Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • ஆதிசங்கரர் வரலாறு>
  • ஆதிசங்கரர் - சங்கரர்
  • ஆதிசங்கரர் - சங்கரர்

    ஆதிசங்கரர் - சங்கரர்

    ‘மெய்யான இந்து மதமும், பொய்யான ஹிந்து மதமும்’ வரிசையில் …!

    பிறமண்ணினரான பிறாமணர்கள் ஆதிசங்கராச்சாரியார் என்பவரும், சங்கராச்சாரியார் என்பவரும் ஒருவரே என்று கூறி வருகின்றனர். அதாவது, ஆதிசங்கராச்சாரியார் என்பவர் (காலடி ஆதிசங்கரன்) முதலாவது நபர் என்றும்; அவரின் அடியொற்றி வந்தவர்கள் சங்கராச்சாரியார் என்றும் கூறி மிகப் பெரிய குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனர். ஆனால் இதைப்பற்றி மிகத் தெளிவாகப் பதினெண்சித்தர்கள் கூறும் கருத்தென்ன என்பதை ஆராய்வோம்.

    ஆதிசங்கரர் என்பவர் வேறு; சங்கரர் என்பவர் வேறு. ஆதிசங்கரர் என்பவர்கள் ஒரு பிரிவினராகவும், சங்கரர் என்பவர்கள் மற்றொரு பிரிவினராகவும் தொடர்ந்து இந்து மதத்தில் வருகின்றனர்.

    பதின்மூன்று வகை கருவழி ஆச்சாரியார்களும் (அத்திரி, இத்திரி, தோத்திரி …), 13 வகைக் குருவழி ஆச்சாரியார்களும் (பத்தர், பத்தியார் …) தோன்றிச் செயல்படுகின்றனர். இதுவன்றி, இந்துமத கட்டுக் கோப்புக்கும், ஒழுங்கமைப்புக்கும், பதினெண் சித்தர் பீடாதிபதி காலத்து 48 வகை பீடாதிபதி வழி ஆச்சாரியார்களை (தெய்வீகாச்சாரியார், கடவுளாச்சாரியார் …) கலைகளைப் பயிற்றுவிப்பதற்காகத் தோற்றுவிக்கப் படுகின்றனர்.

    இவையன்றி எட்டுவகை ஆச்சாரியார்கள் தோன்றி இந்துமத வளர்ச்சிக்கு நாடெங்கும் சுற்றிப் பாடுபடுபவர்கள். 1. சங்கராச்சாரியார், 2. பரமாச்சாரியார், 3. ஈசுவராச்சாரியார், 4. சிவாச்சாரியார், 5. ஆதிசங்கராச்சாரியார், 6. ஆதிபரமாச்சாரியார், 7. ஆதி ஈசுவராச்சாரியார், 8. ஆதி சிவாச்சாரியார் என எண்மர் ஆவார்கள். இவர்களில் சிறப்பாக ஆதிசங்கராச்சாரியாரும் சங்கராச்சாரியாரும் ஆக இருவருமே இங்கு காண உள்ளோம்.

    பதினெண்சித்தர்களின் குறிப்புப் படி, இதுவரை 40 சங்கராச்சாரியார்களும், 32 ஆதிசங்கராச்சாரியார்களும் தோன்றியுள்ளனர் என்பதே உண்மை. ஆக இவர்கள் எழுபத்திரண்டு பேரும் தமிழுணர்ந்த தமிழர்களே! தமிழினத்தில் மட்டுமே தான் இவர்கள் தோன்ற முடியும். பதினண்சித்தர்களின் கணக்குப்படி இன்னும் பதினாறு ஆதிசங்கராச்சாரியார்களும், 8 சங்கராச்சாரியார்களும் தோன்ற வேண்டும், தோன்றுவர்.

    இனி சங்கரருக்கும், ஆதிசங்கரர்க்கும் உள்ள வேறுபாட்டைக் காண்போம்.

    சங்கராச்சாரியார்கள்:-

    ஆதிசங்கராச்சாரியார்கள்:-

    ஆனால், இன்றைய காஞ்சி மடத்து சங்கராச்சாரியார் முதல் அனைவரும் காலடி ‘ஆதிசங்கரன் தோன்றல்’ எனக் கூறி ‘அத்வைத’த்தைப் போதித்துக் கொண்டே அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வருகின்றனர்.


    தொடர்புடையவை: