மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும்
ஓர் அசுரனை, அரக்கனை, அநீதிக் காரனை… அழித்ததற்காக ஒரு திருநாள், திருவிழா, கொண்டாட்டம்…. தோன்றியிருக்குமா? இருக்காது! இருக்காது! இருக்காது!
ஏனெனில், அந்தகன், இடும்பன், இராவணன், இரணியன், சலந்தரன், பகன்… முதலியோரின் அழிவுக்குத் திருவிழாவோ, திருநாளோ! கொண்டாட்டமோ …. தோற்றுவிக்கப் படவில்லை.
பிறகு ஏன், நரகாசுரன் கதைக்கும் தீபாவளிக்கும் தொடர்பு உண்டாக்கப்பட்டது?
பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தில் தீபாவளித் திருநாள் ‘சோதி வழிபாடு’, ‘தீப வழிபாடு’, ‘ஒளி வழிபாடு’, ‘சூரிய வழிபாடு’, ‘சந்திர வழிபாடு’, ‘விண்மீன் வழிபாடு’, ‘முத்தீ ஓம்பல் வழிபாடு’, ‘நெருப்பு வழிபாடு’, … என்ற சிறப்புக்களைப் பெற்றுள்ளது. இத் திருநாளீல் இந்துமதக் கூட்டு வழிபாட்டில் இந்துமத ஒற்றுமையும், பற்றும், பாசமும் கட்டிக் காக்கப் பட்டன.
ஒவ்வொரு இந்துவும் தீபாவளியை முன்னிட்டு ஏழைகளுக்கும், நண்பர்களுக்கும், அன்னியர்களுக்கும் நீராட நல்லெண்ணை, சீயக்காய், கட்டிக் கொள்ளப் புதிய ஆடைகள், சரிசமமாக உட்கார்ந்துண்ண அறுசுவையுணவு, இயன்ற அளவு தமது ஆண்டு வருமானத்தில் சரியான கணக்குக்குரிய தொகையில் (ஆறில் ஒரு பங்கை ஏழைகளுக்கும், நண்பர்களுக்கும், அன்னியர்களுக்கும் நன்கொடையாக வழங்குவது) ஆறில் ஒரு பங்கு தொகை முதலியனவற்றை வழங்க வேண்டும் - என்று கூறுவதுதான் மெய்யான இந்துமதம்.
நரகாசுரன் கதையைக் கூறுவதுதான் பொய்யான ஹிந்துமதம். இந்த ஹிந்துமதமே பிறாமணருடையது. இந்து மதத்தைக் கெடுத்ததே இந்த ஹிந்து மதம்தான்.
‘இந்துமதம்’ என்பது 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால், ‘இளமுறியாக் கண்டம்’ என்கிற ‘குமரிக் கண்டத்தில்’ (The Lost Lemuria) பதினெண் சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள்… என்பவரால் உருவாக்கப் பட்டது. இந்த இந்துமதம் அமுதத் தமிழ்மொழியில்தான் வெளியிடப் பட்டது. இதனுடைய நூல்களும் (Books), செயல் திட்டங்களும் (Practical Theories), திருநாள்களும் வீம்புக்கென்றே பிறாமணர்களால் தவறான விளக்கங்களால், செய்திகளால் பாழ்படுத்தப் பட்டு விட்டன. எனவேதான், தமிழின இந்துமதக் குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் ‘மெய்யான இந்துமதமும், பொய்யான ஹிந்துமதமும்’ என்று தலைப்பிட்டே கருத்துரைகள் வழங்கிச் செயல்படுகிறார். அவற்றுள் ஒன்றுதான் இந்தத் ‘தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் தொடர்பில்லை’ என்ற கருத்துரை.