Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 01:04:07

01:04:07

இருக்கு வேதத்தில் காண்டம்-1, மண்டலம்-4, நாள் உரைக்கோவை வாசகம்-7:

“அனாதிக்காலம் எனப்படும் 4,85,920 ஆண்டுக் காலங்களில் இப் புவிப்பரப்பு முழுவதும் ஆங்காங்கே தோன்றிய உயிரினங்களுக்கிடையில் தோன்றிய உயிரின வகைகளுள் ஒன்றாகத் தோன்றிய மணீசர்கள் மற்ற பயிரினங்களையும், உயிரினங்களையும் அடக்கியாண்டு வாழ்ந்தது போலவே; தங்களைப் போன்ற மணீச இனங்களையும் கூட எவ்விதமான மானுட இன உணர்வின்றி விலங்குகளோடு மோதுவது போல மோதித் தாக்கி வேட்டையாடி கொன்று குவித்து வெறிமிக்க களியாட்டம் ஆடினார்கள். அதைத் தடுத்து நிறுத்த ஞானவள்ளல்களாகிய, அருட்கொடை வள்ளல்களாகிய, அருளாட்சி நாயகங்களாகிய, அண்டபேரண்டம் ஆளும் மூலப் பதினெண்சித்தர்கள் இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் தங்களுடைய தாய்மொழியும், அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியும் அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியில் அருளினார்கள். அதற்காகவே, இம்மண்ணுலகுக்கென ஆதிசிவனார் தலைமையில் பதினெண்சித்தர் குழுவும், பதினெட்டாம்படிக் கருப்புகள் குழுவும், நாற்பத்தெட்டு வகைக் கடவுளர்கள் குழுவும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபடுநிலையினர் குழுவும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்கள் குழுவும் அனுப்பப்பட்டன. அவரும் திருவருட் செய்திகளையும், திருவருட் செயல்திட்டங்களையும், இயற்கை அரண்கள் மிகுந்த சிவபுரத்தை திருவிடமாக உருவாக்கி திருவருள் நோக்கை செயல்படுத்திடும் திருவிடத்தார்களை, திராவிடர்களை, முத்தமிழ் வல்ல தமிழர்களாக்கினார். இத் தமிழர்களை இந்துவேதத்துக்கும், இந்துமதத்துக்கும் தலைவர்களாக, நாயகர்களாக, மூலவர்களாக, காவலர்களாக, வாரிசுகளாக, சொத்துக்களாக, வித்துக்களாக, நாற்றங்கால்களாக, நாற்றுப் பண்ணைகளாக, விதைப் பண்ணைகளாக, ... உருவாக்கி; இப் புவிப்பரப்பு முழுவதும் இம் மாஞாலம் முழுவதும், இப்பூவுலகு முழுவதும், இப்பூமி முழுவதும், இப்புவி முழுவதும், இவ் வையகம் முழுவதும் உள்ள மணீசர்களைத் திருத்திப் பக்குவப்பட்ட மனதையுடைய மனிதர்களாக்கிட அனுப்பினார். ஆனால், ஆனால், ஆனால், பிறரைத் திருத்திடச் சென்ற பெரும்பாலான தமிழர்கள் தன்னம்பிக்கையையும், தங்களின் தனித்தன்மைகளையும், தங்களுடைய திராவிட கடமைகளையும், உரிமைகளையும், பெருமைகளையும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியான முத்தமிழ்மொழியையும், இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் மெல்ல மெல்ல காலப்போக்கில் மறந்தும் துறந்தும் செயல்பட ஆரம்பித்திட்டார்கள், செயல்பட்டிட்டார்கள். எனவேதான், திராவிடத்தால் அதன் சுற்று வளாகத்தில் இந்துவேதமும், இந்துமதமும் யாண்டும் பரவிட்ட இந்தியாக்களின் எண்ணிக்கை ஆரம்பக் கட்டத்தில் நாற்பத்தெட்டாக இருந்தது போலவே தொடர்ந்து இருக்க நேரிட்டது. இவற்றின் எண்ணிக்கை குறையவும், மறையவும் நேரிடும் போது இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் மீண்டும் மீண்டும் மானுடரை சுழற்சிக்கும், வீழ்ச்சிக்கும், தாழ்ச்சிக்கும் உரியவர்களாக்கிடக் கூடிய புதிய புதிய வேதங்களிலிருந்தும் வேதமதங்களிலிருந்தும் காத்திடுவதற்காக ஆதிசிவனார் தமது திருமகனார் முருகப் பெருமான் பதினெட்டு (18) படைவீடுகளில் நிறைந்திடவும், தமது வாரிசாகத் தொடர்ந்து கருவூறார் பாரம்பரியம் செயல்படவும் உரிய வழிவகைகளை வளர்த்திட்டார். இச் சரித்தர, சரித்திர, சரித்திறங்களை; இவற்றிற்குரிய 1. அத்தர, 2. அத்திர, 3. அத்திறங்கள், 4. சாத்தர, 5. சாத்திர, 6. சாத்திறங்கள், 7. சூத்தர, 8. சூத்திர, 9. சூத்திறங்கள், 10. தோத்தர, 11. தோத்திர, 12. தோத்திறங்கள், 13. நேத்தர, 14. நேத்திர, 15. நேத்திறங்கள், 16. வேத்தர, 17. வேத்திர, 18. வேத்திறங்கள், 19. கருவாக்கு, 20. கருவாக்கியம், 21. கருவாசகம், 22. குருவாக்கு, 23. குருவாக்கியம், 24. குருவாசகம், 25. தருவாக்கு, 26. தருவாக்கியம், 27. தருவாசகம், 28. திருவாக்கு, 29. திருவாக்கியம், 30. திருவாசகம், 31. அருள்வாக்கு, 32. அருள்வாக்கியம், 33. அருள்வாசகம், 34. மருள்வாக்கு, 35. மருள்வாக்கியம், 36. மருள்வாசகம் முதலியவற்றின் அடிப்படையோடும்; வேதவாக்கு, வாக்கியம், வாசகங்களின் துணையோடும் புதுப்பித்திடும் பணிகள் யுகந்தோறும் தேவைக்கேற்ப தோன்றித் தோன்றி சாதனைகள் புரிந்திட அருள்வழங்கிட்டார். அவரின் அருளாசியுடன் இந்துவேதம் தழைக்க, இந்துமதம் பிழைக்க உழைப்போர் ஏழேழு பிறப்பிலும் ஏற்றமிகு நல்வாழ்வு பெறுவர்”

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே