Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • இந்துமத வரலாற்றுச் சுருக்கம்
  • இந்துமத வரலாற்றுச் சுருக்கம்

    இந்துமத வரலாற்றுச் சுருக்கம்

    1. இந்து:- உண்மை, ஒண்மை, நன்மை, அன்பு, கனிவு, பணிவு, … என்ற 48 வகையான பொருள்களை உடைய ஒரு சொல்.

    2. இந்துமதம்:- இம்மண்ணுலக முதல் மதமான இளமுறியாக் கண்டத்தில் (The Lost Lemuria - குமரிக் கண்டம்) பதினெண்சித்தர்களால் அனாதிக் காலத்தில் 43,73,085 ஆண்டுகளுக்கு முன்னால் (1984ஆம் ஆண்டுக் கணக்கின்படி) தோற்றுவிக்கப் பட்டது.

    3. இந்துமத மொழி:- தமிழ்மொழி.

    4. இந்துமத வழிபாட்டு நிலையங்கள்:- 108 வகைத் திருப்பதிகள், 243 வகைச் சத்தி பீடங்கள், 1008 வகைச் சிவாலயங்கள்.

    5. இந்துமதக் காவலர்கள்:- காலப்போக்கில் தோன்றும் 48 பதினெண்சித்தர் பீடாதிபதிகள்.

    6. இந்துமதம் வளர்ப்பவர்:- 48 வகைச் சித்தர்கள், 48 வகை வழிபடுநிலையினர், 48 வகை அருளாளர்கள், 48 வகை அருட்பட்டத்தவர்கள், அருட்சத்தி பெற்றோர் 48 வகையினர் (பூசாறி, ஆசாறி, ஆச்சாரி, தேவகுமாரர், மருளாளர், …)

    7. இந்துமத நூல்கள்:- நான்மறை, நான்முறை, நானெறி, நான்வேதம், பதினெண்சித்தம், நவநாதம், நாற்பத்தெட்டுப் போதம், தொண்ணூற்றாறு ஓதம், அத்திற, சாத்திற, சூத்திற, தோத்திற, நேத்திற, நேம நியம நிடத நிட்டைகள், அருள் ஆரண, ஆகம, மீமாம்சைகள், … என்ற 48 வகைகள்.

    8. இந்துமதப் பயன்:- தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு என்று நான்கையும் வரையறைப் படுத்தி வடிவப்படுத்தி என்றென்றும் இவற்றில் உண்மை, நேர்மை, நன்மை, அன்பு, அமைதி, அடக்கம், மென்மை, சமாதானம், விட்டுக் கொடுத்தல், கூடி வாழ்தல், பிறருக்கு உதவுதல், … முதலிய 48 வகையான பண்புகள் செழிக்கும் படிச் செய்வது.

    உலக மக்கள் அனைவரும் இந்துக்களே!

    அனைத்து மதங்களும் இந்து மதத்தின் அங்கங்களே.
    தமிழ்நாடே இந்துமத வீடு.
    இந்துமத அறிவே இந்துமத ஒற்றுமை.
    இந்துமதப் பயிற்சியே இந்துமத ஆட்சி.

    குருதேவர் வலைத்தளத்தை முழுமையாகப் படித்திடுங்கள்.


    இந்துமத விழிச்சியே இந்திய எழுச்சி.
    இந்துமத உணர்ச்சியே இந்திய ஒற்றுமை.
    இந்துமத வளர்ச்சியே இந்தியப் பண்பாட்டுச் செழுச்சி.
    இந்துசமய வளர்ச்சியே இந்திய சமுதாய மறுமலர்ச்சி.
    தமிழினத் தத்துவமே இந்துமதம்.
    தமிழின விழிச்சியும் செழுச்சியும் இந்துமதச் செழுச்சி.
    தமிழில்தான் இந்துமத உய்வும் உயர்வும் உள்ளது.
    தமிழுணர்வே இந்துமதப் புத்துணர்வு.
    தமிழரின் ஒற்றுமையே இந்துமத மறுமலர்ச்சி.
    தமிழரின் ஆட்சியே இந்துமத மீட்சி.
    தமிழின உரிமையே இந்துமத விடுதலை.
    தமிழின மீட்சியே இந்துமத ஆட்சி.
    தமிழகமே இந்துமதக் கருவறை.
    தமிழே இந்துமத உயிர்மூச்சு.
    தமிழ்ப் பண்பாடே இந்துமத இயக்கச் சத்தி.
    தமிழர்களே இந்துமத நாற்றுக்கள்.
    தமிழிலக்கியங்களே இந்துமத வித்துக்கள்.
    தமிழினத் தாழ்ச்சிகளே இந்துமத வீழ்ச்சிகள்.
    தமிழின ஒற்றுமையே இந்துமத வெற்றி.


    தொடர்புடையவை: