“குருவழிக் காண்க! உணர்க! பயிலுக! அடைக! தேறுக! நிற்க! சேருக புரிக!… என்கிறார்களே! இது தேவையா? (“சத்சங்கம்” சமய வாழ்வுக்கு இன்றியமையாததா?)
அன்றாட வாழ்வின் கடமைகள், உறவுகள், உரிமைகள், வெற்றிகள், தோல்விகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள்….. முதலியவை மனிதனை ஆட்டிப் படைப்பதால் குருவின் துணையிருந்தால்தான் அனைத்தையும் சமாளித்தபடி அருளுலகச் செல்வங்களையும் சிறு சேமிப்புப் போல் (Small Savings) வாழ்நாள் முழுதும் சேர்த்து வாழ்வின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.
என்ற குருபாரம்பரிய வாசகங்களை நினைத்திடுக. குருவுக்காக இழக்கப் போவது தமது பாவமும், துன்பமும், கவலையும்தான்… குருவோடு இரண்டறக் கலப்பதே அனைத்துச் சத்திகளையும் சித்திகளையும் முத்திகளையும் தரும்.