இங்கே உள்ளீர்கள் : பதிப்புரை

பதிப்புரை

இந்து இலக்கியக் கழகம்

 இந்து வேதச் சுருக்க விளக்கம் குருதேவர் அவர்களால் 'இந்து வேத மாநாட்டு வெளியீடாக' "இந்து இலக்கியக் கழக'த்தின் மூலம் தரப் படுகிறது.

 இந்த இந்து இலக்கியக் கழகம் இளைஞர்களாலேயே உருவாக்கப் பட்டு ஒரு சில பெரியவர்களின் துணையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது 'இந்துமத இலக்கியக் கழகம்' என்றோ அல்லது 'இந்து வேத இலக்கியக் கழகம்' என்றோ அல்லது 'இந்துக்களின் இலக்கியக் கழகம்' என்றோ பெயரிடப்பட வில்லை.  இதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், பதினெண் சித்தர்கள் 'இந்து' என்ற பொருளாழமிக்க அழகிய இனிய தூய செந்தமிழ்ச் சொல்லின் பெயராலேயே தங்களுடைய அருட்கொடைகள் அனைத்தையும் வழங்கி யிருக்கிறார்கள். எனவேதான், அவர்கள் அருளுலகுக்கு வழங்கி யுள்ள போதனைகளையும், சாதனைகளையும், பொருளுலகுக்கு வழங்கி யுள்ள அறிவியல்களையும், கலைகளையும் உலகம் உணரும் படிச் செய்வதற்காகத் தோற்றுவிக்கப் பட்டுள்ள இந்தக் கழகம் 'இந்து இலக்கியக் கழகம்' என்ற பெயரில் உருவாகி இயங்கி வருகிறது.

இன்றைய பதினெண் சித்தர் பீடாதிபதியும் மடாதிபதியும் கருகுல ஆதீனமுமான  ஞானாச்சாரியார், இந்துவேத பீடம், இந்துமதத் தந்தை, இந்துமதத் தலமை ஆச்சாரியக்  குருபீடம், குருமகா சன்னிதானம்,  ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் பாரம்பரியமாக வருகின்ற செவி வழிச் செய்திகள்; ஏட்டறிவுச் செய்திகள், பட்டறிவுச் செய்திகள்; முதலியவைகளை தமது சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் முதலியோர்களுக்கு வெளியிட்டு வருகின்றார். இப்படி இவர் வெளியிட்டு வருபவைகளை உலகம் முழுதும் பரப்ப வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த இந்து இலக்கியக் கழகம் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது.

இக் கழகம், இதுவரை பொதுமக்களுக்குப் பதினெண் சித்தர்களின் அருளுலகப் பொருளுலகக் கொடைகளை அறிவித்துத் தேவையான ஆதரவுகளையும், உதவிகளையும் பெற்று பதினெண் சித்தர்களுடைய அருளுலகப் போதனைகளையும், சாதனைகளையும், பொருளுலக அறிவியல்களையும், கலைகளையும் உலகோர் முறையான கல்வியாகக் கற்றிடுவதற்காகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் தனிப்பட்ட ஒரு பல்கலைக் கழகத்தையும் உருவாக்குவதற்காகத் திட்டமிட்டே உழைத்து வருகிறது.

இந்தக் கழகம், அதற்காக இன்று வரை ஆயிரத்து ஐநூறுக்கும் (1500) மேற்பட்ட அச்சிட்ட அறிக்கைகளையும், அறிவிக்கைகளையும் வெளியிட்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக சிறிய பெரிய அளவில் நூறு நூல்களுக்கும் மேல் வெளியிட்டிருக்கிறது. இருந்தும் எதிர்பார்த்த பயன் ஏற்பட வில்லை, ஏற்பட வில்லை, ஏற்பட வில்லை, ஏற்படவே யில்லை.

இவற்றை யெல்லாம் எண்ணித்தான், இப்பொழுது இந்த இந்து இலக்கியக் கழகம் பதினெண் சித்தர்களுடைய அருளியல் கருத்துக்களால்தான் உலகோரைத் தட்டியெழுப்ப முடியும் என்று முடிவெடுத்து இந்து வேதம் பற்றிய நூல்களையும்; இந்து வேதத்தின் செயல் வடிவமான இந்துமதம் பற்றிய நூல்களையும் வெளியிட முன் வநதிருக்கிறது. 

இத்துடன் பதினெண் சித்தர்கள் செயல்பட்டிட்ட முதல் நிலமான இத் திருநாட்டில் பதினெண் சித்தர்களின் சாதனைகளையும், போதனைகளையும் விளக்கிட இந்துவேத மாநாடு எல்லா வட்டாரங்களிலும், மாவட்டங்களிலும் நிகழ்த்திட முன் வந்திருக்கிறது இக்கழகம். இதன் மூலமாவது, சாதி, மதம், மொழி, இனம், நாடு  என்ற அடிப்படையில் உள்ள அனைத்து வகையான வெறிகளையும், சண்டைச் சச்சரவுப் போராட்ட வெறிகளையும் அகற்றிட முயலுகிறது இக்கழகம். இதற்கு அனைவரின் ஆதரவும் வேண்டப் படுகிறது.

-  இந்து இலக்கியக் கழகம்

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.