Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • தமிழ்மொழி>
  • குருவாக்கியங்கள்
  • குருவாக்கியங்கள்

    குருவாக்கியங்கள்

    குருவாக்கியங்கள்

    “… … குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்களில் பல்வேறு மொழியினர்களும், பல்வேறு இனத்தவர்களும் இருந்த போதிலும் எல்லா இந்துக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சில குருவாக்கியங்களை இங்கு குறிப்பிடுகிறோம்.

    1. தமிழனின் தாழ்ச்சிநிலைகள் போக்கப் பட்டால்தான் இந்துமதத்தின் தாழ்ச்சி நிலைகள் போக்கப்பட்டிடும்.
    2. தமிழனின் வீழ்ச்சி நிலைகள் அகற்றப்பட்டிட்டால்தான் இந்துமதத்தின் வீழ்ச்சி நிலைகள் அகற்றப்பட்டிடும்.
    3. தமிழனின் இகழ்ச்சி நிலைகள் நீக்கப்பட்டிட்டால்தான் இந்துமதத்தின் இகழ்ச்சி நிலைகள் நீக்கப்பட்டிடும்.
    4. தமிழனின் அடிமைநிலைகளும், மிடிமை நிலைகளும், அழிக்கப்பட்டிட்டால்தான் இந்துமதத்தின் அடிமைநிலைகளும், மிடிமைநிலைகளும் அழிக்கப்பட்டிடும்.
    5. தமிழனுடைய தாழ்வு மனப்பான்மை ஒழிக்கப்பட்டிட்டால்தான் இந்துமதத்தின் தாழ்வுநிலைகள் ஒழிக்கப்பட்டிடும்.
    6. தமிழன் உரிமை பெற்றிட்டால்தான் இந்துமதம் உரிமை பெறும்.
    7. தமிழன் பெருமை பெற்றிட்டால்தான் இந்துமதம் பெருமை பெறும்.
    8. தமிழன் வளம் பெற்றிட்டால்தான் இந்துமதம் வளம் பெறும்.
    9. தமிழன் வலிமை பெற்றிட்டால்தான் இந்துமதம் வலிமை பெறும்.
    10. தமிழன் பொலிவு பெற்றிட்டால்தான் இந்துமதம் பொலிவு பெறும்.
    11. தமிழன் ஆட்சி பெற்றிட்டால்தான் இந்துமதம் ஆட்சி பெறும்.
    12. தமிழன் மாட்சி பெற்றிட்டால்தான் இந்துமதம் மாட்சி பெறும்.
    13. தமிழனின் விழிச்சியே இந்துமத விழிச்சி.
    14. தமிழனின் எழிச்சியே இந்துமத எழிச்சி.
    15. தமிழனின் முயற்சியே இந்துமத முயற்சி.
    16. தமிழனின் உயர்ச்சியே இந்துமத உயர்ச்சி.
    17. தமிழனின் மலர்ச்சியே இந்துமத மலர்ச்சி.
    18. தமிழனின் வளவளர்ச்சியே இந்துமத வளவளர்ச்சி.
    19. தமிழனின் ஆட்சியே இந்துமத ஆட்சி.
    20. தமிழனின் மாட்சியே இந்துமத மாட்சி.
    21. தமிழ்மொழியின் எழுத்துக்களே இந்துவேதத்தின் உயிரோட்டங்கள்.
    22. தமிழ்மொழியின் எழுத்து வகைகளே இந்துவேதக் கடவுள்களின் வகைகள்.
    23. தமிழ்மொழியின் சொற்களே இந்துவேதத்தின் பூசைமொழிகள்.
    24. தமிழ்மொழியின் சொற்றொடர்களே இந்துவேத விளக்கங்கள்.
    25. தமிழில் பேசுவதே இந்துவேதத்தை ஓதுவதாகும்.
    26. தமிழின் வளவாழ்வே இந்துவேதத்தின் வளவாழ்வு.
    27. தமிழின் உரிமை வாழ்வே இந்துவேதத்தின் உரிமை வாழ்வு.
    28. தமிழின் விழிச்சியே இந்துவேதத்தின் விழிச்சி.
    29. தமிழின் எழிச்சியே இந்துவேதத்தின் எழிச்சி.
    30. தமிழின் வளர்ச்சியே இந்துவேதத்தின் வளர்ச்சி.
    31. தமிழின் மறுமலர்ச்சியே இந்துவேதத்தின் மறுமலர்ச்சி.
    32. தமிழின் உயர்ச்சியே இந்துவேதத்தின் உயர்ச்சி.
    33. தமிழின் பயிற்சியே இந்துவேதத்தின் பயிற்சி.
    34. தமிழின் செழிச்சியே இந்துவேதத்தின் செழிச்சி.
    35. தமிழின் ஆட்சியே இந்துவேதத்தின் ஆட்சி.
    36. தமிழின் வாழ்வே இந்துவேத வாழ்வு.
    37. தமிழின் வரலாறே இந்துவேத வரலாறு.
    38. தமிழ்மொழிச் செல்வங்களே இந்துவேதச் செல்வங்கள்.
    39. தமிழே இந்துவேத வழி.
    40. தமிழே இந்துவேத வழிகாட்டி.
    41. தமிழே இந்துவேத வழித்துணை.
    42. தமிழே இந்துவேத வழிப்பயன் … … முதலிய குருவாக்கியங்களாவது தமிழ்மொழிக்கும் இந்துவேதத்துக்குமுள்ள இணைப்பையும், பிணைப்பையும் தமிழர்களுக்காவது உணர்த்தட்டும், உணர்த்தட்டும், உணர்த்தட்டும் என்ற அறிவிப்பை வழங்கியே இந்துமதம் எப்படியாவது என்றைக்காவது ஹிந்துமதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் படுவதற்குரிய பணிகளைத் தொடருகிறோம் இந்துமதத் தந்தையாகிய யாம்!!!…”
    பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

    வழங்குவது:-
    இந்துவேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண்சித்தர் மடத்தின் மடாதிபதி, இந்துமதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண்சித்தர் பீடத்தின் பீடாதிபதி, இந்துமதத்தின் முழுமுதற் தலைமை ஆச்சாரியக் குருபீடமான ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இந்துவேத நாயகம், இந்துவேதபீடம்.


    தொடர்புடையவை: