கேள்வி:- கோடிக் கணக்கான கடவுள்கள் உண்டா? இல்லை ஒரே கடவுள்தானா?
பதில்:- கோடிக்கணக்கானக் கடவுள்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாகச் சமைத்துப் படையல் போட வேண்டும் என்று பதினெண் சித்தர்கள் வகுத்துள்ளார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியாகப் பூசாவிதிகள், படையல் நூல்கள், படையல் சாத்திறங்கள், கருவறை நூல்கள், பூசை செய்யும் நேரம், பூசையின் பயன் என்றெல்லாம் பகுத்து வைத்துள்ளனர். ஒரே கடவுள் என்று சொல்கின்ற ஆன்மீக வாதிகள் கலைமகள் வழிபாடு, திருமகள் வழிபாடு…. என்று பல தெய்வ வழிபாடுகள் மட்டும் தொடர்ந்து செய்து வருகின்றனர். சித்தர்கள் கணக்கையும், மருத்துவத்தையும், வேதியியலையும்…. பகுத்தறிவு அடிப்படையில் உருவாக்கியவர்கள். கடவுள்களைக் கற்பனையாகப் படைத்திருப்பார்களா?
கடவுள் ஒருவரா? பலரா?
பதினெண்சித்தர்கள் வழிபடுநிலையினர் என்று தமது இந்து மதத்தில் 48 பேர்களின் பட்டியலைத் தருகின்றார்கள்.
1.அப்பன், 2.ஆயாள், 3.கரு, 4.குரு, 5.தரு, 7.அல்லா(எல்லா) 8.பரம்பொருள், 9.மகாப்பொருள், 10.ஏகப்பொருள், 11.அநேகப் பொருள், 12.முத்தீ, 13.ஐந்தீ, 14.பாழ்வெளி, 15.வெட்டவெளி, 16.கருவறை, 17.இறை, 18.கடவுள், 19.தெய்வம், 20.ஆண்டவர், 21.ஆளுபவர், 22.பட்டவர், 23.படாதவர், 24.தேவியர், … 30.அமரர், 31.அருவத்தார், 32.உருவத்தார், 33.அருவுருவத்தார் … இப்படி நாற்பத்தெட்டுப் பேர்கள் குறிக்கப்படுகின்றனர்.
இத்துடன் 108 திருப்பதிகள், 243 சத்தி பீடங்கள், 1008 சிவாலயங்கள் வழிபாட்டுக்குரியன என்று அறிவிக்கப் படுகின்றன. எனவே, பதிலைப் புரிய முற்படுங்கள்.