பூஜை என்பதற்குரிய தமிழ்ச் சொல் என்ன? விளக்கம் என்ன?
‘பூ’ வினால் இறை [48 வகை] வழிபாடு செய்யப்படுவதே ‘பூசை’ என்று தமிழில் குறிக்கப் படுகின்றது. இதனைத்தான் ‘பூஜை’ என்று வடமொழியில் குறிக்கின்றனர்.
சக்தி என்று குறிக்கப்பட்டு வரும் சொல்லை சத்தி என்றே குறிக்க வேண்டும், ஏன்?
சத்தி என்ற சொல் சக்தி என்று தவறாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. தமிழ்மொழி வழக்கப்படி ‘க்’ என்ற எழுத்துக்குப் பிறகு ‘கி’ அடியற்றி வர வேண்டும். சக்கி என்றுரைத்தல் இவ்விடத்தில் பொருளற்றது. எனவே, சத்தி என்றே குறிக்க வேண்டும். இதே போல் பத்தி (பக்தி), சத்தி (சக்தி), சித்தி, முத்தி (முக்தி) என்றே பதினென்சித்தர்கள் தங்கள் நூல்களில் பயன்படுத்தியுள்ளனர்.
அனைத்துக்கும் பொதுவாக ‘மந்திரம்’ என்று இடையின ‘ர’ குறித்து எழுதி வருவது சரியா’ விளக்கம் தேவை.
பதினெண் சித்தர்கள் மந்திறம், மந்திரம், மந்தரம், மாந்தரம், மாந்தரீகம் என்று ஐந்தைக் குறிக்கின்றார்கள். ஆனால் காலப்போக்கில் ‘மந்திரம்’ என்ற சொல் மட்டுமே மக்களுக்குத் தவறாக அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால் இந்த ஐந்தையும் அறிய முடியாமல் போய்விட்டது. எனவே, மக்களின் சிந்தனையைத் தூண்டத்தான் மந்திரம் என்ற சொல் தற்போது கையாளப் படுகின்றது.
வழக்கில் உள்ள திருமந்திரம் என்ற நூலுக்கு அது மனதைத் திறமைப் படுத்துவதற்காகப் பயன்படக் கூடிய ஒன்று (மனது + திறம் = மந்திறம்) என்று குறிக்கப்பட்டு ‘திருமந்திறம்’ என்றே சித்தர்கள் பயன் படுத்தியுள்ளனர். இதைப் பன்முறை வற்புறுத்தியும் பலர் இடையின் ‘ர’ உபயோகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் திருந்த வேண்டும்.