பதினெண் சித்தர்கள் தங்களது தாய்மொழியான அண்டபேரண்டமாளும் அமுதத் தமிழில் 43,73,112 ஆண்டுகளுக்கு முன் (கி.பி.2011ஆம் ஆண்டுக் கணக்கின்படி)வழங்கிய இந்து மதத்தால்தான் அருளாட்சி அமைக்க முடியும். இதுவே, இம்மண்ணுலகின் முதல் மதம், தாய் மதம். இதன் குழந்தைகளாகவே அனைத்து அருள் நிலையங்களும், அருளாளர்களும் தோன்றினர்.
எனவேதான், இந்து மதத்தின் மூலம் மதச் சண்டை சச்சரவுகளின்றி அனைத்து மதங்களும் இணைந்து மனித வாழ்வில் ஒற்றுமை, அமைதி, நிம்மதி, நிறைவு, தோழமை, நட்பு, சமத்துவம், பொதுவுடமை, கூட்டுறவு, உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு…. முதலியவைகளை உருவாக்கும் முயற்சி துவக்கப் பட்டுள்ளது. அதுவே, அருளாட்சி அமைப்புப் பணி!
பொருளுலக இருள்களை அகற்ற அருளாட்சியே வழி! அருளாட்சி அமைத்திட மெய்யான இந்துமதமே சாதனம். மனிதனைக் கடவுளாக்குவதே சித்தர்களின் இந்துமதம்! அருட்கலைகளும், அறிவியல்களும் செழிச்சியுறுவதே அருளாட்சி முயற்சிப் பணியின் வழி!
அருளை அநுபவப் பொருளாக அடையக் கற்றிட வாரீர்!
அனைத்து மதங்களிலும் அருளூற்றுப் பெருகிடச் செய்வதே இந்து மறுமலர்ச்சி இயக்கம்.
நோயாளிகளும், பேயாளிகளும் நலம் பெறலாம்!
வாரீர்! வாரீர்! வாரீர்!