சித்தர் நெறி என்பது இன்றுள்ள இந்துமதமாகத்தான் கருதப்பட வேண்டியிருக்கிறது. எனவே, இன்றுள்ள இந்துமதத்தில் மேற்படி வெறிகள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பதை அறிந்து தெரிய வேண்டும். அதன்பிறகே இவையெல்லாம் இன்றுள்ள போலியான ஹிந்துமதத்திற்குரியவையா? (வட ஆரியரின் வேதமதமான சனாதன தர்மம், வர்ணாசிரம தர்மம், மனு தர்மம், … எனப்படும் பிற மண்ணுக்குரிய அன்னிய மதமே இந்தப் போலியான ஹிந்துமதம். இதனுடைய வரலாறும், வாழ்வியலும், சமசுக்கிருத மொழியில்தான் இருக்கின்றன) அல்லது இந்த மண்ணுலகில் 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால் மணீசர்களுக்காக (மண் + ஈசர் => மணீசர்; மண்ணுலகின் உயிரினங்களுக்குத் தலைவரான மணீசர்) தோற்றுவிக்கப்பட்ட சித்தர்நெறியெனும் மெய்யான இந்துமதத்துக்கு உரியவையா? என்ற பேருண்மையினை முறையாகவும் நிறையாகவும் விளக்கி யுரைத்து நிலைநாட்ட வேண்டும்.
இன்றுள்ள இந்துக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்களுக்கு மெய்யான இந்துமதம் என்ற ஒன்று இருப்பது தெரியாது! தெரியாது! தெரியாது! எனவே, இன்றைக்கு நாட்டு நடப்பில் உள்ள சாதி, இன, மொழி வெறிகள் மெய்யான இந்துமதமான சித்தர் நெறிக்குரியவை அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல! இந்தக் கருத்தை நம்மவர்கள் நன்கு புரிந்து கொண்டால்தான் பிறாமணர்களாலும், சமசுக்கிருதத்தாலும் மெய்யான இந்துமதம் கெடுக்கப்பட்டே போலியான ஹிந்துமதம் உருவாக்கப்பட்டது அல்லது போற்றிப் பேணி வளர்க்கப் பட்டது என்ற பேருண்மை தெளிவாகிடும்.
சாதி வேற்றுமைகளும், உயர்வு தாழ்வுகளும், தீண்டாமைக் கொடுமைகளும், சாதிகளனைத்தும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு காக்கப்பட்டேயாக வேண்டும் என்ற கருத்தும் இன்றுள்ள போலியான ஹிந்துமதத்தின் தலைவர்களாக உள்ள பிறாமண ஆச்சாரியார்களும், மடாதிபதிகளும், பீடாதிபதிகளும், சன்னிதானங்களும் மேற்படி சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளைத் தூண்டுகிறவர்களாகவும், போற்றிப் பேணி வளர்ப்பவர்களாகவுமே உள்ளார்கள். இவர்களுடைய இந்த வெறிகளை நியாயப் படுத்துவனவாகவே சமசுக்கிருத மொழியில் உள்ள அனைத்து வகையான இலக்கியங்களும் இருக்கின்றன. அதாவது, வேத இலக்கியங்கள், பிறாமண இலக்கியங்கள், சனாதன தர்ம இலக்கியங்கள், … முதலிய அனைத்துமே மேலே குறிப்பிட்ட சாதி, இன, மொழி வெறிகளை, ஏற்றத்தாழ்வுகளை, பிரிவினைகளை, தீண்டாமைகளை நியாயப்படுத்தி வலியுறுத்தி வளர்ப்பனவாகத்தான் இருக்கின்றன.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை; உள்ளங்கை நெல்லிக்கனிக்கு ஆராய்ச்சி தேவையில்லை; வெட்டவெளியில் இருக்கின்ற குன்றினுக்குப் பாதை தேடத் தேவையில்லை என்பதுபோல்; சாதி மத இன மொழி வேற்றுமைகளுக்கு இன்றுள்ள பிறாமணர்கள்தான் காரணம்; இந்தப் பிறாமணர்கள் தங்களுடைய தாய்மொழியாகவும், பூசைமொழியாகவும் கூறுகின்ற சமசுக்கிருத மொழியும் அதன் இலக்கியங்களும்தான் மேற்படி வெறிகளை யெல்லாம் உழவனாகவும், வித்தாகவும், வேலியாகவும் இருந்து வளர்க்கின்றன. எனவேதான், இந்தப் பிறாமணர்களைத் திருத்துவதற்காக போலியான ஹிந்துமதத்தையும், அதனுடைய பிறாமண ஆச்சாரியார்களையும், சன்னிதானங்களையும், பீடாதிபதிகளையும், மடாதிபதிகளையும் கண்டிப்பதுடன் சமசுகிருத மொழியையும், அதன் இலக்கியங்களையும் மறுத்து வெறுத்தொதுக்கவும் முற்படுகிறது மெய்யான இந்துமத மறுமலர்ச்சிக்காகவுள்ள இ.ம.இ.யும் அதன் கீழுள்ள பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களும். இப் பேருண்மையினைப் பொறுமையோடும், பொறுப்போடும் நிதானத்தோடும் புரிந்தும் புரியவைத்தும் செயல்பட வேண்டும் நம்மவர்கள் அல்லது மெய்யான இந்துக்கள் அல்லது மெய்யான இந்துமத மூலவர்களாகவும் காவலர்களாகவும் உள்ள தமிழர்கள்.
மெய்யான இந்துமதம்தான் இன்றுள்ள அனைத்து வகையான மதங்களுக்கும் மூலமாகவும் தாயாகவும் இருக்கின்றது. அதாவது, சித்தர் நெறியெனும் மெய்யான இந்துமதம் தான் இம்மண்ணுலகில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மதம். எனவே, இதில் மாற்று மதங்களின் மீது பொறாமையோ, போட்டியோ, வெறுப்போ, வெறியோ, … பிறந்திருக்கவே இயலாது! இயலாது! இயலாது! இயலவே இயலாது! மேலும் மனித இன வகைகளும், மொழி வகைகளும், சாதி வகைகளும் தோன்றியிராத ஓர் ஆரம்பக் காலத்தில் பிறந்ததுதான் இந்த மெய்யான இந்துமதம் என்பதால்; இதில் இனவெறியோ, மொழிவெறியோ, சாதிவெறியோ பிறந்திருக்கவே முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது!
இந்துமதத்தைத் தோற்றுவித்த பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் விண்வெளியிலிருந்து வந்த 48 வகை வழிபடு நிலையினர்களும், இவர்களைச் சார்ந்தவர்களும் இம்மண்ணுலகில் தோன்றிய அனைத்து வகையான மனித இனங்களோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்தே அருளுலக வாரிசுகளை வாழையடி வாழையாகத் தோற்றுவித்திருக்கிறார்கள். எனவே, மெய்யான இந்துமதத்தின் காவலர்களுக்குச் சாதி மத மொழி இன வேறுபாடுகள் கிடையவே கிடையாது! கிடையாது! கிடையாது!
பதினெண்சித்தர் பீடாதிபதிகளும், அவர்களைச் சேர்ந்தவர்களும் தொழிலின் அடிப்படையில் அல்லது சித்திநிலையின் அடிப்படையில் தங்களை பிள்ளை, குருக்கள், பண்டாரம், ஓதுவார், தேசிகர், பூசாறி, பட்டர், தீட்சதர், அந்தணர், வேதியர், நாயக்கர், தேவர், மறவர், கள்ளர், அகம்படியர், விழுப்பறையர், அறையர், ஆசாறி, ஆச்சாரி, … என்று பல பெயர்களால் குறித்துக் கொள்ளுகிறார்கள். எனவே, இவைகள் எல்லாம் சாதிப்பெயர்கள் அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
சாது + ஆதி => சாதி
சாதனை புரிந்தவர்களே சாதுக்கள்.
ஆகவே சாதுக்கள் எனப்படும் குறிப்பிட்ட சான்றோர்களின் வழிவந்தவர்களே தங்களைக் குறிக்கும் சொற்களாக உருவாக்கிக் கொண்டவைதான் இன்றுள்ள சாதிப்பெயர்கள். இதன்படிப் பார்த்தால் சாதிகளுக்கு இடையில் உயர்வு தாழ்வோ, ஏற்றத் தாழ்வு வெறியோ, தீண்டாமைக் கொடுமையோ உருவாவதற்கு இடமே இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை! பிறமண்ணினரான பிறாமணர்கள் இந்தச் சாதியெனும் பொருளாழமிக்க அழகிய தமிழ்ச் சொல்லை ஜாதி என்ற தங்களின் சமசுக்கிருதச் சொல்லால் மூடிமறைத்ததால்தான் அனைத்து வகையான வெறிகளும் பிறந்தன. எனவே, மெய்யான இந்துமதத்துக்குச் சாதி, மத, இன, மொழி, வெறி இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை!