Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
  • அருணகிரிநாதர் வரலாறு
  • அருணகிரிநாதர் வரலாறு

    அருணகிரிநாதர் வரலாறு

    அருணகிரியார் வரலாற்றில் பொய்யான ஹிந்துமதத்தின் ஆபாசக் கற்பனை

    “அருணகிரியார் பெண்ணின்பத்தை அதிகமாகத் துய்த்து தொழுநோய் வந்து தற்கொலை செய்து கொள்ள முயன்று முருகப் பெருமானால் தடுத்து ஆட்கொள்ளப் பட்ட ஞானியார்” - என்று (பிறமண்ணினர்) பிறாமணரால் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான சூழ்ச்சியான, மோசடியான வரலாறாகும்.

    அதாவது, பல்லாயிரக் கணக்கான அருட்பாக்களைப் பாடிய மாபெரும் கவிஞரான அருணகிரியாரை அவமானப் படுத்துகின்ற முறையில் அல்லது இழிவுபடுத்துகின்ற முறையில் பிறாமணர்கள் மேற்படி வரலாறைக் கற்பனையாக பரப்பியிருக்கிறார்கள்.

    இம்மாபெரும் உண்மையை கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இதனைத் தமிழுலகம் உணர்ந்தும், உணர்த்தியும் செயல்பட்டால்தான் மெய்யான இந்துமதம் பிழைக்கும், தழைக்கும்.

    முதற்சங்க காலத்தில் வாழ்ந்த சிவகவி என்பவர் “சிவபெருமானைத்தான் பாடுவேன்; கோழியை பாடிய வாயால் முட்டையைப் பாடமாட்டேன், அப்பனைப் பாடிய வாயால் ஆண்டிச் சுப்பனைப் பாடமாட்டேன் …” என்று மிகப் பிடிவாதமாக சிவனைத் தவிர மற்ற கடவுள்களைப் பாட மறுத்து வாழ்ந்தார். இவரைப் போலவேதான், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அருணகிரியார் “முருகனைத்தான் பாடுவேன், வேறு யாரையும் பாட மாட்டேன்” என்று பிடிவாதமாக வாழ்ந்தார். அவருக்கு வழக்கம்போல் சிவபெருமான் பல சோதனைகளை வழங்கினார். அவற்றின் எல்லையாகத்தான் அருணகிரியார் தான் வணங்கும் முருகன் தன்னைக் காப்பாற்றுவான் என்று கூறி திருவண்ணாமலை கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சி நிகழ்ந்தது. இதுதான் உண்மை. இதுவல்லாமல் அவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுதான் கோபுர உச்சியிலிருந்து குதித்தார் என்று கூறுவது தவறு. அப்படிக் கூறுவதுதான் பொய்யான ஹிந்துமதம்.

    அருணகிரியாரை இழிவுபடுத்துவதின் நோக்கம் மெய்யான இந்துமதத்தை செயலற்றதாக ஆக்க வேண்டும் என்ற பிறாமணச் சூழ்ச்சியேயாகும். இதனை உணர்ந்து, இனிமேலாவது தமிழர்கள் அருணகிரியாரைப் பற்றி மெய்யான வரலாற்றை பரப்புவதன் மூலம்தான் மெய்யான இந்துமதத்தைக் காப்பாற்ற முடியும். அதாவது, பிறாமணர்கள் மெய்யான இந்துமதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களையும், செய்திகளையும், வரலாறுகளையும் உருவாக்கியதன் மூலம்தான் மெய்யான இந்துமதத்தின் அரிய தன்மைகளையும், பெருமைகளையும், சிறப்பான பயன்களையும், பகுத்தறிவுக்கு ஒத்த நிலைகளையும், விஞ்ஞானப் பூர்வமான தத்துவங்களையும், பாழாக்கினார்கள்! பாழாக்கினார்கள்!! பாழாக்கினார்கள்!!!

    குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் மெய்யான இந்துமதம் பதினெண்சித்தர்களின் வரலாறுகளையும், வாழ்வியல்களையும், சாதனைகளையும், மூல போதனைகளையும் அப்படியே உள்ளீடாகவும், வடிவமைப்புக்களாகவும் கொண்ட ஒன்றாகும். இந்த மெய்யான இந்துமதத்தைச் சிதைத்துச் சீரழித்தால்தான் தங்களுக்குப் புதுவாழ்வும் நிலையான வாழ்வும் இந்தியாவில் உண்டு என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்கள் பிறாமணர்கள். எனவேதான், “பிறாமண மறுப்பும், எதிர்ப்பும்தான் மெய்யான இந்துமதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யும்” என்ற கருத்தை உருவாக்கினார் சித்தர் ஏளனம்பட்டியார். ஆனால், கண்மூடித்தனமான பிறாமண வெறுப்போ, ஒழிப்போ ஏளனம்பட்டியாரின் கருத்தல்ல. அதாவது, பிறாமணர்களையும் திருத்தி மெய்யான இந்துமதத்தால் அவர்களும் நன்மையடையும்படிச் செய்ய வேண்டியதுதான் இந்துமறுமலர்ச்சி இயக்கக் கொள்கை!

    இந்துமதக் கடவுள்களைப் பற்றிய வரலாறுகளை இந்துமதத்தைத் தோற்றுவித்த பதினெண்சித்தர்களே மீண்டும் வந்தால்தான் பிறாமணர்கள் செய்துள்ள குழப்பங்களையும், கலக்கங்களையும், இருட்டடிப்புக்களையும், திருத்தல்களையும், இடைச்செருகல்களையும் அடையாளம் கண்டுபிடித்துத் திருத்த முடியும் என்ற அளவுக்குக் திறமையாகப் பிறாமணர்கள் செயல்பட்டுள்ளார்கள். எனவேதான், இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இ.ம.இ. செயல்பட்டும் பொய்யான ஹிந்துமதத்தை அழிக்க முடியவில்லை. மெய்யான இந்துமதத்தை செழிக்கச் செய்ய முடியவில்லை.

    மேற்கூறிய பொய்யான ஹிந்துமதத்தால்தான் சிவபெருமான், திருமால், பிறமண், முருகன், பிள்ளையார், வினாயகர், கணபதி, ஐயனார் (ஐயப்பன்), இராமன், கண்ணன், பிற அருளாளர்கள் … முதலியோரின் வரலாறுகளை அறிவுக்குப் பொருந்தாதவைகளாகவும், ஆபாசம் மிகுந்தவைகளாகவும் உருவாகியுள்ளன. எனவே, மெய்யான இந்துமதத்திற்காக மீண்டும் உண்மையான வரலாறுகளையும், செய்திகளையும், செயல்பாடுகளையும், தத்துவங்களையும், இலக்கியங்களையும் … எடுத்து விளக்கிக் கூறுவதை விட பொய்யான ஹிந்துமதத்தில் உள்ள தவறுகளையும், இடைச்செருகல்களையும், திருத்தல்களையும், இருட்டடிப்புகளையும் நேரடியாகக் கண்டித்துத் திருத்தும் பணியில் இறங்க வேண்டும். இதை பிறாமணர்களோ, நம்மவர்களோ தேவையற்றது என்றோ தவறானது என்றோ கருதுவதோ, எதிர்ப்பதோ தற்கொலைக்குச் சமமாகும். ஏனென்றால், பிறாமணர்கள் அல்லாதவர்கள்தான் பிறாமணர்களுக்காக வக்காலத்து வாங்குவது அதிகமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பிறாமணர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தத் தயாராக இருந்தாலும், அவர்களை திருந்த விடாமல் செய்பவர்களாகவே எண்ணற்ற பிறாமண அடிமைகளும், கூலிகளும், இந்துமதத் துரோகிகளும், எதிரிகளும் செயல்படுகிறார்கள். எனவே, பிறாமணர்களை திருத்தும் போதே பிறாமண அடிமைகளையும், கூலிகளையும், இந்துமதத் துரோகிகளையும், எதிரிகளையும் திருத்தும் பணி மேற்கொள்ளப்படல் வேண்டும். இதில் எந்தவிதமான தயக்கமோ, மயக்கமோ, குழப்பமோ, கலக்கமோ, … கூடாது! கூடாது!! கூடாது!!! கூடவே கூடாது!

    பொய்யான ஹிந்துமதத்தில்தான் முருகனுடைய பிறப்பும், ஐயப்பனின் பிறப்பும், பிள்ளையாரின் பிறப்பும் ஆபாசப்படுத்தப் பட்டிருக்கின்றன. அநாகரீகப் படுத்தப் பட்டிருக்கின்றன. அறிவுக்குப் புறம்பாக்கப் பட்டிருக்கின்றன. எனவே, மெய்யான இந்துமதத்தைப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் எழுதிவரும் ‘குருபாரம்பரியம்’ என்கின்ற மதவரலாறுகளின் மூலமும், ‘இலக்கிய பாரம்பரியம்’ என்கின்ற இலக்கிய வரலாறுகளின் மூலம், ‘அரசபாரம்பரியம்’ என்கின்ற அரசியல் வரலாறுகளின் மூலமும், எண்ணற்ற வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், … முதலியவற்றின் மூலம் வழங்கப்படும். கருத்து விளக்கச் சொற்களின் மூலமும் புதுப்பித்து எழுதுதல் வேண்டும். அப்படி மெய்யான இந்துமத வரலாறு எழுதப்பட்டு விட்டால் மதம்தான் மனிதர்களை மனிதர்களாகக் காத்திடும் என்பதும், மதமே மனிதப் பண்பாட்டிற்கு வேலி என்பதும் மிகத் தெளிவாகிடும். இதனால், நாத்திகர்களும், பகுத்தறிவுவாதிகளும், மார்க்சீய வாதிகளும் மதத்தின் தேவையையும் பயனையும் உணர்ந்திடுவார்கள், ஒப்புக் கொண்டிடுவார்கள். இவர்கள் மதத்தைக் குறை கூறுவதும், குற்றம் சாட்டுவதும், கேலி செய்வதும், எதிர்ப்பதும் இ.ம.இ.யினால்தான் முழுமையாக தடுக்கப்படும், அகற்றப்படும், மாற்றப்படும். இதனைப் புரிந்து மெய்யான இந்துமதத்தை வளர்க்க, விளக்க, ஆட்சிபெறச் செய்ய பிறாமணர்களும் திருந்தி நம்மோடு சேரட்டும்.


    தொடர்புடையவை: