Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • உருவ வழிபாடு.
  • உருவ வழிபாடு.

    உருவ வழிபாடு.

    “உருவ வழிபாடு உயர்ந்த பக்குவ நிலையைத் தராது. மிகச் சாதாரண மனிதர்களுக்குத்தான் உருவ வழிபாடு தேவை. ஞானிகளுக்கு உருவ வழிபாடு தேவையில்லை…..” என்ற கருத்துப் போக்குச் சரிதானா’ பயனுடையதா?

    இந்த நாட்டில் இந்துமதத்தின் தந்தையாக, தாயாக, சிற்பியாக, ஆரம்பமாக, உயிராக… இருக்கின்ற சித்தர் நெறியைத் தவறான ஆரியமாயைக் கருத்துக்கள் மறைத்தும், குறைத்தும், ஒதுக்கியும், வெறுத்தும், மறுத்தும்… தொடர்ந்து செயல்பட்டதன் விளைவுதான் உருவ வழிபாட்டுக்கு எதிராகப் பிறந்துள்ள கருத்துக்கள். உருவ வழிபாட்டால்தான் பத்தி, சத்தி, சித்தி, முத்தி நிலைகளில் தேர்ச்சி பெற முடியும்! முடியும்! முடியும்!

    அருள் அணுக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள அணைக்கட்டுக்களே உருவங்கள். அவை தத்துவ விளக்கங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கலைக் கருவூலங்கள், அருள்நீர்த் துறையின் இறங்கு துறைகள். உணர்க!