Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • அருளாட்சி ஆணைகள்.>
  • அருளாட்சி ஆணைகள் - ஆணை 13
  • அருளாட்சி ஆணைகள் - ஆணை 13

    அருளாட்சி ஆணைகள் - ஆணை 13

    பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 13 வது ஆணை

    மெய்யான இந்துமதத்தில் பெண்களின் முக்கியத்துவம்

    …. முதலிய கொடிய மானுட நல விரோதச் செயல்களும், துரோகச் செயல்களும் புகுத்தப் பட்டுத் தமிழ்ச் சமுதாயம் பாழாக்கப் பட்டுவிட்டது. இவை அனைத்தையும் முறியடித்துச் சித்தர் நெறி எனும் மெய்யான இந்துமதத்தை மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்ய வேண்டும்.

    அதற்காகப் பெண்ணினத்தைப் பற்றி மெய்யான இந்துமதம் கூறுகின்ற கருத்துக்களில் ஒரு சிலவாவது செயலாக்க வேண்டும்.

    …… இவை போன்ற எண்ணற்ற சித்தர் நெறிக் கருத்துக்களைப் பரப்பினால்தான் பெண்ணை இழிவுபடுத்துவதும், அடிமைப் படுத்துவதும், வலிமை யிழக்கச் செய்வதும், பெருமைகளைச் சிதைப்பதும், இன்ப வாழ்வைத் தடுத்துக் கெடுப்பதும், அறிவுக் கண்ணைக் குருடாக்குவதும் தடுக்கப் பட்டிடும்! தடுக்கப் பட்டிடும்! தடுக்கப்பட்டிடும்!

    இதற்குப் பதினெண்சித்தர்களின் நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள், பூசைமரபுகள், பூசைப்படிகள், பூசாவிதிகள், பூசாமொழிகள், 18 வகை வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், பலவகையான அத்திறங்கள், சாத்திறங்கள், சூத்திறங்கள், நேத்திறங்கள்….. முதலியவைகளில் பொருளாழமிக்க அழகிய சொற்¦றாடர்கள் ஆயுதங்களாகப் பயன்பட்டிடும்.

    சுருக்கமாகச் சொன்னால்,

    ‘மாதந்தோறும் மலரும் மலரான மங்கை பேரின்ப ஊற்றாக விளங்கிட வேண்டும்; அவள் எப்போதும் மஞ்சளும் பொட்டும் பூவுமாக மங்களமாக விளங்கிட வேண்டும். அவளே நடமாடுகின்ற கடவுளென உணர்ந்து போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்திட வேண்டும். அவளே அனைத்துக்கும் தலைமைச் சத்தியாக, வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாகப் பயன்படுத்தப்படல் வேண்டும். மாதொருபாகனை (அம்மையப்பனை) கருத்தில் கொண்டு ஆணும் பெண்ணும் சமமே என்றுணர்ந்து அனைத்திலும் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும் அவளுக்கு.’

    ….. இந்தக் கருத்து வாசகங்களை எல்லாம் செயலாக்குவதுதான் மெய்யான இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்குரிய வழிகள்.

    பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் (கி.மு.100 முதல் கி.பி.150 முடிய) கலியுகத்தில் கலி பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இந்துமதத்தின் விளைநிலமான இந்தியாவிற்குள் வந்த பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரால் வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சிநிலையும் நலிவடையப்பட்ட மெய்யான இந்துமதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காகத் தோற்றுவிக்கப் பட்ட இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் சாதனங்களாகவும், போதனைகளாகவும் பயன்பட்டு வருவனவற்றின் சாரமே மேற்கூறிய பெண்ணின் பெருமை பற்றிய கருத்துக்கள்.

    எனவே, அருட்பேரரசாக மலர்ந்திருக்கின்ற சோழப் பேரரசு மெய்யான இந்துமதத்தின் பெண்ணுரிமைகளையும் பெருமைகளையும் அரசியல் சட்டமாக அறிவித்துச் செயலாக்க வேண்டும். இதனைச் செய்யாமல் வட ஆரிய மாயையில் மயங்கித் தயக்கம் காட்டும் அருள்மொழித் தேவன் எனும் இராசராசனை எதிர்த்துப் போரிடவே வேண்டியிருக்கிறது. இதனைப் புரிந்தும் புரிய வைத்தும் செயல்பட்டிட்டால்தான் தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி பெருமைமிகு உரிமை வாழ்வு வாழச் செய்யும் மெய்யான இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும். வளவளர்ச்சி அடைந்திடும், வலிமைச் செழிச்சி உற்றிடும், ஆட்சி மீட்சி பெற்றிடும்.

    தொடர்புடையவை: