்.

    சாதிகள்.

    Reference: Title of the Book: Southern India (252 பக்கங்கள்) Painted by Lady Lawley, Described by F.E.Penny, Published by A&O Black, London.

    Page 106

    ‘When they divided Purushu, how many portions did they make? What do they call his mouth and arms? What do they call his thighs and feet?’

    ‘The Brahman was his mouth, of both his arms was the Rajasya made. His thighs became the Vaisya, from his feet the Sudra was produced’

    --(Rig Veda, X 90, 11,12.)

    Page 107

    Before the laws of Manu were formulated, caste, if it existed at all, was a vague, unobtrusive institution. No mention is made of it in the Vedas except in the foreshadowing said to be shown in the above lines. The legend runs that Purushu, the supreme deity sacrificed himself and permitted himself to be cut into four parts. From those four parts sprang the four original Castes, Brahmans, Kshatrias, Vaisyas and Sudras.

    Page 108 (சங்க காலத்தில் சாதி ≠) பொருளாதார அடிப்படையில் உயர்வு தாழ்வு (சாதி)

    There must always have been since the birth of man the distinctions that inevitably result from the varying conditions of life. The owner of flocks and herds was held to be in a superior condition to the man employed to tend those flocks and herds. A difference of position must equally have existed in the family and tribal circle, where one man was by primogeniture or by Common Consent acknowledged to be the head of the family or the tribe; but there is nothing to show in history that one Community claimed superiority sufficient to refuse the admission of another Community to a share in its religious rites and social ceremonies.

    தொழிலினடிப்படையில் பிரிவேற்பட்ட பிறகே சாதிமுறை மனுவால் உண்டாக்கப் பட்டது.

    It was not until the Aryans had established themselves in the country that the caste system was evolved. In its inception it was racial in character. The ruling race separated itself from the conquered race. At the sametime this separation was influenced unconsciously by trade; and the groups formed themselves into primitive trade guilds, protective of trade interests.

    …. வேண்டிய இன்றியமையா நிலையேற்பட்டது. அதற்குரியனவற்றைப் புலவர்களும், வேந்தர்களும் எவ்வளவோ முயன்றும் முற்றிலும் உருவாக்க முடியவில்லை. மேலும், ஓரளவு அவர்கள் உருவாக்கிய சட்டதிட்டங்களைச் சமுதாயத்தில் செயல்படுத்த முடியவில்லை. இந்த இக்கட்டான நிலையிலேயே ‘இறை நிலைக் கொள்கை’யை அடிப்படையாகக் கொண்டு சமுதாயச் சீரமைப்பிற்குரிய சட்டதிட்டங்கள் மதம் (Religion) என்ற பெயரில் உருவாக்கப் பட்டுச் சமுதாயத்தில் புகுத்தப் பட்டது.

    ‘இறைவன், மறைமுதல்வன், கடவுள் நிறைவு பெற்றவன், எல்லாம் வல்லவன், எல்லாமாக இருப்பவன், அனைத்துக்கும் அரசன்,….’ முதலிய சொற்கள் தமிழரிடம் இருந்த தெய்வ நம்பிக்கை, வீரவழிபாடு, பெரியாரைப் பணிதல் முதலிய பண்புகளுக்குப் புத்துயிரூட்டின. எனவே, ‘மதம்’ விரைவில் விரிந்த அளவு எங்கும் பரவிற்று.

    அது கண்டு அரசர், வணிகர், வேளாளர் முதலியோர் தனித்தனியாகச் சென்று மதத் தலைவர்களிடம் தங்கள் தங்களின் வாழ்வு என்றும் நிலைபேறு பெற்றிருக்க வகை செய்யும் வண்ணம் வேண்டிக் கொண்டனர்.

    அப்பொழுதுதான், இந்நாட்டில் வேலன் வெறியாடுபவர், குறிசொல்வோர், அருளாளி, மருளாளி, பூசாரி (பூசு + செய் -> பூசை i.e. வழிபடுகின்ற இடத்தை மெழுகல், வழிபடும் வேல் அல்லது உருவம் நெய், சந்தனம், புனுகு முதலியன பூசிப் பின் தொழுதல். பூ + செய் -> பூக்களால் செய்யப் படுவது. செய் + கை -> சைகை, Similarly, பூ + செய் -> பூசை) … முதலியோர் ஒன்று சேர்ந்து ஆரியரிடம் கலந்து சிந்தித்தனர்.

    இந்நிலையில் ஆரியர் தங்களுடைய சமுதாயத்தில் பிறாமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு பகுப்பினையும் தமிழ்ச் சமுதாயத்தில் புகுத்தலே சமுதாயக் குழப்படியைத் தீர்த்தற்குச் சாலச் சிறந்த வழியென்று அறிவுரை நல்கினர்.

    அதுகேட்டு மதத்தலைவர்கள் மருண்டனர். அதற்கு, “நீங்கள்தான் (பிராமணர்) ‘அந்தணர்’ என்று அறிவிக்கப் பட்டுவிடுகின்றீர்களே. உங்களுடைய பரம்பரையில் வரக் கூடியவரும் சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக வாழ வாய்ப்புண்டே. என்றென்றும் நீங்களே அரசர், வணிகர், வேளாளர் முதலிய மூவரையும் நீங்களே ஆட்டிப் படைத்திடலாம். அதோடு ‘வாழ்வால் உயர்ந்தவர் அந்தணர்’ என்ற மரபு இருத்தலாலேயே அந்தணர் கூட்டம் பெருகிடுவதால் புதுக் குழப்பங்கள் மிகுவதைத் தடை செய்யலாம்” என்றனர்.

    புத்தம், அமணம் முதலிய மத அமைப்புக்களில் மதத் தலைவர்கள் அம்மதத்தைச் சார்ந்த மக்களை ஆளுவதைக் கண்டு அந்நிலையினைத் தாங்களும் அடைய ஆவல் கொண்ட அந்தணர் ஆரியரின் நால்வகைப் பகுப்பைத் தமிழ்ச் சமுதாயத்தில் புகுத்த ஒப்பினர்.

    ‘அரசர்கள் தாங்கள் உழவர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பதை மறந்து விட வேண்டுமென்றும்; ஓர் அரசக் குடும்பம் இன்னொரு அரச குடும்பத்துடனேயே எல்லாத் தொடர்பும் கொள்ள வேண்டுமென்றும்’ ஆரியர் கூறிய அறிவுரை கேட்டு அரசர்கள் திகைத்தனர்.

    அப்பொழுது, “இப்படிச் செய்தால்தான் நீங்களே என்றென்றும் அரசர்களாய் இருக்க முடியும். செல்வத்தாலோ, அறிவாலோ, உடல் வன்மையாலோ சிறந்தவர் நாட்டை ஆளும் வாய்ப்பு என்றுமே இருக்குமேயானால் உங்கள் பரம்பரையினர் என்றென்றும் நாடாள்வோராக இருக்க இயலாது. நாங்கள் சொல்வதுபோல் நீங்கள் (க்ஷத்திரியர்) ‘அரசமரபினர்தான் நாடாள வேண்டும் என்பது ஆண்டவன் (கடவுள் & also the ancestors who ruled the country) கட்டளை’ என்று சொன்னால்தான் ஆளுகை யார் கைக்கு மாறினாலும் அரசகுடும்பத்தவரே ஆளும் வாய்ப்புக் கிட்டும். மேலும் நீங்கள் பிறப்பில் உயர்ந்தவர்கள் என்ற கருத்து மக்களிடையில் நன்கு பரவினால்தான் என்றென்றும் உங்களின் அடிமைகளாக இருப்பார்கள். புதுக் குழப்பங்கள் ஏற்படவே ஏற்படாது. மற்றவர்களை யெல்லாம் விட (க்ஷத்திரியர்) அரசர்களாகிய நீங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்பதால் உங்களுக்குப் பெருமையே அதிகம்….” என்று பதில் கூறினார்கள். இவற்றை நன்கு எண்ணிப் பார்த்த வேந்தர்கள் இவற்றை விட வேறுவழி இல்லையென்று முடிவு கட்டி ஒப்புக் கொடுத்தனர்.

    வணிகர் பெருமக்களிடம் “ஐயா, நீங்கள்தான் உள்நாட்டையும் வெளிநாட்டையும் ஆள்பவர்கள். அரசர்களுக்குக் கூட உள்நாட்டையோ, வெளிநாட்டையோ உங்களைப் போல் சுற்றிப் பார்க்கவும், இன்பம் துய்க்கவும் வாய்ப்பில்லை. அரசு மாறினாலும் மாறாவிட்டாலும் நீங்கள் என்றும் அரசர்களாகவே (செல்வத்தில்) வாழலாம். உங்களைத்தான் மக்களின் உண்மையான ஊழியர்கள் என்று கூற முடியும். அரசர்கள் வாழ்வு வளம் பெறவும் மக்களின் வாழ்வு சிறக்கவும் பேருதவி புரிபவர்களாக உள்ளவர்கள் நீங்களே. நீங்கள் என்றென்றும் உங்கள் நிலையிலிருந்து மாறாமலிருக்க மற்றவர்கள் உங்களுடன் போட்டியிடாமலிருக்க வேண்டும். வணிகர்களாக வாழும் வாழ்க்கை ஓய்வும் இன்பமும் நிறைந்த ஒன்று என்பதை அனைவரும் உணர நேரிடின் பேரிடர் வந்துற்றிடும். அதைத் தடுத்தற்கு ஒரே வழி ‘வணிகர்கள்தான் வணிகம் செய்ய வேண்டும்’ என்ற சட்டத்தைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு ‘ஆண்டவன் (கடவுள் or Kings) படைப்பில் (வைசியர்களை) வணிகர்களைப் படைத்து வணிகம் நடாத்தச் சொல்லியுள்ளார். எனவே, மற்றவர்கள் வணிகம் செய்ய எண்ணுவதும் தீவினையே (பாபம்). அதை அனைவரும் தடுக்க வேண்டும்’ என்ற விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஆரிய சமுதாயப் பிரிவு அப்படியே தமிழ்ச் சமுதாயத்தில் புகுவதே நன்று என்று கூறப்பட்டவுடன் அதை வணிகரும் வரவேற்று விட்டனர்.

    உழவர் பெருங்குடியினர் தாங்கள் அரசகுடும்பத்தோடு கொண்டிருந்த தொடர்பு அறுக்கப் படுவதையும்; தாங்கள் விரும்பியபோது மேற்கொண்டிட்ட வாணிக வாழ்வு தடுக்கப் படுவதையும் கண்டு கொதித்தெழுந்தனர்.

    அவர்களைச் சமாதானப் படுத்துவது இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர்ந்தனர். அவர்களுக்குரிய சமாதானம் கூற ஆரியர்களே முன்வந்தனர். “நீங்கள்தான் எல்லாருக்கும் உயிரூட்டும் உழவுத் தொழிலை மேற்கொண்டுள்ளீர்கள். உங்களின் தொழில் மிக உயர்ந்த தொழில். அமைதியாக வாழும் உங்கள் வாழ்க்கை அரச வாழ்வு போன்று அழிவை எப்பொழுதும் எதிர்பார்த்து அஞ்சத் தேவையில்லை. வணிகரின் வாழ்வு போன்று ‘கப்பல் கவிழுமோ!’ ‘கொள்ளைக் கூட்டம் வழிப்பறி செய்யுமோ!’ என்று வாடிவருந்தத் தேவையில்லை. பிறரைத் துன்புறுத்தவோ ஏமாற்றியோ வாழ வேண்டிய தேவையே ஏற்படாத ஈடு இணையற்ற உயர்ந்த வாழ்வினைப் பெற்றவர்களே நீங்கள். அரசகுடும்பத்தோடு தொடர்பு கொண்டால் அழிவே ஏற்படும். வணிகரோடு தொடர்பு கொண்டால் பொருட்கவலை என்றும் இருந்து கொண்டே இருக்கும். எனவே, நீங்கள் என்றென்றும் உழவர்களாகவே இருத்தலே நன்று. அதுமட்டுமல்ல, வணிகர்கள் தங்களிடம் உள்ள பொருளை உழவுத் தொழிலில் முதலீடு செய்திடின் அவர்களோடு போட்டியிட்டு உழவுத் தொழிலைச் செய்ய இயலாமல் போய்விடும். அதுமட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் வணிகர்களின் அடிமைகளாக, ஏவலாட்களாக, பணியாட்களாக மாறும் நிலையே வேளாளர்க்கு ஏற்படும். அதேபோல், அரசகுடும்பத்தவரே உழவுத் தொழிலில் ஈடுபட நேரிடின் நல்ல விளைநிலங்களெல்லாம் அவர்களால் எடுத்துக் கொள்ளப்படும். ஏறத்தாழ எல்லா வேளாளர்களும் அரசர்க்குப் பணிபுரியும் நேரடி வேலையாட்களாக மாற நேரிடும். இவற்றை யெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் ‘உழவுத் தொழிலை வேளாளர் மட்டுமே (சூத்திரர்) செய்தல் வேண்டும்’ என்று சட்டம் செய்தலே நன்று” என்றனர்.

    அப்பொழுது வேளாளர், “நாங்கள் அந்தணர், அரசர், வணிகர் முதலிய மூவர்க்கும் அடிமையாக நேரிடுகிறதே” என்று சுட்டிக் காட்டினர்.

    அதற்கு ஆரியநெறியினர், “உங்களை மூவர்க்கும் அடிமை என்று யார் கூறியது. நீங்கள்தானே மூவரையும் ஆட்டிப் படைப்பவர் (சூத்ரதாரி). நீங்கள் இல்லாவிட்டால் நாடேது? மேலும் நால்வகைப் பெரும்பிரிவாக மக்களைப் பிரிப்பது ஒருவர் இன்னொருவராக மாறுவதன் மூலம் ஏற்படக்கூடிய குழப்படிகளைத் தடுப்பதற்காகத்தானே தவிர யார் யாரைவிட உயர்ந்தவர்? எவர் எவரைவிடத் தாழ்ந்தவர்? என்று ஆராய்வதற்கு அன்று. நிறுவவதற்கு அன்று. மக்களனைவரும் ஒன்றுதான். ஆனால், அவரவர் அவரவர்க்குரிய குடும்பத் தொழில்களிலேயே ஈடுபடல் வேண்டும். அப்பொழுதுதான் பிறப்பும், குடும்பச் சூழலும், பெற்றோர் அறிவிக்கும் நுண்ணிய செய்திகளும், அளிக்கும் பட்டறிவும் (experience) நடாத்தும் தொழிலில் திறமை மிகுதி பெருகிடும். இவற்றைத் திட்டமிட்டுச் செய்யவே நால்வகைப் பெரும்பிரிவாக தமிழ்ச் சமுதாயத்தை மாற்றியமைக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டிட்டது” என்று காரணங் கூறினர்.

    இக்காரணங்களை வேளாளர் பெருமக்கள் ஓரளவு ஏற்றுக் கொள்ளும் நிலையை அடைந்தனர். ஆனால், ‘தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் நாடாள்வோராக இருக்கின்றார்கள். அப்படி இருக்கும்பொழுது அரச குடும்பத்தோடு உறவு கொள்ள முடியாமல் செய்திட இவ்வாரியச் சட்டங்கள் பயன்பட்டிடுமோ’ என்றஞ்சினர்.

    இவ்வச்சத்தைப் அகற்றும் பொருட்டு ‘அரச பரம்பரையினர் (க்ஷத்திரியர்) யாருடன் வேண்டுமானாலும் குடும்பத் தொடர்பு கொள்ளலாம். அதற்கு விதிவிலக்கு உண்டு’ என்று சமாதானம் கூறினர். அதோடு, ‘வேளாளர்களைச் ‘சற்சூத்திரர்’ என்றும் மற்றவர்களைச் ‘சூத்திரர்’ என்றும் பிரித்துக் காட்டியதன் மூலம் வேளாளர் சூத்திரரைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று உயர்வு மனப்பான்மை (Superiority Complex) ஏற்படச் செய்தனர்.

    இப்படித் தமிழ்ச் சமுதாயத்தில் புகுத்தப் பட்ட நால்வகைப் பகுப்புக்களை ஏற்க மறுத்து எதிர்க் குரல் கிளப்பியவர்கள் தாங்களாகவே ஒதுங்கிச் சென்று வாழ்ந்தார்கள். இன்றுவரை ஆரியரின் சாதிப் பாகுபாடுகளையும், சடங்குகளையும் ஏற்காதவர்களே இன்று ‘பறையர்’ என்று அழைக்கப் படும் ஆதிதிராவிடர். வேடுவக் கூட்டமாக நாடோடிகளாக வாழ்பவர்களும் இம்மாதிரித் தோன்றியவர்களே!

    தமிழ்ச் சமுதாயம் முற்றிலும் ஏற்றோ ஏற்காமலோ தொழிலின் அடிப்படையில் பகுக்கப் பட்டதாகக் கூறப்பட்ட நால்வகைச் சாதி நாட்டில் நடமாடத் தொடங்கியது.

    ஆரியர் நால்வகைச் சாதிகளுள் ஒன்று இன்னொன்றை விட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று கூறித் தமிழ்ச் சமுதாயத்தின் ஒற்றுமையைக் குலைத்தனர். மூவேந்தருள் மட்டும் எப்பொழுதாவது போர் நிகழ்ந்திட்ட நிலை மாறி அன்றாடம் சாதிச் சண்டைகள் மிகுந்திட்ட நிலை தமிழகத்தில் உருவாகி வளர்ந்திட்டது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டுத் தமிழ்ச் சமுதாயத்தின் தலைவர்களாக விளங்கிய அந்தணர்களின் மூலம் பல தெய்வ வணக்கத்தையும், பூசைமுறைகளையும், வேள்விகளையும் தமிழகத்தில் புகுத்தினர். (அந்தணர்கள் ≡ குருக்கள், பட்டர், தீட்சிதர் …. ≡ ஆதித் தமிழர்)

    ‘அந்தணர் பிறப்பால் தங்களை உயர்ந்தவர்’ என்று பிடிவாதம் பிடித்தனர். ‘மற்றவர்கள் செயலால் சிறந்தவராயினும் அந்தணர் ஆகார்’ என்று கூறினர். இதனால், ‘கோவில்களில் மணியாட்டும் சிறு கூட்டமானார்கள் அந்தணர்கள். வேறு வழியின்றி ஆரிய நாகரிகத்தை ஏற்றனர். ஆனால், இன்றும் ஆரியரைக் கோவிலுக்குள் விடுவதில்லை.

    போர்த்தொழிலில் பெருவிருப்புடையவர் அவரவர் படைப்பிரிவில் பெற்றிட்ட இடத்திற்கேற்ப முதலியார், இடையர், செங்குந்தர், கள்ளர்(ஒற்றர்), மறவர், அகம்படியர், அம்பலகாரர், வீரக்கொடியினர்…. என்றழைக்கப்பட்டுச் சாதியாக மாற்றப் பட்டது.

    பொற்கொல்லர், பொன்னிலுள்ள குற்றங்களை அறிபவர் ஆசு + அறிபவர் –> ஆசாரியார் ஆயிற்று. பிறகு உட்பிரிவுகள். கொத்தர், உப்பிலியர்…. முதலியவர் தோற்றுவிக்கப் பட்டனர்.

    சாதி சட்டமானது:

    இன்று வழக்குரைஞர், ‘தனது மருமகன் வழக்குரைஞராக இருக்க வேண்டும் அல்லது தனது மருமகள் வழக்குரைஞரின் மகளாக இருக்க வேண்டும்’ என்று விரும்புகின்ற நிலையைக் காண்கின்றோம். இதேபோல், மருத்துவர், ஆலையரசர், துணிக்கடை உரிமையாளர், மரக்கடை உரிமையாளர், பழக்கடை உரிமையாளர்,…. etc. ஆனால், வழக்குரைஞர் வழக்குரைஞர் வீட்டில்தான் திருமணத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்; Similarly, மருத்துவர்…. etc. என்றால் அந்நிலை எத்தகைய சிக்கல்களை உருவாக்குமோ அத்தகைய சிக்கல்களே தமிழ்ச் சமுதாயத்தில் தொழிலின் அடிப்படையில் ஆரியரின் அறிவுரையைத் துணையாகக் கொண்டு வகுக்கப்பட்ட நால்வகைச் சாதிப் பாகுபாடுகளும், இதர சாதிகளும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளக் கூடாது என்ற சட்டம் எழுந்தபோது விளைந்தது.

    கி.மு. முதலாம் நூற்றாண்டில் சாதி சட்டமாகியிருக்கலாம். கி.பி. முதலாம் நூற்றாண்டில் மதுரையின் அழிவு. கி.பி. 4ஆம் நூற்றாண்டு வரை குழப்பம் நீடித்தது. கலங்கிய குளத்தில் மீன்பிடிப்பது எளிது என்பது போல் தமிழ்ச் சமுதாயத்தை சாதி எளிதில் பிடித்து விட்டது. அவரவர் தங்களது சாதியைப் பற்றிப் பெருமை பேசிடும் உணர்வையும், அடுத்தவர் சாதியைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசும் பண்பையும் உருவாக்கிட ஆரியர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் நான்கு நூற்றாண்டுகள்.

    குடும்பப் பெருமை, பழம்பெருமை முதலியவை பேசிப்பேசிப் பழகிப் போன தமிழ்ச் சமுதாயம் சாதிப் பெருமை பேசிட முன்வந்தது வியப்பிற்குரிய நிகழ்ச்சியல்ல. வீரமும், காதலும் கண்ணென வாழ்ந்தவன் சாதிப் பித்திலும், சாதிச் சண்டையிலும் பற்றுக் கொண்டான். போர் எப்பொழுதாவது நிகழ நேரிட்டதால் தினவெடுத்த திண் தோள்களின் வலிவைக் காட்ட வழியற்று வருந்திய வீரர் கூட்டம் அன்றாடம் சாதிச் சண்டைகளில் ஆழ்ந்தது.

    கலவரக் காலம் ‘களப்பிரர் காலம்’. அதாவது வேளாளரின் கீழிருந்த ஒற்றர் (கள்ளர்), வீரர் (மறவர்), கோட்டைக்குள் பணிபுரிபவர் (அகம்படியர்), ஊர்த்தலைவர் (அம்பலகாரர்), முதலிய போர்த் தொழிலாளர்கள் தங்களின் தலைவர்களுக்குத் (வேளாளர்) துரோகம் (betray, undermine -> அறைபோதல், துரோகி -> அறைபோகி) செய்தனர். திருட்டுத் தனமானவர்கள் (நம்பிக்கைக்குரியவர்களல்லர் - கலகக் காரர் -> களப்பிரர் or போர்த் தொழில் செய்பவர் = (போர்க்)களத்தில் இருப்பவர் -> களப்பிரர்) கி.பி. முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டை ஆங்காங்கு துண்டு போட்டு ஆளுகை நடத்தினார்கள்.

    நாட்டைத் துண்டாடி அரசாண்டவர்களை அரசர் என்று அனைவரும் ஏற்றிட ஆரியர் பெருந்துணை புரிந்தனர். பூணூல் அணியும் பழக்கம் வீரமரபிற்கு உரியதாக்கப் பட்டது. முழுக்குடுமி போய் ஆரியரின் உச்சுக்குடுமி பழக்கமாயிற்று…. etc.

    நாட்டைப் பிரித்தாண்ட களப்பிரர் நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் செழித்திட ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினர். அதுமட்டுமல்ல ஆளுகை பற்றியே (Politics) கவலை கொண்டு எப்பொழுதும் அரசியல் பேசும் மக்களை வேறு ஏதாவது பேசுவதிலும் செய்வதிலும் திருப்ப வேண்டும் என்று விரும்பினர். இதற்குரிய அறிவுரையைத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் புதியவரான ஆரியரிடம் கேட்டனர். அவர்கள் இட்டுக் கொடுத்த திட்டம்தான் கோவில்கள். ஆண்டவன் - அரசனின் முன்னோன் எப்படியெப்படி வாழ்ந்தான் என்று சித்திரிக்கும் அன்றாட நாடகச் சாலையாயிற்று கோவில்.

    அந்தணர்கள் தங்களின் உயர்வைக் குறிக்கவும், தங்களின் நெறிநிறைந்த நல்வாழ்வின் கோட்டையாகவும் கோவிலைப் பயன்படுத்தினர்.

    சாதிச் சண்டைகள் மிகுந்திட்டதால் தமிழக மக்களின் ஒற்றுமை குலைந்தது. அப்பொழுது ஆரியரையே முழுக்க முழுக்க அறிவுரை கூறுபவர்களாக ஏற்றுக் கொண்டிட்ட மக்கள் கூட்டமொன்று நாட்டைக் கைப்பற்ற முயன்றது. அவர்கள் ‘பல்கலை வல்லவர்கள் -> வல்லவர்கள் ≡ பல்லவர்கள்’.

    தமிழகத்தை ஆரியர்களின் உதவியால் குறுகிய காலத்தில் ஒருங்கு சேர்த்து நல்லரசாகப் பேரரசு நிறுவியவர்களைத் தமிழ் மக்கள் ‘வல்லவர்’ என்று போற்றினர். ஆனால், வடமொழியாளர் ‘வ’ என்ற எழுத்தை ‘ப’ என்று ஒலிப்பராதலால் ‘வல்லவர்களை’ப் ‘பல்லவர்’ என்று அழைத்தனர்.

    ‘வல்லவர்கள்’ குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தவர். (Hill Tribes) குறவர், ஒட்டார், நாடோடிகள், பளியர்… முதலியவர் இவர்களைச் சார்ந்தவர்களே. கொச்சையான (slang) தமிழ் பேசுமிவர்கள் முழுக்க முழுக்க ஆரியர்களையே எல்லா அறிவுரைகளையும் அளிப்பவர்களாக ஏற்றுக் கொண்டார்கள். அதனால் வடமொழிக் கல்லூரி, வடமொழி வாணர்கள் தமிழகத்தில் நிலைபேறு பெற்றனர்.

    மலைசாதி மக்களாதலால் கற்சிலை செதுக்குவதில் வல்லவர்கள். இதை வரலாற்றில் வல்லவ வேந்தர்கள் சிறந்த சிற்பிகளாக இருந்தார்கள் என்பதற்கு நிறைய ஆதரவு உள்ளது. மலைநாடுகளில் மட்டும் சிறப்புற்றிருந்த கற்றளி யமைப்பு நாடெங்கும் சிறக்க வல்லவர் வழிவகுத்தனர்.

    வல்லவர்கள் புதுமை விரும்பிகளாக இருந்ததால் வடநாட்டிலிருந்து வந்தவர்களை எல்லாம் வரவேற்றுத் தமிழ்ச் சமுதாயத்தில் இடம்பெற வாய்ப்பளித்தனர்.

    ஆரியர்கள் தமிழகத்தில் சிறந்த செல்வாக்கினைப் பெற்றது ‘வல்லவர்கள்’ காலத்திலேயேயாம். எண்ணிறந்த சாதிகள் உண்டாக்கப் பட்டதும்; கடவுள்களுக்கு மிகுதியாகச் சிலை வடிக்கப்பட்டதும் ‘வல்லவர்கள்’ காலத்திலேயேயாம்.

    சமுதாயச் சடங்குகளை ‘வல்லவர்கள்’ ஆரியர்களைக் கொண்டே நிகழ்த்தினர். அதனால்தான் பாலி, வடமொழி முதலியவற்றில் திறமை மிக்கவர்களானார்கள். இன்றைக்கு ஆங்கிலம் கற்றவர்கள், ஆங்கிலத்தில் அனைத்தையும் எழுதி வைப்பது போல் வல்லவர்கள் தங்களது அரசியல் நிகழ்ச்சிகளிலும், கல்வெட்டுக்களிலும் பாலி, வடமொழி முதலியவற்றை மிகுதியாகக் கலந்திட்டனர்.

    மக்களின் சாதிகளையும், ஆரியர் விருப்பப்படி மிகுதியாதற்கு அடிகோளிவிட்டனர்.

    தொடர்புடையவை: