Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 07:19:31

07:19:31

இருக்கு வேதம் காண்டம்-7, மண்டலம்-19, நாள் உரைக்கோவை வாசகம் 31
“அண்டபேரண்டங்களிலிருந்து இம்மாஞாலம் நீர்க்கோளமாக இருந்து, நட்ட நடுவில் கற்பாறை மட்டும் முளைத்திருந்த காலத்தில் வந்திட்ட மூலப் பதினெண்சித்தர்கள் [கற்பாறை பகுதிகளைச் சுற்றி எங்கும் பரவி இருந்த பெருநீர்ப் பரப்புக்கு இந்துமாக்கடல் என்று பெயர் வைத்தனர்.] அதாவது, பதினெண்சித்தர்களின் தாய்மொழியான முத்தமிழ் மொழிக்கு, தெய்வத் தமிழ்மொழிக்கு, வண்டமிழ் மொழிக்கு, ஒண்டமிழ் மொழிக்கு, தீந்தமிழ் மொழிக்கு, செந்தமிழ் மொழிக்கு, பைந்தமிழ் மொழிக்கு இந்துவேதத்தில் பொருளாகக் கூறப்படும் 1) நாற்பத்தெட்டு சொற்களின் பட்டியலிலும், 2) அறுபத்து நான்கு சொற்களின் பட்டியலிலும், 3) தொண்ணூற்றாறு சொற்களின் பட்டியலிலும், 4) நூற்றியெட்டு சொற்களின் பட்டியலிலும், 5) இருநூற்று நாற்பத்து மூன்று சொற்களின் பட்டியலிலும், 6) முந்நூற்றுத் தொண்ணூற்றாறு சொற்களின் பட்டியலிலும், 7) நானூற்று முப்பத்திரண்டு சொற்களின் பட்டியலிலும், 8) நாணூற்று எண்பத்தாறு சொற்களின் பட்டியலிலும், 9) எழுநூற்று இருபத்திரண்டு சொற்களின் பட்டியலிலும், 10) தொள்ளாயிரத்து எழுபத்திரண்டு சொற்களின் பட்டியலிலும், 11) ஆயிரத்தெட்டு சொற்களின் பட்டியலிலும், 12) ஆயிரத்து முந்நூற்று ஐம்பத்தொன்பது சொற்களின் பட்டியலிலும்; முதல் சொல்லாக இருக்கின்ற, பொருளாழமிக்க, அழகிய, இனிய சொல்லான ‘இந்து’ என்ற சொல்லால் ‘இந்துமாக்கடல்’ என்று பெயரிட்டனர். அதுபோல், மாறாத இளமை தரும் வேதத்துக்கும், மதத்துக்கும் ‘இந்து’ என்ற பெயரை வழங்கிய பதினெண்சித்தர்கள், மாறாத இளமை தரும் மருந்துக்கும் ‘இந்து’ என்று பெயரிட்டனர். இந்த ‘இந்து’ என்ற சொல்; இம்மாஞாலத்தில் கற்பாறையும், மணலும், மண்ணும் படிப்படியாகத் தோன்றி, பயிரினங்கள் முளைத்த காலத்து மாறா இளமை தரும், மாறாப் பசுமையுடைய கஞ்சா இலையை, மாறாத இளமை தரும் அமுதம் தயாரிக்கும் மூலமெனக் கண்டறிந்து இந்துவேத வாழ்வியலிலும், இந்துமத வாழ்வியலிலும் மறையாக நெறிமுறைப் படுத்தினர். இதனை இந்துவேதமும், இந்துமதமும் பிறந்த நாட்டைத் தவிர வேற்று நாட்டில் முழுமையான வளத்தோடு விளைவித்திடவும் முடியாது, பயன்படுத்திடவும் முடியாது. இதை மூலப் பதினெண்சித்தர்கள்,
மாதப் பருவ பூசையில்
    நிலவொளி படா
ஆவி ஆருயிர் ஆன்மா
    இணையும் இலிங்கத்தில்
பசு நெய்யோடு இந்துவை
    கலந்து பூசி
காரிருள் அகல கதிரவன்
    ஒளி மறைய
காலம் பத்து யாமம்
    கடந்து கருக்காக
நெருக்கி வருடி எடுத்து
    நறுக்கிய பீர்க்கு
சுரக்காய் கொடிக்கு உள்ளீடாக்கி
    அறுபதாண் டகவை
கடந்தோடும் இளமை ஒழித்தோடும்
    நெறிமுறைப்படி பயன்படுத்திட
எய்திடலாம் துய்த்திடலாம் மாறாவிளமை
    என்பதே இந்துவேதம்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே