முகப்புப் பக்கம்>
மெய்யான இந்துமதம்>
குருவாசகங்கள்
குருவாசகங்கள்
குருவாசகங்கள்
குருவாசகங்கள் - I
- ஊழ்வினை தொடரும்
- பழம் பிறப்புக்களின் நினைவு திருவருளால் இணையும் போது பிறப்பற்ற பெருநிலை கிட்டும்.
- ஆவி, ஆன்மா, உயிர் மூன்றும் குருவருளால் இணையும் போது பிறப்பற்ற பெருநிலை கிட்டும்.
- இறைவன், உயிர், பாசம்(தளை) எனும் மூன்றும் குருவருளாலேயே உணரப்பட்டு உரிமையாக்கப்படும்.
- குருவையே விழியாக, வழியாக, வழித்துணையாகக் கொள்பவரே அணுக்கருவுலகையும் வென்று உயர்ந்து நிலைபேறு பெறுவர்.
- பழம்பிறப்புணர்த்தும் உறவுகளும் உரிமைகளும் எல்லையற்ற களிப்பு நல்குமென்பதால் குருவாக்கிலோ, குருவாசகத்திலோ இவற்றை உணர்பவரே பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கிலும் நிறைவு பெறுவர்.
- கரு, குரு, திரு மூன்றும் ஒருமைப்படுபவரே ஞானத்தால் தருவாக இருப்போர்க்குத் தாயாகத், தாரமாகத், தானீன்ற மகளாகச் செயல்படுவர்.
- குருவால் இட்டும், தொட்டும், சுட்டியும் விளக்கப்பட்டவையைப் பயன்படுத்த முடியாதவர் கண்ணிருந்தும் குருடரே.
- அறியாமை மிக்கவரின் இச்சையடக்கச் சொல்லிய சூட்சுமங்களே மோட்ச நரகங்கள்.
- புரியாமை மிக்கவரின் வெறிப்போக்குகளை நெறிப்படுத்தும் சூழ்ச்சிமிகு ஆட்சிச் சொற்களே பாவபுண்ணியங்கள்.
குருவாசகங்கள் - II
- அன்றாடம் கண்ணுக்குமுன் காணும் கணக்கற்ற காரிகையர் மாதந்தோறும் மலரும் புனித மலர்களே! இவர்களைப் பூசை செய்தே பூவுலகும், மூவுலகும் வெல்லலாம்.
- அத்தனைக்கும் மூத்தவளான ஆத்தாளின் வடிவான பெண்டிரை அன்புடன் நினைத்துப் பாசமுடன் பரவிச் சேர்ந்து வாழ்ந்தாலே அருட்சொத்தனைத்தும் தேடி வந்து சேரும்.
- பூசைத்தெய்வமாக, மலராக வந்த பாவையரை விதவையரென ஒதுக்கல் மாபெரும் பழியையும் பாவத்தையும் நல்கும்.
- அங்கமெல்லாம் கையாக்கி ஆயுதமெடுத்துக் காக்கும் ஆத்தாளின் வடிவான பெண்டிரே பேரின்ப வீடு.
- திங்கள் சூடிய சிவனே மங்கைக்குப் பாதி உடல் ஈந்த பிறகு மங்கையை அடிமைப்படுத்துதல் பெரும்பாவமும், பழியுமே தரும்.
- சங்கரனாரே மங்கையை முடிமேல் தாங்கிய பின்னும் பெண்ணை அருளுலகத் தடையென மறுத்தலும், வெறுத்தலும், பழித்தலும் பேதமையன்றே¡!
- மூவரும், தேவரும், பிறரும் போற்றித் துய்த்து உய்வு பெறும் இன்ப ஊற்றான பெண்களே துன்பம் நீக்கும் மருந்து.
- கங்கைக்கரைக் கண்ணன் எங்கும், எப்போதும் நங்கையரோடிருப்பது கண்டும் மங்கையரை நீக்கும் தவவாழ்வு எற்றுக்கு?
- சித்தர்கள் கன்னிகளை ஆத்தாளாக்கிப் பூசைகள் நிகழ்த்த மறைகளும், முறைகளும், நெறிகளும், வேதங்களும், நாதங்களும், போதங்களும், ஓதங்களும் நல்கியிருப்பது கண்டும் பெண்ணைக் கோபிப்பதோ, தண்டிப்பதோ, வருத்துவதோ பெரும்பாவம் என்பது புரியாதிருப்பது மடமையினும் மடமையன்றோ!
- சித்தர்கள் ‘பெண்பழியே பெரும்பழி’ எனப் புகன்றும் பெண்களை இழிவு செய்யும் புன்மையாளர்கள் வாழ்வதே இயற்கையின் சீற்றமிகு தண்டனைகளுக்குக் காரணம்.