Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • சிறு தெய்வங்கள் - விளக்கம்.
  • சிறு தெய்வங்கள் - விளக்கம்.

    சிறு தெய்வங்கள் - விளக்கம்.

    கேள்வி: சிறு தெய்வங்கள், பெரு தெய்வங்கள் விளக்கம் தேவை!

    பதில்:- மிக விவரமாக வரலாற்றுப் பின்னணியோடு தர வேண்டிய பதிலாகும். இருந்தாலும் சுருக்கமாக தர விழைகின்றோம். இதற்கென தனிக் கட்டுரையே விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

    பதினெண்சித்தர்களுக்கு அனைத்து தெய்வங்களும் சமமானவையே. ஆனால், வழிபாட்டு முறையை மட்டும் பிரித்து வைத்திருந்தனர்.

    தமிழர்கள் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், மூலத் தெய்வங்கள் என்று பிரித்து பிரித்து வைத்து நாடோறும், வாரந்தோறும், மாதமிரு முறை…… என்ற முறையில் வழிபாட்டு முறைகளை நடத்தி வந்தனர். இதனைத் திட்டமிட்டு வட ஆரிய வேத நெறியினர் சிறு தெய்வங்கள், துட்ட (துஷ்ட) தெய்வங்கள் …… என்றெல்லாம் கூறி வழக்கமான நமது அன்றாட வழிபாட்டிலிருந்து இவைகளைப் பிரித்தனர். இதனால் காவல், குலதெய்வங்களின் பாதுகாப்போ, அரணோ இன்றி தமிழுலகம் தனிமைப் படுத்தப்பட்டு சிதறுண்டு ஒற்றுமையின்றி இந்துமதத் தத்துவ உண்மைகளை மறந்தொழிந்தது. இன்று தமிழினம் அடிமைப்பட்டுப் போக ஏதுவாகியது.