முகப்புப் பக்கம்>
தமிழ்மொழி>
தமிழனைத் தமிழனாக்குவது
தமிழனைத் தமிழனாக்குவது
தமிழனைத் தமிழனாக்குவது
குருவாசகங்கள்
- ‘தமிழனைத் தமிழனாக்குவதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தமிழ்மொழிப் பற்றினை உண்டாக்குவதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தன்மான உணர்வினைத் தோற்றுவிப்பதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தன்னம்பிக்கையூட்டுவதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தன் இனமான உணர்வினை ஊக்குவிப்பதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு இனப்பற்றினை விளைவிப்பதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு இன ஒற்றுமையுணர்வை உண்டாக்குவதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு இன உரிமையுணர்வை ஊற்றெடுக்கும்படிச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தனது தமிழ்மொழியே விழி என்ற அறிவை வளர்ப்பதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தானே அருளுலகின் மூலவன், முதல்வன், வாரிசு என்ற பேருண்மையை விளங்கிக் கொள்ளச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தமிழே கடவுள், தெய்வம், தேவதை, இறை, எல்லா என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தமிழ்மொழியே அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழி என்ற பேருண்மையைப் புரியும்படிச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தமிழ்மொழிதான் அருளை அநுபவப் பொருளாக ஊற்றெடுக்கச் செய்யும் அமுதமொழி என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தமிழ்மொழியே அண்டபேரண்டங்களை இம்மண்ணுலகப் பிண்டங்களோடு இணைக்கும் பேராற்றலுடைய அருள்மொழி என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்குத் தமிழ்மொழியே அனைத்து வகைப்பட்ட கடவுள்களையும் நேரில் வரவழைக்கும் ஆற்றலுடைய அருளுலக ஆட்சிமொழி என்ற பேருண்மையைப் புரிய வைப்பதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு அனைத்து வகைப்பட்ட மனிதர்களையும் விருப்பம்போல் எந்தக் கடவுளாகவும் மாற்றித் தரும் வல்லமை தமிழ்மொழிக்கே உண்டு என்ற பேருண்மையைப் புரிய வைப்பதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு கடவுளை மனிதனாக வரவழைக்கும் அருளாற்றலுடைய ஒரேமொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு மனிதனைக் கடவுளாக்கும் பூசைமொழியினையுடைய ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நாற்பத்தெட்டுவகைப் பட்ட கடவுள்களையுடைய ஒரே ஒரு மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபடு நிலையினர்களையுடைய ஒரே ஒருமொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு கடவுளர்களின் விருப்பங்களுக்கேற்ற 48 வகைப்பட்ட கருவறைகளையும், 48 வகைப்பட்ட வெட்டவெளிக் கருவறைகளையும், 48 வகைப்பட்ட வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், 48 வகைப்பட்ட கோயில் மூலக் கருவறைகளையும் தோற்றுவிக்கின்ற அருட்பேராற்றலையுடைய ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு அருவக் கடவுள்களையும், அருவுருவக் கடவுள்களையும், உருவ அருவக் கடவுள்களையும், உருவக் கடவுள்களையும் தோற்றுவிக்கின்ற அருட்பேராற்றலையுடைய ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு திருக்கல் எனும் கடவுள்களையும், தருக்கல் எனும் கடவுள்களையும், கருக்கல் எனும் கடவுள்களையும், குருக்கல் எனும் கடவுள்களையும் உருவாக்குகின்ற அருட்பேராற்றலையுடைய ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நூற்றெட்டு வகைப்பட்ட திருப்பதி சக்கரங்களும், 243 சத்திபீடச் சக்கரங்களும், 1008 வகைப்பட்ட சீவாலயச் சக்கரங்களும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் அருட்பேராற்றலையுடைய ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், மருளாளர்கள், மருளாளிகள், மருளாடு நாயகங்கள் என்ற ஆறுவகைப்பட்ட திருவருட் செல்வர்களையும் தோற்றுவிக்கின்ற அருட்பேராற்றலையுடைய ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் எனும் அருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நவநாதங்கள், பதினெண்சித்தங்கள், 36 ஓதங்கள், 96 போதங்கள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கக் கூடிய ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நான் சுருதிகள், நான் ஆரணங்கள், நான் ஆகமங்கள், நான் மீமாம்சைகள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நேமங்கள், இணை நேமங்கள், துணை நேமங்கள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நியமங்கள், இணை நியமங்கள், துணை நியமங்கள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நிடதங்கள், இணை நிடதங்கள், துணை நிடதங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நிட்டைகள், இணை நிட்டைகள், துணை நிட்டைகள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நீதிகள், இணை நீதிகள், துணை நீதிகள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு அத்தரங்கள், அத்திரங்கள், அத்திறங்கள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு சாத்தரங்கள், சாத்திரங்கள், சாத்திறங்கள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு சூத்தரங்கள், சூத்திரங்கள், சூத்திறங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு தோத்தரங்கள், தோத்திரங்கள், தோத்திறங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு நேத்தரங்கள், நேத்திரங்கள், நேத்திறங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதுதான் சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு வேத்தரங்கள், வேத்திரங்கள், வேத்திறங்கள் எனும் திருவருட் செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு கருவாக்குகள், கருவாக்கியங்கள், கருவாசகங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு குருவாக்குகள், குருவாக்கியங்கள், குருவாசகங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு தருவாக்குகள், தருவாக்கியங்கள், தருவாசகங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு திருவாக்குகள், திருவாக்கியங்கள், திருவாசகங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு அருள்வாக்குகள், அருள்வாக்கியங்கள், அருள்வாசகங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு மருள்வாக்குகள், மருள்வாக்கியங்கள், மருள்வாசகங்கள் எனும் திருவருட்செல்வங்கள் இருக்கின்ற ஒரே ஓர் அருள்மொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு ஆதகர், ஈதகர், ஏதகர், ஓதகர் எனும் அருட்கலைஞர்களை உருவாக்குகின்ற அருட்பேராற்றலையுடைய ஒரே ஒருமொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
- ‘தமிழனுக்கு கோதகர், சாதகர், போதகர், வாதகர் எனும் அருளுலக ஊழியக் காரர்களை உருவாக்குகின்ற அருட்பேராற்றலையுடைய ஒரே ஒருமொழி தமிழ்மொழிதான் என்ற பேருண்மையை விளங்கிடச் செய்வதே சிறந்த தவம்’,
… முதலிய குருவாசகங்களை கணக்கற்று எல்லாக் குறிப்பேடுகளிலும் குருபாரம்பரியத்திலும் எழுதிச் செல்லுகிறோம் யாம். இவற்றின் மூலமாவது கணக்கற்றோரின் முயற்சியால் என்றாவது ஒருநாள் தமிழன் தமிழனாக்கப் படுவான். அப்படி, தமிழன் தமிழனாக்கப் பட்ட பிறகுதான் இந்துவேதம் வளவளர்ச்சியையும், ஆட்சிமீட்சியையும் பெற்றிடும். அதையொட்டியே, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும், ஆட்சிமீட்சி பெற்றிடும்.
பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.
வழங்குவது:-
இந்துவேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண்சித்தர் மடத்தின் மடாதிபதி, இந்துமதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண்சித்தர் பீடத்தின் பீடாதிபதி, இந்துமதத்தின் முழுமுதற் தலைமை ஆச்சாரியக் குருபீடமான ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இந்துவேத நாயகம், இந்துவேதபீடம்.