வேதங்களும் - இந்து-ஹிந்து மதங்களும்
பதினெண்சித்தர்கள் இருடிகள் மட்டும் ஓதுவதற்குரிய இருடி வேதம், இருக்கு வேதம் என்ற ஒன்றை உண்டாக்கினார்கள். இதனை ஏற்கனவே குறிப்பிட்ட முனிவர்கள், இருடிகள், கருக்கள், தருக்கள், … எனப்படுபவர்கள் காடுகளில் தங்கி ஓதி அருட்பயன்களை அடைவது மரபு. (இருடி என்பது 48 வகைப்படும்). ஆனால், பிறமண்ணினரான பிறாமணர்கள் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய மெய்யான இந்துமதத்தைக் கெடுக்கவும், அதன் அருட்பயன்களைத் தடுக்கவும், திட்டமிட்டு இந்த இருடிகளுக்குரிய இருக்கு வேதத்தை தங்களின் சமசுக்கிருதத்தில் ரிக் வேதம் என்ற பெயரில் ஒரு கற்பனாவாத பயனற்ற குப்பை வாசகங்களை எழுதி வைத்துக் கொண்டு இந்துக்களைத் திசை திருப்பி அருளுலகில் நலிவும், மெலிவும், தாழ்ச்சியும், வீழ்ச்சியும் அடையச் செய்து விட்டனர்.
இதேபோலத்தான் பதினெண்சித்தர்கள் அசுர சித்திகளைப் பெறக் கூடிய வேதமாக உண்டாக்கிய அசுர வேதத்தை பிறமண்ணினரான பிறாமணர்கள் யஜுர் வேதம் என்று தங்களுடைய மொழியில் உருவாக்கிய போலி வேதத்தால் செயலிழக்கச் செய்தார்கள்.
பதினெண்சித்தர்கள் இரவில் மட்டும் அதாவது சாமத்தில் மட்டும் (சாமம் = யாமம்) கூறக் கூடிய ‘சாம வேதம்’ என்று வழங்கியதைப் பிறமண்ணினரான பிறாமணர்கள் போலியாக உண்டாக்கிய ‘ஸாம வேதம்’ என்பதன் மூலம் செயலிழக்கச் செய்தார்கள்.
பதினெண்சித்தர்கள் தாங்கள் அருளாட்சி செய்யும் அண்டபேரண்டங்கள் இயங்கும் வானவெளியில் செயல்படுவதற்குரிய வேதமாகப் படைத்த ‘அதர்வான வேதத்தை’ (வானத்தையே எல்லையாகக் கொண்டது இஃது. அதர் = எல்லை). பிறமண்ணினரான பிறாமணர்கள் தங்களின் சமசுக்கிருத மொழியில் உண்டாக்கிய போலியான ‘அதர்வண வேதம்’ என்பதன் மூலம் செயலிழக்கச் செய்தார்கள்.
பதினெண்சித்தர்கள் இந்து மதத்தின் செல்வங்களாக நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் என்ற பதினாறையும் உருவாக்கினார்கள். இவை, இந்துமதத்தின் இயக்குநர்களாக, ஆளுநர்களாக, அரசர்களாக, வழிகாட்டிகளாக, … விளங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே சாதாரணமாக, இந்து மதத்தைச் செயலாக்கக் கூடிய (48) நாற்பத்தெட்டு வகையினருக்கும் அருள்மறைகள் 48, பொருள் மறைகள் 64, அருள் முறைகள் 48, பொருள் முறைகள் 64, அருள் நெறிகள் 48, பொருள் நெறிகள் 64, அருள் வேதங்கள் 48, பொருள் வேதங்கள் 64 என்று படைத்தார்கள்.
இதேபோல், மனிதனைப் படிப்படியாகப் பக்குவப் படுத்தி கடவுள் என்ற பொதுச் சொல்லால் குறிக்கின்ற 48 வகையான வழிபடு நிலையையும் (அல்லா, அத்தா, அம்மையப்பர், ஆண்டவர், இறைவர், கடவுள், தெய்வம், பட்டவர், தேவியர், தேவதை, தேவர், அமரர், …) பெறுவதற்காக ஏட்டுக் கல்வியையும், குருவழிப் பயிற்சிக் கல்வியையும் உருவாக்கினார்கள். இவற்றிற்காக எண்ணற்ற அத்திற, சாத்திற, தோத்திற, நேத்திறங்களையும்; நேம நியம நிடத நிட்டைகளையும்; சுருதி ஆரண ஆகம மீமாம்சைகளையும்; மந்தர, மந்திர, மந்திற, மாந்தர, மாந்தரீகங்களையும்; தந்தர, தந்திர, தந்திற, தாந்தர, தாந்தரீகங்களையும், எந்திர, எந்திற, எந்தர, ஏந்தர, ஏந்தரீகங்களையும், … வகைவகையாகப் படைத்திருக்கிறார்கள் பதினெண்சித்தர்கள்.
இவையனைத்தையும் இருட்டடிப்புச் செய்து ஏமாற்றுவதற்காகவே பிறாமணர்கள் அவர்களுடைய ஹிந்து மதத்திற்குரிய பிரமனின் கதையை எழுதியிருக்கிறார்கள். கலைவாணியை உருவாக்கிய பிரம்மன் கலைகளையும், சாஸ்திரங்களையும் படைக்க விழைந்தான். அவனது நான்கு முகங்களிலிருந்து, ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள் பிறந்தன. பிறகு தனுர் வேதம், காந்தர்வ வேதம், விஸ்வகர்ம வேதம் முதலியன உதித்தன என்று கூறுகின்றனர்.
பதினெண்சித்தர்கள் உருவாக்கிய நான்கு வேதங்களின் பெயர்களிலும் நான்கு சமசுக்கிருத வேதங்களை உருவாக்கிக் கொண்ட பிறாமணர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய வேத மதத்தை; அதாவது, பொய்யான ஹிந்து மதத்தை மெய்யான இந்து மதமாகவே மாற்ற முயற்சித்தார்கள். அதற்காக பதினெண்சித்தர்கள் ஏற்படுத்திய வழிபடு நிலையினர்கள், வழிபாட்டு நிலையங்கள், பல்வேறு வகை அருளாளர்கள், பலவகைப் பட்ட அருளுலக நூல்கள், … முதலிய அனைத்தையுமே இருட்டடிப்புச் செய்யவும், குழப்பவும், கலக்கவும், பல புதிய கதைகளையும், புராண இதிகாசங்களையும், போலி நூல்களையும், போலி வரலாறுகளையும் உருவாக்கினார்கள். இதனால்தான், அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்கள்.
மேலும் இம்மண்ணுலகின் முதல் இனமாகவும், மூத்த இனமாகவும் இருக்கின்ற தமிழினம் மிக எளிதில் பிறருக்கு ஆதரவும், உதவியும், பாதுகாப்பும், மதிப்பும் வழங்கக் கூடிய பண்பு உடையது என்பதனால் பிறாமணர்கள் மிக எளிதாக இந்து சமயத்திலும், சமுதாயத்திலும் முதன்மையான தலைமையிடத்தைப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். இவற்றின் மூலம், ஆட்சியிலிருப்பவர்களை எப்போதும் தங்களுடைய ஆதரவாளர்களாகவே இருக்கும்படிச் செய்து விட்டார்கள்.
எனவேதான், பத்தாவது, பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிகள் எவ்வளவோ முயன்றும் கூட நாடு தழுவிய வெற்றிகளைப் பெற முடியவில்லை. பெற்ற வெற்றிகளைப் பொதுமக்கள் புரிந்து விரும்பி நம்பி ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இவற்றையெல்லாம் முழுமையாக எண்ணிப் பார்த்த சித்தர் கருவூறார் வழி வந்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ.இராமசாமிப் பிள்ளையவர்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவித்த இந்து மறுமலர்ச்சி இயக்கமும், அதன் கிளை அமைப்புக்களும் பொருத்தமான, திருத்தமான கருத்துப் புரட்சியை விளைவிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளன. அப்பணியில் தொடர்ச்சியாகவே நுட்ப திட்ப ஒட்பத்துடன் இந்த கருத்து விளக்கக் கட்டுரையும் அமைகிறது.