முகப்புப் பக்கம்>
அன்பு சேவுக!>
அருளாட்சித் திட்டம்
அருளாட்சித் திட்டம்
அருளாட்சித் திட்டம்
அன்புள்ள சேவுக!
“….. எனது முன்னோர்களால் கட்டப்பட்ட எல்லாக் கோயில்களிலும்,
- கருவறைக்கு மேல் பொற்கலயம் வைக்கவும்;
- தாமரையும் அல்லியும் (பகலிரவு மலர்ந்த மலர் உள்ள தடாகமாக இருந்திடும்) நிறைந்த பளிங்கு போல் தெளிந்த நீருடைய பொய்கை எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;
- கொடிய பலநோய்களைப் போக்கும் மூலிகைகளும் நறுமணமிக்க மலர்களும் பசுமை மாறாமல் வளரும் நந்தவனம் எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;
- எல்லாக் கோயில்களிலும் ஆறுகாலப் பூசையின்போதும் புலமைமிக்க அருட்செல்வர்கள் உயிரும் உடலும் நலமுறும் சித்தாந்தக் கருத்துரைகளை அருள்வாக்காகச் சொற்பொழிவாற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்திடவும்;
- எல்லாக் கோயில்களிலும் எல்லாத் திருவிழாக்களும் முறைப்படி இனிதே நிறைவேறிடவும்;
- உலகெங்கும் சித்தாந்தக் கருத்துக்களைப் பரப்புதற்குரிய அறிவும், புலமையும், பயிற்சியும் பெற்ற தொண்டர்களை உருவாக்கும் குருகுலக் கல்வி எல்லாக் கோயில்களிலும் முறையாக நடந்திடவும்;
- எல்லாக் கோயில்களும் பல்கலைக் கழகமாக, திருமண மண்டபமாக, மனமகிழ் மன்றமாக, கலைவளர் கூடமாக, மருத்துவமனையாக, உயிரின் நலம் பேணும் தெய்வீகக் கலைகளைத் தவத்திலாழ்ந்து பயிலும் தவப் பள்ளியாக… ஆக்கிடுதற்கும்
உரிய தெளிவான, முறையான, முழுமையான திட்டங்கள் அனைத்தும் தீட்டி முடிக்கப்பட்டுவிட்டன …..”
(குருதேவர் அறிக்கை 2இலிருந்து எடுக்கப் பட்டது.)