Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் அருளியவை>
  • சைவசித்தாந்தம்
  • சைவசித்தாந்தம்

    சைவசித்தாந்தம்

    சைவ சித்தாந்தப் பற்றுமிக்க திருவருட்செல்வர் நெடுஞ்சேரலாதன் அவர்கள் சமூகத்திற்கு, பதினெண் சித்தர் மடாதிபதி, பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு இந்துமதத் தந்தை, தலைமை ஆச்சாரியக் குருபீடக் குருதேவர், அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் திருவாய் மலர்ந்தருளிய வாசகத் தொகுப்பின் சுருக்கம்:

    (1) தங்களுடைய அஞ்சல் வாசகத்தின் சிறப்புமிக்க சொற்கள் தங்கள் உடலின் இளமையை அல்லது உள்ளத்தின் இளமையை அல்லது சிந்தையின் மாறாத இளமையை விளக்குகின்றன. இப்படிப்பட்ட தங்களை உடனே நேரில் பார்க்க குருபீடம் விரும்புகிறது.

    (2) அன்பு மகனே! உன் பேரார்வம் பாராட்டப் படுகிறது. உன் ஏட்டறிவின் நிலையென்ன? பட்டறிவின் நிலையென்ன? நீ சார்ந்துள்ள நிறுவன நிர்வாகங்களின் கட்டமைப்புக்களின் நிலையென்ன? என்பதை அறிந்தே உன்னை செயல்படுத்திட வேண்டும். ஏனெனில், தமிழரின் வாழ்வும், வளமும் மங்காதிருக்க, தேங்காதிருக்க, ஏங்காதிருக்க உன் போன்றோரின் செயல் ஊக்கங்கள், வலுவான, வளமான ஆக்கப்பூர்வமான ஊக்கமளிப்புக்களால் பேணப்பட்டேயாக வேண்டும். நீ தமிழ்த்தாயின் வீரத் திருமகன்களில் ஒருவன். அருளுலக இருளகற்றப் பிறந்திருக்கும் திருவருட் செல்வன் நீ. உன்னுடைய ஊக்கம் ஆக்கம் பெற உன்னுடைய நோக்குகளும், போக்குகளும் தக்க முறையில் பக்குவப் படுத்தப் பட்டேயாக வேண்டும். அதற்குரிய போதகர், சாதகர், ஆச்சாரியார், பதினெண் சித்தர் மடாதிபதி, பீடாதிபதி ஆவார். எனவே, உன்னைப் போன்றவர் என்று நீ நம்புகிற தோழர்கள் உனக்கிருந்தால், அவர்களை நீ நம்பினால் அவர்களையும் குருபீடம் காண அழைத்து வா!

    (3) திருவருட்செல்வரே! தாங்கள் அனுப்பிய அச்சிட்ட புத்தகம், அறிக்கை, அறிவிக்கை முதலியவைகளை யெல்லாம் ஏற்கனவே குருபீடத்திற்குத் தெரியும். அவற்றை உருவாக்கியவர்கள் குருபீடத்திற்குச் சொந்தக் காரர்களே.

    (4) எனவே, நீ உன் அஞ்சலின் மூலமும், அச்சிட்டவை மூலமும் தெரிவிக்க விரும்புகின்ற கருத்துக்கள் அனைத்தும் குருபீடத்திற்கு தெரிந்தவைதான், புரிந்தவைதான், ஏற்புடையவைதான். கவலைப்படாதே! கலக்கமடையாதே! குழப்பமடையாதே! ஆனால், ஆனால், ஆனால், ஆதிசிவனார் அருளிய இந்துவேத நூல்கள் 396உம், இந்துமத நூல்களான 36உம், குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரசபாரம்பரியம் எனப்படும் முப்பெரும் வரலாற்றுத் தொடர்களும் வழங்குகின்ற, விளக்குகின்ற நெறிதான் சீவநெறி, சீவநெறி, சீவநெறி.

    (5) “ஆதிசிவனார் அருளிய ‘சீவநெறி’தான் காலப்போக்கில் ‘சிவநெறி’ என்றாகி; பிறகு இந்த சிவநெறியானது ‘சைவநெறி’ என்றாயிற்று”. பிறகு, இந்த சைவநெறிதான் அருளுலக அனுபவம் பெற்ற செயல் சித்தாந்தங்களால் சைவ சித்தாந்த சமயம் என்றாக்கப் பட்டது. இந்த சைவநெறிக்குரிய சித்தாந்த நூல்களில் முதலிரண்டு 11வது பதினெண் சித்தர் மடாதிபதி, பீடாதிபதி, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரால் 10, 11ஆம் நூற்றாண்டுகளில் பிறப்பிக்கப் பட்டவையாகும். இவரையடுத்து இவரது பாரம்பரியத்தில் தோன்றிய மெய்கண்ட சிவாச்சாரியாரே சைவசமய சாத்திரச் சுருக்கத்தை, சாத்திர அடிப்படையை உருவாக்கினார். அவரது வழியில் வந்த அருள்நந்தி சிவாச்சாரியாரும், மறைஞான சம்பந்தரும், உமாபதி சிவாச்சாரியாரும்தான் சைவசமய சாத்திரங்கள் 14இல் மீதியுள்ள 12 சைவசமயச் சாத்திரங்கள் உருவாவதற்கு காரணமானவர்கள்.

    (6) இதுதான் சைவ சமய வரலாறு! இதுதான் சைவசமய வரலாறு! இதுதான் சைவ சமய வரலாறு! அதாவது, முதல் யுகத்தின் ஆரம்பத்தில் ஆதிசிவனார் தமது, (1)விண்ணுலக பதினெண் சித்தர்கள் குழு, (2)விண்ணுலக பதினெட்டாம்படிக் கருப்புக்கள் குழு, (3)விண்ணுலக நாற்பத்தெட்டு வகைக் கடவுள்கள் குழு, (4)விண்ணுலக நாற்பத்தெட்டு வகை வழிபடுநிலையினர் குழு, (5)விண்ணுலக நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள் குழு எனும் ஐந்து குழுக்களோடு இம்மண்ணுலகம் வந்து அண்டபேரண்ட அருளாட்சி நிகழ்த்தி வருகின்ற மூலப் பதினெண் சித்தர்களின் தாய்மொழியும், அண்டபேரண்ட அருளாட்சி மொழியும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியில் அருளிய இந்துவேத, இந்துமத நூல்களின் சாரம்தான் சைவசமய சித்தாந்தம். ஆனால், ஆனால், ஆனால், பலரும் துணிச்சலாக, ‘இந்த சைவ சமய சாத்திரங்கள் பதினான்கும், சமசுக்கிருத மொழியிலிருந்து வந்தவை’ என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதுமட்டுமல்ல, சைவ சமயத்தின் உயிர் நாடியான மூலச் சின்னமான இலிங்கம் என்ற சொல்லே சமசுக்கிருத சொல் (‘லிங்கம்’), சைவசமயக் கடவுளான உருத்திரன், சிவன், பார்வதி, கந்தன், விட்டுணு, பிறமண் முதலிய அனைத்துக் கடவுள்களுக்குரிய பேர்களும் சமசுக்கிருதத்திற்கு உரியவையே (‘ருத்ரன், ஸிவன், பார்வதி, ஸ்கந்தன், விஷ்ணு, பிர்மா’) என்று கூறி வருகிறார்கள். இதை நிரூபிக்கும் வண்ணமே சைவ சமயத் திருமடங்களும், மடாதிபதிகளும், சிவாச்சாரியார்களும், குருக்களும், ‘ஸர்வ அனுஷ்டானங்களும்’….. சமசுக்கிருத மொழியிலேயே செய்து வருகிறார்கள். இந்த இருளை அகற்றும் ஆதவனை சந்திக்க நேரில் திருச்சிக்கு வருக!

    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

    உடனே பதில் எழுதுக!

    பதினெண் சித்தர் மடம்

    8/6/94.

    பெறுநர்:

    திரு சு.வே. நெடுஞ்சேரலாதன்,
    தலைவர், தமிழர் சமயப் பாதுகாப்பு கழகம்,
    மீனாம்பிகை நகர், மதுரை.

    தொடர்புடையவை: