முகப்புப் பக்கம்>
மெய்யான இந்துமதம்>
இந்துவேத மதமே உலக மூலமதம்
இந்துவேத மதமே உலக மூலமதம்
இந்துவேத மதமே உலக மூலமதம்
இந்து வேதமதம் புரிந்திட வாரீர்!
இந்துவேத மதமே உலக மூலமதம்
இந்து வேத மதக் கருத்துக்கள்
அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் அருளுபவை.
அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார், இந்துவேத நாயகம், இந்து வேதபீடம், இந்துமதத் தந்தை, இந்துமதத்தின் முழுமுதல் தலைமை ஆச்சாரியக் குருபீட பதினெண்சித்தர் மடாதிபதி, பீடாதிபதி, கருகுல ஆதீனம், ஆதி அனாதி கடந்த தம்பிரான் சாமிகள்.
- அண்டபேரண்டங்களின் இயக்கங்களால் விளையும் ஐம்பூதச் சேர்க்கைகளால் உலகங்கள் தோன்றுவதும் சிதைவதும் நிகழ்கின்றன.
- ஐம்பூதச் சேர்க்கை விதிகளால் இயல்பாகப் பயிரினங்களும், உயிரினங்களும் தோன்றுவது போலவே, அருவ உருவ அருவுருவ உருவருவ உருவக் கடவுள்கள் தோன்றுகின்றன.
- பயிரினங்களும், உயிரினங்களும் உலகெங்கும் தோன்றுவது போலவே, பல்வேறு வகையான வண்னங்களையும், வடிவமைப்புக்களையும் உடைய மானுடர்களும் தோன்றினார்கள்.
- உலகின் ஆரம்பத்தில் பயிரினங்களும், உயிரினங்களும், மானுட இனங்களும் ஐம்பூதச் சேர்க்கை விதிகளால் பிறப்பெடுத்திடும்படி செய்திட்ட தட்ப வெப்ப இயற்கைச் சூழல்கள் அப்பொழுதே மாறிவிட்டதால் புதிதாகப் பயிரினங்களோ உயிரினங்களோ மானுட இனங்களோ தோன்றுவதில்லை, தோன்ற இயலவில்லை.
- அண்டபேரண்டங்களுக்கும் இந்த உலகுக்கும் உள்ள தொடர்புகளால் தோன்றக் கூடிய கடவுள்கள் தொடர்ந்து என்றென்றைக்கும் 1. திருக்கல், 2. தருக்கல், 3. கருக்கல், 4. குருக்கல் என்று நான்கு வகையினராகத் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.
- இவ்வுலகில் தோன்றக் கூடிய திருக்கல், தருக்கல், கருக்கல், குருக்கல் என்ற நான்கு வகைப்பட்ட கடவுள்களிலும், அருவ வடிவினர், அருவுருவ வடிவினர், உருவ அருவ வடிவினர், உருவ வடிவினர் என்ற நான்கு வகையினரும் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கின்றார்கள்; தோன்றி கொண்டே இருப்பார்கள்.
- கடவுள்கள் கோடான கோடிக் கணக்கில் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள், தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.
கடவுள்கள் பிறந்து கொண்டும் இருக்கிறார்கள், இறந்து கொண்டும் இருக்கிறார்கள், பிறப்பிறப்பற்ற பெருநிலை பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.
- கடவுள்கள் அதிக அளவில் தோன்றியது இளமுறியாக் கண்டமெனும் குமரிக் கண்டமே.
- கடவுள்கள் அதிகமாகத் தோன்றிய குமரிக் கண்டம் கடலுள் மூழ்கிய காலத்து மிஞ்சிய மிகப் பெரிய நிலப்பரப்பான தமிழகம்தான் இன்றைய, இவ்வுலகத்தின் கடவுள்களின் பிறப்பிடம், காப்பிடம், வாழ்விடம், தாய்வீடு, கருவறை, தங்குமிடம் ஆகும்.
- கடவுள்கள் கணக்கற்று வாழ்கின்ற நாடே தமிழகம்.
- கடவுள்களைச் சந்திக்கின்ற மனிதர்களும், மனிதர்களைச் சந்திக்கின்ற கடவுள்களும், கணக்கற்று வாழ்ந்த இடம், வாழுகின்ற இடம், வாழப் போகின்ற இடம் தமிழகம் ஒன்று மட்டும்தான்.
- கடவுள்களுக்கு என்று நாற்பத்தெட்டு வகையான கருவறைகள், நாற்பத்தெட்டு வகையான வெட்டவெளிக் கருவறைகள், நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையக் கருவறைகள், நாற்பத்தெட்டு வகையான கோயில் மூலக் கருவறைகள் என்று நூற்றித் தொண்ணூற்றிரண்டு (192) வகைப்பட்ட வாழ்விடங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கின்ற இந்துவேதத்திற்கும், இந்துமதத்திற்கும்தான் கடவுள்களைப் பற்றித் தெரியும்! தெரியும்!! தெரியும்!!! புரியும்! புரியும்!! புரியும்!!!
இந்துவேதமும், இந்துமதமும்தான் கடவுள்களாலேயே அருளப்பட்டும், கடவுள்களாலேயே செப்பனிட்டு காக்கப்பட்டும் வருகின்றன.
- கடவுள்கள் இந்த உலகம் முழுவதும் தோன்றக் கூடிய பயிரினங்களும், உயிரினங்களும் உய்வதற்காக வழங்கிய உலகப் பொது வேதமே இந்துவேதம். உலகப் பொதுமதமே இந்துமதம்.
- இந்த மண்ணுலகில் தோன்றக் கூடிய அனைத்து வகையான வேதங்களும், மதங்களும்; கடவுள்களே அருளிய இந்துவேதம், இந்துமதம் என்பனவற்றின் கூறுகளாகவோ, அல்லது அங்கங்களாகவோ அல்லது திரிபுகளாகவோதான் இருக்க முடியும்.
- கடவுள்கள் இம்மண்ணுலகில் உருவாக்கிய இந்துவேதத்தின் செயல்வடிவான இந்துமதம் எனும் கனிமலர்ச் சோலையிலே மலர்ந்த மலராகவோ, காய்த்துக் கனிந்த கனியாகவோதான் உலக அருளாளர்கள் இருக்க வேண்டும்.
- இந்து வேத மதமான இந்துமதமெனும் ஆலமரத்தின் இலையாகவோ, கிளையாகவோ, விழுதாகவோ, மலராகவோ, கனியாகவோ, வித்தாகவோதான் வேதங்களும், வேதமதங்களும் தோன்ற முடியும்.
- தமிழகமே அருட்பயிரின நாற்றங்காலாக, விதைப்பண்ணையாக, நாற்றுப் பண்ணையாக என்றென்றும் விளங்குகிறது, விளங்க முடியும்.
- அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களின் தாய்மொழியும், அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியுமான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியே பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்குக்கும் உரியது.
- அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களுடைய நேரடி வாரிசுகளான தமிழர்களே, அருளுலகின் மூலவர்கள், காவலர்கள், வாரிசுகள், நாயகங்கள், வித்துக்கள், சொத்துக்கள் ஆவார்கள்.
- அருளை மருந்தாகவும், விருந்தாகவும் விளைவித்துத் தரும் ஆற்றல் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிக்கும், செந்தமிழர்களுக்கும், செந்தமிழகத்துக்குமே உண்டு! உண்டு!! உண்டு!!!
- இம்மண்ணுலகில் தொன்மையான கடவுள்களுக்கும், அண்டபேரண்டத்தவர்களுக்கும் தெரிந்த ஒரே ஒரு மொழி, அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியேயாகும்.
- வடகோடி இமயத்தின் முடி முதல் தென்கோடி கன்னியாகுமரிக் கடலடி வரை உள்ள அனைத்து கடவுள்களுக்கும் தெரிந்த ஒரே ஒரு மொழி அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியேயாகும்.
- இந்த உலகில் உள்ள அனைத்து வகைப்பட்ட கோயில்களிலும் உள்ள நூற்றியெட்டு வகை (108) திருப்பதிச் சக்கரங்களும், இருநூற்று நாற்பத்து மூன்று (243) வகைச் சத்திபீடச் சக்கரங்களும், ஆயிரத்தெட்டு (1008) வகைச் சீவாலயச் சக்கரங்களும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் எழுதப்பட்டவை! எழுதப்பட்டவை!! எழுதப்பட்டவை!!!
- அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட முன்னூற்றி தொண்ணூற்றாறு (396) இந்துவேத நூல்களும், முப்பத்தாறு (36) இந்துமத நூல்களும் உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டையும், உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தையும் உருவாக்கித் தரமுடியும், தரமுடியும், தரமுடியும்.
- தமிழ்மொழியின் தாழ்ச்சியே அருளுலகத் தாழ்ச்சி
- தமிழரின் வீழ்ச்சியே அருளுலகின் வீழ்ச்சி
- அண்டபேரண்ட இயக்க விதிகளின்படி ஒரு மொழிக்குரிய கடவுள்கள் அம்மொழியினருக்கு மட்டுமே உதவுவார்கள்.
- அண்டபேரண்ட இயக்க விதிகளின் படி ஓர் இனத்துக்குரிய கடவுள்கள் அந்த இனத்தவர்களுக்கு மட்டுமே உதவுவார்கள்.
- அண்டபேரண்ட இயக்க விதிகளின்படி ஒரு நாட்டுக்குரிய கடவுள்கள் அந்நாட்டவர்களுக்கு மட்டுமே உதவுவார்கள்.
- அண்டபேரண்ட இயக்க விதிகளின் படி திருக்கல் எனும் கடவுள்களுக்கு மட்டுமே அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி நன்றாகத் தெரியும். மற்றபடி இம்மண்ணுலகின் பல பாகங்களில் தோன்றக் கூடிய தருக்கல், கருக்கல், குருக்கல் எனும் மூன்று வகைக் கடவுள்களுக்கும் அவரவர்கள் தோன்றக் கூடிய வட்டார மொழிகளே தெரியும்! தெரியும்!! தெரியும்!!!
- கடவுள் என்ற ஒருவர் இல்லை, கடவுள்கள் என்று கோடிக்கணக்கில் உண்டு.
- கடவுள்களுக்கு வாழ்வியல் விருப்பு வெறுப்புக்கள் உண்டு, தனிப்பட்ட சொந்த நெறிமுறைகளும், வாழ்வியல்களும் உண்டு.
- மனிதர்களைச் சந்திக்க வராத கடவுள்களோ அல்லது மனிதர்களால் சந்திக்க முடியாத கடவுள்களோ இல்லை! இல்லை!! இல்லை!!! இல்லவே இல்லை!!!!…. இருக்க முடியாது! இருக்க முடியாது!! இருக்கமுடியாது!!! இருக்கவே முடியாது!!!! என்ற மிகத் தெளிவான முடிவான கருத்தைக் கூறுவது இந்துவேதம். இக் கருத்து விளக்கச் செயல்வடிவம்தான் இந்துமதம். இந்த இந்துவேதத்திற்கும், இந்துமதத்திற்கும் விழியாக! வழியாக! வழிகாட்டியாக! வழித்துணையாக! வழிப்பயனாக இருப்பவர்கள்தான் பதினெண்சித்தர் பீடாதிபதிகள், பதினெண்சித்தர்கள், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள்.
- பதினெண்சித்தர்கள் கற்கோயில்களையும், சொற்கோயில்களையும் அருளுலகின் இரு கண்களாக அருளியிருக்கிறார்கள். எனவே, கண்ணிருந்தும் குருடராகி விடாதீர்கள்!
- பதினெண்சித்தர்கள் இந்துவேதத்திலும், இந்துமதத்திலும் வகுத்தளித்துள்ள அருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு, உருவ அருவ வழிபாடு, உருவ வழிபாடு எனும் நான்கு வகைப்பட்ட வழிபாடுகள்தான் அருளுலகின் முழுமையான பேருண்மை நிலை. எனவே, அவரவர் விருப்பம் போல், இந்த நான்கு வகை வழிபாடுகளில் எந்த ஒரு வழிபாட்டு முறையையோ, அல்லது எத்தனை வழிபாட்டு முறைகளையோ ஏற்றுப் போற்றிப் பயன்படுத்தி உய்வு பெறுவீர்! உய்வு பெறுவீர்!! உய்வு பெறுவீர்!!! மானுடரே.
- பதினெண்சித்தர்கள் ‘எச்செயலையும் செய்யாது நீள்தவத்தில் ஆழ்ந்திடும் திருவழிப் பூசைமுறை’, ‘உலகில் கிடைக்கக் கூடிய பயிரினங்களையும் சமைக்காமலும் சமைத்தும் படையலிட்டுப் பூசைசெய்யும் தருவழிப் பூசைமுறை’, ‘உலகில் கிடைக்கக் கூடிய உண்ணுவதற்குரிய உயிரினங்களையும் சமைக்காமலும், சமைத்தும் படையலிட்டுப் பூசை செய்யும் கருவழிப் பூசைமுறை’, ‘குருவே எல்லாம் என்று குருவுக்குள் தன்னையும், தனக்குள் குருவையும் உணர்ந்து குருவுக்கு அணுக்கத் தொண்டு புரிவதையே பூசையாகச் செய்யும் குருவழிப் பூசைமுறை’ என்ற நான்கு வகைப்பட்ட பூசைமுறைகளை வழங்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்து அவரவர் விருப்பு, வெறுப்பு, வசதி வாய்ப்புக்களுக்கு ஏற்ப பூசைசெய்து உய்வு பெறுவீராகுக!
- பதினெண்சித்தர்கள் அருளியுள்ள இந்துவேதமும், இந்துமதமும் அச்சுறுத்தியோ, இச்சகம் பேசியோ, வேதத்தையோ, மதத்தையோ பரப்பாதே! பரப்பாதே!! பரப்பாதே!!! என்று மிகத் தெளிவாக விளக்குகின்றன.
- பதினெண்சித்தர்களின் இந்துவேதமும், இந்துமதமும் மிகத் தெளிவாக ஒவ்வொரு மனிதனும் தான் பிறக்கின்ற நாட்டுக்குரிய மொழியையும், மதத்தையும் இரு விழிகளாகக் கொண்டு வாழ்ந்தால் போதும், போதும், போதும் என்று விளக்குகின்றன.
- பதினெண்சித்தர்கள் படைத்துள்ள கணக்கற்ற பலவகையான கண்கவர் கோயில்களும், வெவ்வேறான வடிவமைப்புடைய கடவுள்களின் திருவுருவங்களும், திருப்பெயர்களும், வாழ்வியல் நிகழ்ச்சி விளக்க வரலாறுகளும் இருக்கின்ற காலத்திலேயே கடவுளைக் காணமுடியாது, கடவுள் எங்கோ இருக்கிறார் என்ற கருத்துக்கள் தோன்றுவது ஏன்? தோற்றுவித்தவர் யார்? தொடர்ந்து பரப்புவது எதற்காக? என்ற வினாக்களின் விடையே இந்துவேதமும், இந்துமதமும் ஆகும்.
- பதினெண்சித்தர்களின் இந்துவேதமும் இந்துமதமும்தான் மனிதர்களில் (1) நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட அருளாளர்கள், (2) நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட அருலாளிகள், (3) நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட அருளாடு நாயகங்கள், (4) நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட மருளாளர்கள், (5) நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட மருளாளிகள், (6) நாற்பத்தெட்டு (48) வகைப்பட்ட மருளாடு நாயகங்கள் என்று ஆறுவகைப்பட்ட அருளாளர்கள் காலங்கள் தோறும் தோன்றும்படி செய்திருக்கின்றன, செய்து வருகின்றன, செய்துவரும்.
- பதினெண்சித்தர்களின் இந்துவேதமும், இந்துமதமும்தான் இந்த மண்ணுலகில் உள்ள பயிரினங்களின் வாழ்வும், உயிரினங்களின் வாழ்வும் இந்த மண்ணுலகோடு தொடர்புடைய நாள்களாலும், கோள்களாலும், மீன்களாலும், இராசிகளாலும் இயக்கப்படுகின்றன, வளர்க்கப் படுகின்றன, காக்கப் படுகின்றன; முடிவும் விடிவும் அளிக்கப் படுகின்றன என்ற பேருண்மையை விளக்குகின்றன.
- பதினெண்சித்தர்களின் இந்துவேதமும், இந்துமதமும்தான் முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு எனும் மூன்றையும் விளக்கி உரைத்து மானுட வாழ்விற்குப் பேருதவி புரிகின்றன.
- பதினெண்சித்தர்களின் இந்துவேதமும், இந்துமதமும்தான் மனித வாழ்வில் ஏற்படக் கூடிய கரைகுறைகள், அழிவு இழிவுகள், சிதைவு சீரழிவுகள், சிறுமை வறுமைகள், பழிபாவங்கள், நலிவு மெலிவுகள், அடக்க முடக்கங்கள், தேக்க வீக்கங்கள், ஒடுக்க நடுக்கங்கள், நோய்நொடிகள் முதலிய அனைத்திற்கும் (1) காற்று, (2) கருப்பு (3) பேய் (4) பிசாசு (5) பில்லி (6) சூனியம் (7) ஏவல் (8) செய்வினை (9) வைப்பு (10) கழிப்பு (11) மருந்து (12) கண்ணேறு எனும் பன்னிரண்டு வகை தாக்குதல்களின் காரணம் என்று மிகத் தெளிவாகக் காரணம் காட்டியும்; அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிகளைக் கூறியும் இவ்வுலகின் தூய்மையான, மெய்யான, வாய்மையான வேதமாகவும் மதமாகவும் விளங்குகின்றன.
- பதினெண்சித்தர்களின் இந்துவேதமும், இந்துமதமும்தான் காலத்தின் தேவைக்கேற்ப பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றி குருகுலம், திருகுலம், தருகுலம், கருகுலம் ஆகிய நான்கினையும் முறைப்படித் தோற்றுவித்து (1) மடாதிபதி, (2) பீடாதிபதி, (3) ஆதீனம், (4) தம்பிரான், (5) பண்டாரம், (7) பண்டார சந்நதி, (8) பண்டார சந்நிதி, (9) அரியவாள், (10) கூரியவாள், (11) சீரியவாள், (12) பெரியவாள், (13) நேரியவாள், (14) வீரியவாள், (15) ஏமகோடி பீடம், (16) காமகோடி பீடம் (17) சோமகோடிப் பீடம், (18) வாமகோடி பீடம், … என்று 48 வகைப்பட்ட அருட்பட்டத்தவர்களைத் தோற்றுவித்து அருளுலகப் பொருளுலக இருளகற்றும் செயல்திட்டத்தை அருளியுள்ளன, அருளியுள்ளன, அருளியுள்ளன.
- பதினெண்சித்தர்களின் இந்துவேதமும், இந்துமதமும் மிகத் தெளிவாக, விளக்கமாக நேரடியாக கடவுள்களில் உள்ள ஆண்கள், பெண்கள், அலியினர் என்கின்ற மூன்று வகையினருமே மெய்யான பத்தியாளர்களுக்கு தாயாக, தந்தையாக, அண்ணாவாக, தம்பியாக, அக்காவாக, காதலனாக, காதலியாக, நண்பனாக, தோழனாக, தோழியாக, தொண்டனாக, சேவகனாக, காவலனாக, எடுபிடிகளாக, … நேரில் தோன்றி உற்ற துணையாக இருந்து உதவி செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்று உறுதிமொழி கூறுகிறது, உறுதிமொழி கூறுகிறது, உறுதிமொழி கூறுகிறது.
- பதினெண்சித்தர்களின் இந்து வேதத்திற்கும், இந்து மதத்திற்கும் தலைவராக, ஞானத்தந்தையாக, குவலய குருபீடமாக, தலைமை ஆச்சாரியாராக, அருள்வழங்கு அருட்கொடை வள்லலாக, கருவறை மூலவர்களின் அம்மையப்பராக, பரப்பிறம்மமாக, நான்குயுக நாயகமாக, தத்துவ நாயகமாக தோன்றக் கூடிய பதினெண்சித்தர் பீடாதிபதி, கருகுல ஆதீனம், கருமூலப் பண்டாரம், ஆதி அனாதி கடந்த தம்பிரான் சாமி, அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் மட்டுமே, “வாருங்கள் மானுடரே! உங்களைக் கடவுளாக்குகிறோம்”, “வாருங்கள் மானுடரே! உங்களுடைய பழம்பிறப்புக்களையும், மறுபிறப்புக்களையும் உணர்த்துகிறோம்!”, “வாருங்கள் மானுடரே! பிறப்புக்கும், இறப்புக்கும், பொருள் அறிய வைக்கிறோம்!”, “வாருங்கள் மானுடரே! கடவுளர் உலகை, ஞானக்காட்சியில் காட்டுகிறோம்”, “வாருங்கள் மானுடரே! சித்துக்கள் அனைத்தையும் தனித்தனி கடந்த தத்துவாதீதப் பெருநிலை உய்விக்கச் செய்வோம்”, “வாருங்கள் மானுடரே! ஆவி ஆன்மா, ஆருயிர் கலந்த சீவநிலையைத் துய்த்து உய்வடையச் செய்வோம்”… என்று அறிவிப்புக்களை வழங்கி அருளை அநுபவப் பொருளாக வழங்கவல்ல அருளாளர்களை உருவாக்கி அருட்பெருஞ்சோதி காத்திட வழிவகுத்திருக்கிறார்.
விரிவஞ்சி இந்த நாற்பத்தெட்டு (48) கருத்துக்களோடு ஈண்டு இப்பட்டியலை நிறைவு செய்கிறோம்.
அருளுபவர்:- அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார், பதினெண்சித்தர் மடம், பீடம், கருகுலம்
வெளியிடுவது:
இந்து மறுமலர்ச்சி இயக்கம்
இந்து முன்னேற்றக் கழகம்
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்.