Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 02:11:41

02:11:41

இருக்கு வேதம் காண்டம்-2, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-41:

“இந்த நீர்க்கோளத்தில் நட்டநடுவில் தோன்றிய (7000) ஏழாயிரம் கல் பரப்பளவுள்ள இளமை மாறாத பொரிமணலையும், பொதிமண்ணையும் பெற்றிட்ட இளமுறியாக் கண்டத்தில் இந்துமாக்கடல் நீரிலிருந்து தோன்றிய பயிரினங்களும், உயிரினங்களும் ஊர்ந்து ஊர்ந்து நிலப்பகுதிகளுக்கு வந்து தோற்றுவித்திட்ட பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் இயற்கையின் விதிப்படியும், நியதிப்படியும் தலைவர்களாக மணீசர்கள் தோன்றினார்கள். இம்மணீசர்களைப் பக்குவப்படுத்த, இம்மண்ணுலகில் இந்துமாக்கடல் பரப்பிலிருந்து கல் மட்டும் தோன்றிய காலம் முதல் அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் தங்களுடைய அனைத்துவகைப்பட்ட சாதனைகளான சாதனங்களோடும், துணைவர்களோடும் வந்திறங்கி தொடர்ந்து முயற்சித்து படிப்படியாக தண்ணீரிலும், தரையிலும் அணுக்கள், உயிரணுக்கள், அருளணுக்கள் முதலியவற்றிடையே இயற்கையாக விளைந்த சேர்க்கையால் படிப்படையாக உருவான பயிரினங்களையும், உயிரினங்களையும் பக்குவப்படுத்தினர். அதற்காக இவ்வுலகில் கல் தோன்றி மண்தோன்றாக் காலம் முதல் பதினெண்சித்தர்களின் தாய்மொழியும், அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியும்; முத்தமிழ் மொழியால் உருவான தமிழர்களும், தமிழினத்தவர்களும், அவர்களுக்கு அருளப்பட்ட இந்துவேதக் கருத்துக்களும், இந்துமத வாழ்வியல் நடைமுறைகளும் அனாதிக்காலம் எனப்படும் 4,85,920 ஆண்டுகள் காலம் உழைத்தனர். ஆனால், வடிவ அமைப்பு வகைகளாலும், உடல் வண்ண வகைகளாலும் தாங்களே உண்டாக்கிக் கொண்டிட்ட மொழியின் வகைகளாலும், தாங்கள் தேர்ந்தெடுத்து வாழ்ந்திட்ட நாட்டு எல்லைகளின் வகைகளாலும், எண்ணூற்றுக்கும் மேற்பட்ட இனத்தவர்களாகவும், அவற்றிற்குரிய வேதத்தவர்களாகவும், மதத்தவர்களாகவும் தயாராகிட்டார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் ‘அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியில் அருளப்பட்டுள்ள இந்துவேதம், இந்துமதம் எனும் ஆலமரத்தின் கிளைகளாகவும், விழுதுகளாகவும்தான் இம்மண்ணுலகில் தோன்றியுள்ள அனைத்து வேதங்களும், வேதமதங்களும் இருக்கின்றன’ என்ற பேருண்மையை உணராமல் வாழ்ந்தார்கள். இவர்களுக்குள் அண்டபேரண்ட அருளுலகத்தவக்ர்ளுடன் ஏற்பட்ட உறவால், தொடர்பால் தோன்றிட்ட தேவர், தேவதை, இருடி, கணம், முனிவர் எனும் நான்கு வகைப்பட்ட அருளுலகத்தவர்கள் சாதித்த சாதனைகளைச் சாதிக்கும் வர்க்கத்தார், வழியினர், பாரம்பரியத்தார், வாரிசார் என்ற பொருளில் ‘நான்கு வகைப்பட்ட சாதியினர்’ தோன்றி ஒருவருக்கு ஒருவர் முட்டிமோதி போட்டாப்போட்டிகளையும், போராட்டங்களையும், போர்களையும் தொடர்ந்து உருவாக்கிட்டனர். அதனால், அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள், இம்மண்ணுலகத்தாருக்கு தங்களுடைய தாய்மொழியும், அண்டபேரண்ட அருளூலக ஆட்சிமொழியும் அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியும், அதிலுள்ள அண்டபேரண்டமாளும் இந்துவேத நூல்களையும், இந்துமத நூல்களையும், இம்மண்ணுலகில் முறையாகப் பரப்பிட முடிவெடுத்தனர். அதற்காக, அண்டபேரண்டங்களிலிருந்து விண்ணுலக ஐவர் குழு என்று இம்மண்ணுலகிற்காக பதினெண்சித்தர்கள் என்று பதினெட்டு வகைச் சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள் என்று பதினெட்டு வகையினர், கடவுளர்கள் என்று நாற்பத்தெட்டு வகையினர், வழிபடுநிலையினர் என்று நாற்பத்தெட்டு வகையினர், சித்தர்கள் என்று நாற்பத்தெட்டு வகையினர் என்று ஆக மொத்தம் நூற்றியென்பது (180) வகைப்பட்டவர்கள் அனுப்பப் பட்டார்கள். இந்த 180 வகைப்பட்டவர்கள் சாதித்த சாதனைகளை, சாதிக்கின்ற சாதியினர்களாக; அதாவது இந்த 180 வகைப்பட்டவர்களின் வழித்தோன்றல்களாக, வாரிசுகளாக, பாரம்பரியத்தவர்களாக, ... தோன்றியவர்கள் 180 வகைப்பட்ட சாதியினர்களாக பிரிவுண்டனர். ஏற்கனவே இம்மண்ணுலகில் உருவாகிட்ட சாதிகள் நான்கு வகையோடு சேர்ந்து மொத்தம் (184) நூற்று எண்பத்திநாலு வகைப்பட்ட சாதியினர் உருவாகினர்.”

 

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே