"… இம்மண்ணுலகில் பதினெண்சித்தர்கள்தான் ஆரம்பக் காலம் முதல் எண்ணற்ற மொழிகள், இலக்கியங்கள், கலைகள், அறிவியல்கள், சமுதாயக் கட்டமைப்புச் சட்டதிட்டங்கள், அரசியல் நெறிமுறை மரபுகள், தனிமனித வாழ்வியல் வகைகள், … முதலியவைகளைப் படைத்துக் கொடுத்து வருகிறார்கள். இப்பேருண்மைகளை வரலாற்றுப் பூர்வமாகத் தேவையான சான்றுகளோடும், ஊன்றுகளோடும், செயல்நிலை விளக்கங்களோடும் உலகுக்கு வழங்கும் ஒரு மாபெரும் சத்தியாகவே வாழுகிறோம் யாம்…"
குருதேவர் ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் பெருமளவில் உலக மானுடர் போலவே தமது சித்தர் நிலையை, தமிழினத் தலைமை ஆச்சாரிய குருபீடநிலையை யாருக்கும் காட்டிக் கொள்ளாமலேயே வாழ்ந்தார்.
மேலும் படிக்க...
குருதேவர் நெடிய, பெரிய, அரிய பதினெண்சித்தர் பீடாதிபதியின் விந்துவழி வாரிசு; அருளுலகக் கலைகளிலும், அறிவியல்களிலும் முழுமையாகத் தேர்ந்தவர்; நூற்றுக்கணக்கான சமாதுகளில் இருந்தும் நிறைந்தும் மறைந்தும் வெளிவந்தவர்; ஒன்பது வயதின் எல்லையிலேயே உடலை விடுத்து ஓராண்டுகால இடைவெளியில் அண்டபேரண்டங்கள் அனைத்தும் சுற்றித் திரும்பியவர்…
மேலும் படிக்க...
சர்வவல்லமைகளையும், அனைத்துச் சித்திகளையும், அருளுலகப் பயிற்சிகளையும், முயற்சிகளையும், தத்துவ வாரிசுரிமைகளையும், வரலாற்றுப் பின்னணியையும் முழுமையான ஏட்டறிவையும், பட்டறிவையும் … பட்டியலிட்டுக் காட்டுகின்ற அளவிற்கு பெற்றிருக்கின்ற நமது குருதேவர் மட்டும் எந்தவித ஆடம்பரமோ, ஆரவாரமோ, விளம்பரமோ இல்லாமல் அருளுலக மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், கிளர்ச்சிமிகு எழுச்சிக்கும், செழுச்சிக்கும் வழிசெய்யக் கூடிய புரட்சி வீரர்களாகத் தம்மிடம் வருபவர்களில் தக்காரைத் தேர்ந்தெடுத்துச் சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார், சித்தர்நெறி ஆர்வலர், சித்தர்நெறி ஆதரவாளர், … முதலியவர்களை உருவாக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்கும் பணியைச் செய்து வருகிறார்.
மேலும் படிக்க...
கடந்த ஐநூறு கோடியாண்டுகளில் சாதாரண மக்களின் நிலைக்கு இறங்கி வந்து அநுபவப் பூர்வமாக அருளை அனைவருக்கும் வழங்குகின்ற முதல் சித்தர் நமது குருதேவர்தான். நாயன்மார்களும், ஆழ்வார்களும், அருணகிரியார், பட்டினத்தார், பத்திரகிரியார், தாயுமானவர், இராமலிங்கர்… போன்ற அருளாளர்களும் தாங்கள் பெற்றிட்ட பேரின்பத்தைப் பற்றித்தான் பாடினார்களே தவிர பேரின்பத்தைப் பெறுவது எப்படி? என்பதைப் பற்றி ஊசிமுனையளவு கூட வெளியிட வில்லை.
மேலும் படிக்க...
குருதேவர், இம்மண்ணுலகில் இதுகாறும் தோன்றிட்ட அனைத்து வகையான அருளாளர்களின் வாழ்வியல்களையும் சாதனைகளையும் இணைத்துப் புதுமைப்படுத்தி உலகந்தழுவிய நிலையான நன்மைகளை விளைவிக்க ‘அருட்புரட்சி’ முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க...
இப்போது ஆயிரமாயிரம் படித்த, படிக்கின்ற, படிப்பறிவே இல்லாத இளைஞர்கள் எமது கனவுகளை நனவாக்கிடத் தீரமிக்க தியாகங்களையும், வீரமிக்க செயல்களையும், துணிவுமிக்க பணிகளையும், முழுநேர முயற்சிகளால் தொண்டு புரிகிறார்கள். இவர்களுடைய கட்டுக்கடங்காத காட்டாற்றுப் போக்குடைய பேரார்வத்தாலேயே; யாம், எமது மோன ஞான நிலைகளை விடுத்துச் சில செய்திகளை எழுதாக் கிளவிகளாக வழங்கியும், நடைமுறைக்குக் கொணர்ந்தும் செயலாற்றுகிறோம்.
மேலும் படிக்க...
நான், வரலாற்று ஏடுகளைப் புரட்டுகிறவன் என்பதால்; என் காலத்துக்குள் என் இனம் பெற வேண்டிய இத்தனை விழிச்சிகளையும் எழுச்சிகளையும் செய்து முடித்துத் திட்டமிட்ட செழுச்சியை உருவாக்க முடியாது என்பதை நன்கு அறிவேன். ஆனால், அதற்காகத் தளர்ச்சியோ! தயக்கமோ! அயர்வோ! மயக்கமோ! எனக்கில்லை.
மேலும் படிக்க...
நானோ, இம்மண்ணுலகம் முழுவதும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருளூற்றுக்களை வழிபட்டு பத்தி, சத்தி, சித்தி, முத்தி பெற்றிடவும் பதினெண்சித்தர் கலைகளில் பயிற்சியும் முயற்சியும் பெற்றிடவும் 36 ஆண்டுகள் கடுமையாக அலைந்து திரிந்து பலகோடியனுபவங்கள் பெற்றவன். இம்மண்ணுலகில் அருளாட்சி அமைக்கத் தோற்றுவிக்கப்பட்டவரான யாம், … புத்தரைப் போலவோ மகாவீரரைப் போலவோ ஒரே நாளில் ஞானம் பெற்றவரல்ல.
மேலும் படிக்க...
குருதேவர் மானுடவியல் கடந்தும், உலகியல் கடந்தும் இரவுபகலாகப் பாடுபட்டுக் கொண்டே இருப்பதால்தான்; அருளுலகச் சாதனைகள் மிகுந்து, எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே அருளாட்சி அமைப்புப் பணி எண்ணற்ற வெற்றிகளைப் பெற்று வருகின்றது….
மேலும் படிக்க...
…சந்திர குலத்துக்கும் சூரிய குலத்துக்கும் விதையான, வாரிசாக இன்று வாழும் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறாராகிய யாம் உலகியலுக்கேற்பவே அஞ்சியும் கெஞ்சியும், முடங்கியும் ஒடுங்கியும், ஏங்கியும் தேங்கியும், பதுங்கியும் ஒதுங்கியும், விலகியும் விலக்கியும், மறுத்தும் வெறுத்தும், மறந்தும் துறந்தும், இன்புற்றும் துன்புற்றும், வென்றும் தோற்றும், தயங்கியும் மயங்கியும், அழுதும் சிரித்தும், பகைத்தும் நகைத்தும், … வகைவகையான வாழ்க்கைகளை வாழுகிறோம்! வாழுகிறோம்! வாழுகிறோம்!
மேலும் படிக்க...
ஒரு மாபெரும் அருட்புரட்சியால் ‘தனிமனித விடுதலை’, ‘குடும்ப விடுதலை’, ‘மொழி விடுதலை’, ‘சமுதாய விடுதலை’, ‘இன விடுதலை’, ‘பண்பாட்டு விடுதலை’, ‘நாட்டுரிமை விடுதலை’, … முதலிய பல விடுதலைகளைப் பெறுவதற்காக அருட்படை திரட்டும் ‘மதவழிப் புரட்சித் தலைவனே நான்’.
மேலும் படிக்க...
சித்தர்கள் எனப்படுபவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை தெளிவாகவும் சுருக்கமாக்வும் குருதேவர் சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் எழுத்திலிருந்து எடுத்து வழங்கும் கட்டுரை இது.
மேலும் படிக்க...