முகப்புப் பக்கம்>
குருதேவர் அருளியவை>
தமிழின மொழி மத விடுதலை
தமிழின மொழி மத விடுதலை
தமிழின மொழி மத விடுதலை
இம் மண்ணுலக அகப் பண்பாடுகளுக்கும், புற நாகரீகங்களுக்கும் அடிப்படையான மதங்களின் மூல மதமான ‘மெய்யான இந்துமதமே’ தமிழருடைய மதம். இம் மதம், அறியாமைகளாலும், புரியாமைகளாலும், தெரியாமைகளாலும் பல்வேறு பிரிவுகளையும், திரிபுகளையும், மாற்று வடிவங்களையும், சிதைவுகளையும், மொழியாட்சிகளையும் பெற்று விட்டது.
அதனால், இது மயங்கித் தேங்கிச் செயல்நலம் குன்றி விட்டது; அன்னியர்களின் வேட்டைப் பொருளாகி விட்டது. இதனால், இம் மத மூலவர்களாகவும், காவலர்களாகவும் உள்ள திராவிட இனத்தவர்களும்; மூல இனத்தவரான தமிழ் இனத்தவரும் தங்களுடைய மொழி, வரலாறு, இலக்கியம், வாழ்வியல்…. முதலிய அனைத்தையும் தெரியாமல் அறியாமல் அனாதை நிலையையும், நாடோடி நிலையையும் பெற்று விட்டனர். …..
“தமிழ் மொழி விடுதலையே உலக மொழிகளின் விடுதலை”
“தமிழ் மொழியின் மறு மலர்ச்சியே உலக ஆன்மீக மறுமலர்ச்சி”
“தமிழ் மொழியின் வள வளர்ச்சியே உலகச் சமய வள வளர்ச்சி”
“தமிழின விடுதலையே உலக மானுட இனங்களின் விடுதலை”
“தமிழின விழிச்சியே உலகச் சகோதரத்தத்துவ விழிச்சி”
“தமிழின எழிச்சியே உலக மானுட உரிமை எழிச்சி”
“தமிழினச் செழிச்சியே உலகப் பண்பாட்டுச் செழிச்சி”
“தமிழின ஒற்றுமையே உலக மானுட ஒற்றுமை”
“தமிழர் மத விழிச்சியே உலகச் சமாதான மலர்ச்சி”
“தமிழர் மத எழிச்சியே உலக நாகரீக மறுமலர்ச்சி”
“தமிழர் மதச் செழிச்சியே உலக மானுடர் உரிமை மீட்சி”
“தமிழர் மத மீட்சியே உலக அருளாட்சி உயர்ச்சி”
“தமிழா விழித்தெழு! உன் வரலாறுகளைத் தெரிய முற்படு! உன் வளமிகு மொழிச் செல்வங்களை அறிய முற்படு! உன் சமுதாயப் பண்பாடுகளைப் புரிய முற்படு! உன் அரசியல் நாகரீகங்களை உணர முற்படு!…. உனக்கு வழி காட்ட உன்னுடைய சமயம் காத்திருக்கிறது…..!”
“இவ்வுலகுக்கே வழிகாட்டவும், வழித் துணையாக வாழ்ந்திடவும், வழிப் பயனாகத் திகழ்ந்திடவும் இம் மண்ணுலகின் மூத்த முதல் குடியான தமிழ்க் குடியே தயாராக வேண்டும்”
……….
தமிழினப் பெருமைகளுள் சில:-
- தமிழினம் தான், இம் மண்ணுலகில் தோன்றிய முதல் இனம், மூத்த இனம்
- இம் மண்ணுலகில் அருளுலகுக்கே உரிய இனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட இனம் தமிழினம்தான்
- இம்மண்ணுலகின் தெய்வீக இனமான தமிழினம், என்றென்றும் விடுதலை உடையதாக! தன்மானம் மிக்கதாக! தன்னம்பிக்கை நிறைந்ததாக! வளமான ஒற்றுமை யுடையதாக! என்றென்றும் காக்கப் பட்டேயாக வேண்டும்.
- தமிழினம்தான் அருளுலகத்தின் அனைத்து வகையான மானுட இன உய்வுப் பிறச்சினைகளுக்கும், உயர்வுப் பிறச்சினைகளுக்கும் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக …. இருக்க முடியும்.
- தமிழின விடுதலைதான் உலக இனங்களின் விடுதலையையும், உலக மதங்களின் விடுதலையையும், உலக மொழிகளின் விடுதலையையும், உலக மானுடப் பண்பாட்டின் விடுதலையையும் உருவாக்கித் தரும். மானுடர்க்குள் எதன் பெயராலும், எவரையும் யாரும் அடிமைப் படுத்தக் கூடாது, சுரண்டக் கூடாது, ஏமாற்றக் கூடாது என்பதுதான் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத் தத்துவமும் சித்தாந்தமும் ஆகும்.
தமிழ் மொழிப் பெருமைகளுள் சில:-
- இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால் பேசப் படுகின்ற மொழிகளிலேயே முதல் மொழியாக, அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக (அனைத்து மொழிகளின் ஒலிகளையுடைய ஒரே மொழியாக) விளங்குவது இத் தமிழ் மொழிதான்.
- இத் தமிழ் மொழியில்தான் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆயுத எழுத்து என்று பல்வேறு வகையான எழுத்துக்கள் இருக்கின்றன.
- இந்தத் தமிழ் மொழிதான் பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளாகியும் எழுத்து மொழியும்(The Literary Language or Diction), பேச்சு மொழியும் (The Conversational Language or Diction) ஒரே மாதிரியாக இருக்கக் கூடிய சிறப்பைப் பெற்றிருக்கின்றது.
- இந்தத் தமிழ் மொழியில்தான் ஆரம்பக் காலம் முதல் இன்று வரை இடைவிடாமல் தொடர்ந்து அருளாளர்கள் தோன்றி அருளூறும் வாக்குகளையும், வாக்கியங்களையும், வாசகங்களையும் வழங்கி வருகிறார்கள்.
………
பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரிய வாசகம்
- பைந்தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியக் கூறுபாடுகளே இந்து மதம்
- மங்கையரை வணங்கும் கடவுளாகப் போற்றி வரும் வண்டமிழரின் வாழ்வியல்தான் இந்து மதம்
- தனது மதத்தைப் புரிந்தவனே! தான் அனாதையில்லை என்பதைத் தெரிந்தவன்
- அருளுலகப் பொருளுலக வறட்சிகளையும், தாகங்களையும், பசிகளையும் போக்கும் அருளூற்றுக்களே கோயில்கள்.
- அக இருள்களையும், புற இருள்களையும் அகற்றும் அருட்பெருஞ்சுடர்களே தமிழரின் வழிபாட்டு முறைகள்.