‘மெய்யான இந்துமதம்’, ‘பொய்யான ஹிந்துமதம்’ என்ற சொற்களை கி.மு. முதலாம் நூற்றாண்டில் செயல்பட்டிட்ட பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் பயன்படுத்திட ஆரம்பித்திட்டார்கள். இவர்தான் ‘மெய்யான இந்துமதமும், பொய்யான ஹிந்துமதமும்’; ‘பதினெண்சித்தர்களின் சித்தர்நெறி எனும் சீவநெறி ஆகிய மெய்யான இந்துமதம்’; ‘பிறமண்ணினர்களான பிறாமணரின் பொய்யான ஹிந்துமதம்’; ‘அண்டபேரண்டமாளும் மெய்யான இந்துமதம்’; ‘பிண்டத்தைக் கூட ஆளத் தெரியாத பொய்யான ஹிந்துமதம்’; … முதலிய தலைப்புக்களில் பல குறிப்புக்களையும், உரைநடை நூல்களையும், குருபாரம்பரிய வாசகங்களையும், ஆறு வகைப்பட்ட வாக்கு, ஆறு வகைப்பட்ட வாக்கியம், ஆறு வகைப்பட்ட வாசகம் முதலியவைகளையும் எழுதியுள்ளார். இவரைப் பின்பற்றித் தோன்றிய பதினெண்சித்தர் வகையைச் சேர்ந்த சித்தர்களும், 48 வகைச் சித்தர்களும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் மெய்யான இந்துமதம் பற்றியும், பொய்யான ஹிந்துமதம் பற்றியும் பல கருத்துக்களை எழுதியுள்ளார்கள்; பல செய்திகளைத் தருகிறார்கள். அவற்றுள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருக்கிறோம். இக் குறிப்புக்களைப் போல் நிறைய குறிப்புக்கள் இருக்கின்றன என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம்.
எழுதிய நாள்: 1/3/90
ஊத்தைச் சடலமடி என் கண்ணம்மா!
உப்பிருந்த பாண்டமடி என் கண்ணம்மா!
மாத்திப் பிறக்க வழியறியேனடி என் கண்ணம்மா!
மாத்திப் பிறக்கும் வழியறிந்தால் என் கண்ணம்மா!
உன்பாதம் ஓடிவந்து சேரேனோடி என் கண்ணம்மா!
பதினெண்சித்தரின் இந்துமதமடி என் கண்ணம்மா!
பிறாமணரின் ஹிந்துமதமாச்சுதடி என் கண்ணம்மா!
உண்மை உரைத்தும் உணராரேடி என் கண்ணம்மா!
உணர்ந்து இந்துமத வழியறிந்தால் என் கண்ணம்மா!
உன்பாதம் ஓடிவந்து சேர்வாரடி என் கண்ணம்மா!
பதினெண்சித்தர் இந்துமதத்திலே அருளூற்றோடுதடி என் ஞானப்பெண்ணே!
அருளூற்றால் மனிதன் கடவுளாகிறானடி; கடவுளும் மனிதனாகிறானடி என் ஞானப்பெண்ணே!
பதினெண்சித்தர் இந்துமதத்திலே எல்லாம் நடக்குதடி என் ஞானப்பெண்ணே!
நடப்பன எல்லாமே நமக்கு நன்மை யாகுதடி என் ஞானப்பெண்ணே!
வானத்தில் மயிலாடக் கண்டேனடி குதம்பாய்
மயில் குயிலாய் மாறுச்சடி குதம்பாய்
வண்டமிழில் இந்துமதம் வாழுதடி குதம்பாய்
ஹிந்துமதம் இந்துமதமாய் ஏற்கப் படுதடி குதம்பாய்
நமது சொந்தமதம் இந்துமதமென்று கும்மியடிடீ வாலைப் பெண்ணே!
இங்கு வந்தவர் மதமே ஹிந்துமதமென்று கும்மியடிடீ வாலைப் பெண்ணே!
பதினெண்சித்தர் பைந்தமிழில் தந்த மதமே
இந்துமதமென்று கும்மியடிடீ மோனப் பெண்ணே!
பிறாமணர் சமசுக்கிருதத்தில் தந்த மதமே
ஹிந்துமதமென்று கும்மியடிடீ மோனப் பெண்ணே!
பதினெண்சித்தரின் அண்டபேரண்டமாளும்
மெய்யான இந்துமதம் கண்டே நீ ஆடுபாம்பே!
பிறாமணரின் பிண்டமாள முடியாத
பொய்யான ஹிந்துமதம் கண்டே நீ சுழன்றாடு பாம்பே!
கடவுள் தெய்வம் ஆண்டவர் மாண்டவர்
கூட்டிக் காட்டும் இந்துமதக் கூத்தாடு அகப்பேயே!
காற்று கருப்பு பேய் பிசாசு
கட்டி யோட்டாத ஹிந்துமதக் கூத்தாடு அகப்பேயே!
எழுதப்பட்ட நாள்: 14/3/90 சித்தர் பாடல்கள் தொடர்ச்சி …
“சில முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக் கோனே
காசு முதலாளியாக்குதடா தாண்டவக் கோனே
இந்துமத விரோதி துரோகிகளை யெல்லாம் தாண்டவக் கோனே
ஹிந்துமதம் ஆச்சாரியாராய் பீடாதிபதியாய் ஆக்குதடா தாண்டவக் கோனே”
“இந்துமதத் தென்னையிலே தேங்காய் தேடாமலே தாண்டவக் கோனே
ஹிந்துமதத் தென்னை நிழலில் தேங்காய் தேடுதடா தாண்டவக் கோனே”
“குண்டலினிப் பாம்பைக் கொண்டைமுதல் கெண்டைவரை
அணிந்த சிவன்வழியே இந்துமதமென்று ஆடுபாம்பே
இச்சிவனையும் சீவனற்றவனாக்கிச் செறிக்கும் ஹிந்துமதம்
அன்னியன் வழியே என்பது விளக்கி யாடு பாம்பே”
“வானத்தில் மயிலாடக் கண்டேனடி அக்கச்சி
வையத்தில் ஹிந்துமதம் நம்பப் படுதடி அக்கச்சி
காணும்போதே மயில் குயிலாச்சுதடி அக்கச்சி
கருத்திருக்கும் போதே ஹிந்துமதம் இந்துமதமாய் ஏற்கப்படுதடி அக்கச்சி”
“நட்ட கல்லும் நாதனாகிப் பேசுமடா இந்துமதத்திலே
நட்ட கல்லும் நாதமுற்றுப் பேசுமோடா ஹிந்துமதத்திலே
சுற்றிவந்து சொல்லப் பதினெண்வண்ணப் பூசாமொழி உண்டடா இந்துமதத்திலே
சுற்றிவந்து சொல்ல மந்திரம் ஏதடா ஹிந்துமதத்திலே”
“வெட்டவெளியே சதமென்று இருப்பாருக்குப் பட்டயங்கள் ஏதுக்கடி குதம்பாய்!
பட்டப்பகலிலே ஹிந்துமதத்தை இந்துமதமாய் நம்புபவர்க்கு
பத்திநெறி ஏதுக்கடி குதம்பாய்!”
“ஹிந்துமதத்திலே மாட்டிக்கிட்டாலும் தாண்டவக்கோனே!
இந்துமதத்திலே கருத்தை வையடா தாண்டவக்கோனே!”