Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • திருமூலரின் திருமந்திரம்
  • திருமூலரின் திருமந்திரம்

    திருமூலரின் திருமந்திரம்

    கேள்வி:- திருமூலர் தமது திருமந்திரத்தில் பெரும்பாலும் சமசுக்கிருத மொழியைத்தான் பயன்படுத்தி யிருக்கிறார் என்று கூறுவது உண்மையா? இதுதான் தமிழில் முதல் வேதம் என்பதால் சமசுக்கிருதத்தில் இருந்துதான் திருமூலர் கருத்துக்களைக் கடன் வாங்கினாரா?

    பதில்:- கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், மேதைகள், பேராசிரியர்கள் முறையாகவும், நிறையாகவும் பழந்தமிழ் நூல்களில் பயிற்சியும், ஆராய்ச்சியும் இல்லாதவர்களாகவே வாழ்ந்து வருகின்ற காரணத்தினால்; பெரும்பாலானவர்கள் சமசுக்கிருத மொழியின் அடிமைகளாகவும், ஆரிய மாயையில் சிக்கித் தவிப்பவர்களாகவுமே இருந்து வருகிறார்கள். எனவேதான், தமிழ்ச் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும், சமசுக்கிருத சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் வேறுபாடு தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இது பற்றி பல்லாயிரக் கணக்கான சமசுக்கிருத சொற்களை தமிழ்மொழியிலிருந்து சமசுக்கிருதத்தில் கடன் வாங்கப் பட்ட தமிழ்ச் சொற்களே என்று இன்றைய ஞாலகுரு சித்தர் கருவூறார் எடுத்துக் காட்டி வருவதைச் சான்றாகக் கொள்ளலாம். அதாவது தமிழ் மொழியிலிருந்து பிறந்ததே சமசுக்கிருதம். இதை விடுத்து சமசுக்கிருதம் என்ற இந்த மகள் ஈன்ற குழந்தையே இவளின் தாய் ஆகிய தமிழ் என்று கூறுவது அடிமுட்டாள்தனம்.

    ‘சத்தி நீ பாதம்’ என்று திருமூலர் குறிக்கும் முத்தி நிலை சத்தி + நிபாதம் என்று சமசுக்கிருதச் சொல்லாகப் பிரித்தே பொருள் சொல்லப் படுகிறது. ஆனால், இது 10வது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் போது “இவன் சத்தி நீ பாதம் என்ற முத்தி நிலையை அடைந்த பிறகே வடநாட்டுப் படையெழுச்சியில் ஈடுபட்டான்” என்று தமது அரச பாரம்பரியத்திலும் குருபாரம்பரியத்திலும் குறிக்கிறார்.

    சத்தி நீ => இனி நீ சத்தி வடிவாகவே மாறி விட்டாய்; சித்திகளைப் பெற்று நீ சத்தி நிலையாளனாகி விட்டாய்.

    பாதம் => இனி நீ, பிறரின் பாதம் போல் பணிவுடன்தான் செயல்படல் வேண்டும். யாருக்கும் சாபம் கொடுத்தல் கூடாது என்று சத்தி நீ பாத நிலை பெற்றவர்க்கு அறிவுரை, அருளுரை வழங்கப் படுகிறது குருபாரம்பரியத்தில்.

    எனவே, சித்தர்களின் தூய வாய்மைமிகு உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழியின் பழமையான சொற்களையும், சொற்றொடர்களையும் தெரியாத புரியாத…. தமிழ் வல்லார்கள் திருமூலரின் அழகிய ஆழமான பொருள் மிக்க அமுதத் தமிழ் சொற்களையும், சொற்றொடர்களையும், வடமொழிச் சொற்களாகவும், சொற்றொடர்களாகவும் தவறுதலாகக் கூறுகிறார்கள். இது தவறு. கண்டிக்கத் தக்கது, வருந்தத் தக்கது. முறையாகக் கற்று நிறையான தமிழ்ப் புலமை இல்லாதவர்களாக இதுபோல் எண்ணற்ற துரோக விரோதக் கருத்துக்களும் செயல்களும் தொடர்ந்து நிகழ்கின்றன. இவற்றைக் கண்டித்தேயாக வேண்டும்.

    குறிப்பு:- தமிழில் இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம் என்று மூன்று சொற்கள் உள்ளன.

    இலக்கு = குறிக்கோள், இலங்குதல் = ஒளிர்தல், விளங்குதல்;

    இலிங்கம் - ஆவி ஆன்மா உயிர் எந்த நிலையில் உள்ளன என்பதை விளக்கும் சின்னம், அடையாளம். ஆனால், அப்பாவி அறைகுறைத் தமிழ் வல்லார்கள் ‘லிங்கம்’ என்ற வடசொல்லே ‘இலிங்கம்’ என்று தமிழில் எழுதப் படுவதாகக் கூறுகிறார்கள். வெட்கம்! வெட்கம்! வெட்கம்! வேதனை! வேதனை! வேதனை! சோதனை! சோதனை! சோதனை!