ஆரியர்கள் கி.மு.2000இல் இந்தியாவுக்குள் நுழைந்து ஓராயிரமாண்டுகள் ஆகியும் கூட இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தமிழ் மொழிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்தத் தமிழ் மொழியோடு பல்லாயிரமாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து பிறந்து வளர்ந்து தனித் தன்மை பெற்றுவிட்ட சில உலக மொழிகள் மீண்டும் வந்து கலப்பு செய்தன. அதனால்தான், இந்தியா முழுதும் பல புதிய கூட்டு மொழிகள் பிறந்தன. அவற்றினடிப்படையில் பல மொழி வழி இனங்கள் (different races formed on linguistical basis) தோன்றின.
இப்படித்தான் இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் பல மொழிகளைப் பேசும் பல இனத்தவர்களாகக் காலப் போக்கில் பிரிந்தார்கள். எனவே, இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளும் தமிழ் மொழியின் குழந்தைகளே என்பதையும், இந்தியாவில் உள்ள எல்லா இனத்தவர்களும் தமிழர்களே என்பதையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டே நமது குருதேவர் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற கருத்தை விளக்கும் வண்ணம் நமது இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை இந்திய மக்கள் அனைவர்க்கும் உரியதாக வளர்த்து வருகிறார்.
அதாவது, காலப் போக்கில் தமிழர்கள் பல மொழிகளுக்கு உரியவர்களாகிப் பல இனத்தவர்களாகப் பிரிந்திட்ட போதிலும்; அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் கடைப்பிடித்த சித்தர் நெறி எனும் இந்து மதத்தையே அகப் பண்பாடாகவும் (culture), புற நாகரீகமாகவும் (Style, Fashion, Civilization) இன்று வரை கையாண்டு வருகிறார்கள்.
எனவேதான் மீண்டும் இந்தியாவிலுள்ள அனைவரையும் ஒரே குடும்பமாக ஒன்று திரட்டி, ஒற்றுமைப்படுத்தி சமுதாய விழிச்சியும், அரசியல் செழுச்சியும் பெற்றிடுமாறு செய்வதற்கு இந்து மதத்தையே சாதனமாக அல்லது கருவியாக கையாளப் புறப்பட்டிருக்கிறார் நமது குருதேவர்.
இதைத்தான் மதத்தில் புரட்சியல்ல நடக்கப் போவது; “மதவழிப் புரட்சியே” (In India Revolution in Religion is not necessary; only revolution through religion is necessary). இந்தியா முழுவதையும் இப் பேருண்மையினைப் புரியும்படிச் செய்ய வேண்டும்.
நமது குருதேவர் தனது அநுபவங்களை ஒன்று திரட்டி இன்றைய மக்களின் எல்லா நிலைகளையும் உணர்ந்து அதற்கேற்பவே தமது செயல் திட்டங்களை வகுத்துள்ளார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் துணிவும், பணிவும், பொதுநல நாட்டமும், கட்டுப்பாட்டுடன் பிறரோடு ஒருங்கிணைந்து ஒற்றுமையாகச் செயல்படும் பண்பாடுமுடைய சித்தரடியான்களையே பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும், பெருநகரங்களில் தெருக்கள் அல்லது வட்டாரங்கள் தோறும் உருவாக்க வேண்டுமென்பதுதான்.
இதனை விரைந்து செயல்படுத்துவதற்காக தனிமனிதர்கள் இல்லங்கள் தோறும் வாசலில் ஞானக் கொடிகள் ஏற்ற வேண்டும். முடிந்தால் கோயில்களிலும், பொதுவிடங்களிலும் ஞானக் கொடிகளை ஏற்ற வேண்டும். இதற்கு மேல் ஆங்காங்கே அருளாளர்கள், நாயன்மார்கள், அடியார்கள், ஆழ்வார்கள், புகழ்பெற்ற தமிழிலக்கியங்கள், சிறந்த தமிழ்ப் புலவர்கள், சமய சமுதாய அரசியல் பெரியவர்கள் முதலியவர்களின் பெயரால் சங்கம், மன்றம், கழகம், திருக்கூட்டம், வழிபாட்டுக் கூட்டம், பொதுப்பணி மன்றம்…. என்ற பெயர்களில் பல அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இவையே இன்றைக்கு உடனடியாகத் தேவைப் படுகின்ற நமது குருதேவரின் செயல்திட்டம்.
இதனைத் தலைவர், செயலர், பொருளாளர் என்ற மூவரை ஒவ்வோர் அமைப்பிலும் உண்டாக்கிக் கட்டுப்பாடும் நிறுவன நிர்வாக ஒழுங்கமைப்பும் உடைய ஒரு வலுவான சிறு கூட்டத்தை உருவாக்கி விட்டால் போதும். அதாவது நமது இயக்கச் செயல்வீரர்களாகச் சில ஆயிரம் பேர் சேர்த்து விட்டால் போதும். அவர்களை ஏட்டறிவும், பட்டறிவும் நேரடிப் பயிற்சியால் வழங்கி உண்மையான தலைவர்களாக உருவாக்கிடலாம்.
அப்படி நன்கு உருவாக்கப் பட்டவர்கள் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, அலுவலகம் அலுவலகமாக, தொழிற்சாலை தொழிற்சாலையாகச் சென்றிடுவார்கள், செயல்படுவார்கள். அதனால் உண்மையான சமய சமுதாய அரசியல் பொருளாதாரப் புரட்சிகளை அமைதி வழியில் “அண்ணல் மகாத்மா காந்தியின் அன்பு வழியில்” செயலாக்கக் கூடிய தொண்டர்கள் உருவாக்கப் படுவார்கள். இந்திய தேசத் தந்தை மகான் மகாத்மா காந்தி பசனைப் பாடல் பாடித்தான் விடுதலைப் போரில் வெற்றி பெற்றார் … … …